Search This Blog

தேசிய கடல்சார் தினம்: (National Maritime Day)

ஏபரல் 5:

தேசிய கடல்சார் தினம்: (National Maritime Day)
 ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 5 ஆம் தேதி தேசிய கடல்சார் தினம்
கொண்டாடப்படுகிறது. கடந்த 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி மும்பை
துறைமுகத்தில் இருந்து, முதல் முதலாக எஸ்.எஸ்.ராயல்டி என்ற இந்திய சரக்கு
கப்பல், லண்டனுக்கு கடல் வணிகம் தொடர்பாக பயணம் செய்தது. அத்தினத்தின்
நினைவாக தேசிய கடல்சார் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா சுமார்
5,560 கி.மீ. நீளம் கொண்ட கடற்கரையைக் கொண்டிருக்கிறது. நாட்டின் அயல்
நாட்டு வர்த்தகத்தில் சுமார் 90மூ இந்தக்கடற்கரை ஓரங்களில் அமைந்துள்ள
150 துறைமுகங்கள் வழியாகத்தான் நடந்து வருகிறது. உலகக் கப்பல் வணிகத்தில்
இந்தியா 15ஆம் இடத்தில் இருக்கிறது. நாட்டில் உள்ள சுமார் 50 கப்பல்
கழகங்களில் 20 உள்நாட்டுக் கடற்கரை வணிகத்திலும், 30 சர்வதேச
வர்த்தகத்திலும் ஈடுபட்டுள்ளன. மத்திய அரசுக்கு சொந்தமான இந்தியக் கப்பல்
கழகத்திற்கு 150 கப்பல்கள் உள்ளன.



★இந்தியாவின் நான்காவது துணைப் பிரதமர் ஜெகசீவன்ராம் அவர்கள் 1908 ஆம்
ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி பிறந்தார்.
★உலகப் புகழ்பெற்ற ஆங்கில நாவல் ஆசிரியர் ஆர்தர் ஹெய்லி 1920 ஆம் ஆண்டு
ஏப்ரல் 5 ஆம் தேதி பிறந்தார்.
★1804 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி முதற்தடவையாக விண்கல் ஒன்று
வீழ்ந்ததுள்ளதாக ஸ்காட்லாந்தில் பதிவானது.
★1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி மகாத்மா காந்தி அரபிக் கடலின் குஜராத்
கடற்கரையோரப் பகுதியான தண்டியில் உப்புச் சட்டத்தை மீறி உப்பைக் கையிலே
அள்ளி எடுத்து வந்து தனது 241 மைல் நடைப் பபயணத்தை முடித்தார்.
★1879 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி பசிபிக் போர் ஆரம்பமானது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url