10th std - தமிழ் - சொல்லும் பொருளும் - பொருத்தமான பொருளை தேர்வு செய்தல் : பொதுத்தமிழ் - பகுதி - அ - இலக்கணம்
10 th - சொல்லும் பொருளும்
இரட்டூற மொழிதல்:-
1. துய்ப்பது - கற்பது, தருதல்
2. மேவலால் - பொருந்துதலால், பெறுதலால்
காற்றை வா!:-
3. மயலுறுத்து- மயங்கச்செய்
4. ப்ராண - ரஸம் - உயிர்வளி
5. லயத்துடன் - சீராக
முல்லைப்பாட்டு:-
6. நனந்தலை உலகம் - அகன்ற உலகம்
7. நேமி - வலம்புரிச்சங்கு
8. கோடு - மலை
9. கொடுஞ்செலவு - விரைவாகச் செல்லுதல்
10. நறுவீ- நறுமணமுடைய மலர்கள்
11. தூஉய் - தூவி
12. விரிச்சி - நற்சொல்
13. சுவல் - தோள்
காசிக்காண்டம்:-
14. அருகுறை - அருகில்
15. முகமன் - ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல்
சொற்கள்
மலைபடுகடாம்:-
16. அசைஇ - இளைப்பாறி
17. அல்கி - தங்கி
18. கடும்பு - சுற்றம்
19. நரலும் - ஒலிக்கும்
20. ஆரி - அருமை
21. படுகர் - பள்ளம்
22. வயிரியம் - கூத்தர்
23. வேவை - வெந்தது
24. இறடி - திசை
25. பொம்மல் - சோறு
பெருமாள் திருமொழி:
26. சுடினும் - சுட்டாலும்
27. மாளாத - தீராத
28. மாயம் - விளையாட்டு
பரிபாடல்:
29. விசும்பு - வானம்
30. ஊழி - யுகம்
31. ஊழ - முறை
32. தண்பெயல் - குளிர்ந்த மழை
33. ஆர்தருபு - வெள்ளததில் மூழ்கிக் கிடந்த
34. பீடு - சிறப்பு
35. ஈண்டி - செறிந்து திரண்டு
திருவிளையாடற் புராணம்:
36. கேள்வியினான் - நூல் வல்லான்
37. கேண்மையினான் - நட்பினன்
38. தார் - மாலை
39. முடி - தலை
40. முனிவு - சினம்
41. அகத்து உவகை - மனமகிழ்ச்சி
42. தமர் - உறவினர்
43. நீபவனம் - கடம்பவனம்
44. மீனவன் - பாண்டிய.மன்னன்
45. கவரி - சாமரை ( கவரிமாவின் முடியில் செய்த விசிறியாகிய
அரசச் சின்னம்)
46. நுவன்ற - சொல்லிய
47. என்னா - அசைச் சொல்
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
48. பண்டி - வயிறு
49. அசும்பிய - ஒளிவீசுகிற
50. முச்சி - தலையுச்சிக் கொண்டை
சிலப்பதிகாரம்
51. சுண்ணம் - நறுமணப்பொடி,
52. காருகர் - நெய்பவர் சாலியர்),
53. தூசு - பட்டு
54. துகிர் - பவளம்
55. வெறுக்கை - செல்வம்
56. நொடை - விலை
57. பாசவர் - வெற்றிலை விற்போர்
58. இசுநர் - எண்ணெய் விற்போர்
59. மண்ணுள் வினைஞர் - ஓவியர்
60. மண்ணீட்டாளர் - சிற்பி
61. கிழி - துணி
தேம்பாவணி
62. சேக்கை - படுக்கை
63. யாக்கை - உடல்
64. பிணித்து - கட்டி
65. வாய்ந்த - பயனுள்ள
66. இளங்கூழ் - இளம்பயிர்
67. தயங்கி - அசைந்து
68. காய்ந்தேன் - வருந்தினேன்
69. கொம்பு - கிளை
70. புழை - துளை
71. கான் - காடு
72. தேம்ப - வாட
73. அசும்பு - நிலம்
74. உய்முறை - வாழும் வழி
75. ஓர்ந்து - நினைத்து
76. கடிந்து - விலக்கி
77. உவமணி - மணமலர்
78. படலை - மாலை
79. துணர் - மலர்கள்