Search This Blog

9th std - தமிழ் - சொல்லும் பொருளும் - பொருத்தமான பொருளை தேர்வு செய்தல் : பொதுத்தமிழ் - பகுதி - அ - இலக்கணம் -

9th - சொல்லும்‌ பொருளும்‌

தமிழ்விடு தூது:
 1. குறம்‌, பள்ளு - சிற்றிலக்கிய வகைகள்‌
2. மூன்றினம்‌ - துறை, தாழிசை, விருத்தம்‌
3. சிந்தாமணி - சீவகசிந்தாமணி, சிதறாமணி
4. சிந்து - ஒருவகை இசைப்பாடல்‌

5. முக்குணம்‌ - மூன்று குணங்கள்‌:
 (சமத்துவம்‌ - அமைதி, மேன்மை.
இராசசம்‌ - போர்‌, தீவிரமான செயல்‌.
தாமசம்‌ - சோம்பல்‌, தாழ்மை)

6. பத்துக்குணம்‌ - செறிவு, சமநிலை முதிய பத்துக்குண அணிகள்

7. வண்ணங்கள்‌ ஐந்து - வெள்ளை, சிவப்பு, கருப்பு,மஞ்சள்‌, பச்சை
8. வண்ணம்‌ நூறு - குறில்‌, அகவல்‌, தூங்கிசை வண்ணம்‌ முதலாக இடை மெல்லிசை வண்ணம்‌ ஈறாக. நூறு.

9. ஊனரசம்‌ - குறையுடைய சுவை

10. நவரசம்‌ - விரம்‌, அச்சம்‌, இழிப்பு, வியப்பு, காமம்‌, அவலம்‌, கோபம்‌,நகை, சமநிலை

11. வனப்பு - அழகு, அம்மை, தொன்மை, தோல்‌, விருந்து, இயைபு, பலன்‌, இழைபு


பட்டமரம்‌:

12. குந்த - உட்கார

13. கந்தம்‌ - மணம்‌

14. மிசை - மேல்‌

15. விசனம்‌ - கவலை

16. எழில்‌ - அழகு

17. துயர்‌ - துன்பம்‌

18. இற்று - அழிந்து (இத்துப்‌ போச்சு கொச்சை வழக்கு)

19. ஓலம்‌ - அலறல்‌

பெரியபுராணம்‌ : 

20. மா - வண்டு

21 மது - தேன்‌

22. வாவி - பொய்கை

23. வளர்‌ முதல்‌ - நெற்பயிர்‌

24. தரளம்‌ - முத்து

25. பணிலம்‌ - சங்கு

26. வரம்பு - வரப்பு

27. கழை - கரும்பு

28. கா- சோலை

29. குழை - சிறு கிளை

30. அரும்பு - மலர்‌ மொட்டு

31. மாடு - பக்கம்‌

32. நெருங்கு வளை - நெருங்குகின்ற சங்குகள்‌
33. கோடு - குளக்கரை

34. ஆடும்‌ - நீராடும்‌

35. மேதி - எருமை

36. துதைந்து எழும்‌ - கலக்கி எழும்‌
37. கன்னி வாளை - இளமையான வாளைமின்‌.
38. சூடு - நெல்‌ அரிக்கட்டு

39. சுரிவளை - சங்கு

40. வேரி - தேன்‌

41. பகடு - எருமைக்கடா

42. பாண்டில்‌ - வட்டம்‌

43. சிமயம்‌ - மலையுச்சி

44. நாளிகேரம்‌ - தென்னை

45. நரந்தம்‌ - நாரத்தை

46. கோளி - அரசமரம்‌

47. சாலம்‌ - ஆச்சா மரம்‌

48. தமாலம்‌ - பச்சிலை மரங்கள்‌

49. இரும்போந்து - பருத்த பனைமரம்‌
50. சந்து - சந்தன மரம்‌

51. நாகம்‌ - நாகமரம்‌

52. காஞ்சி - ஆற்றுப்பூவரசு

புறநானூறு:

53. யாக்கை - உடம்பு

54. புணரியோர்‌ - தந்தவர்‌

55. புன்புலம்‌ - புல்லிய நிலம்‌

56. தாட்கு - முயற்சி, ஆளுமை

57. தள்ளாதோர்‌ இவண்‌ தள்ளா தோரே தள்ளாதோர்‌ -
குறைவில்லாது நீர்நிலை அமைப்பவர்கள்‌ குறைவில்லாத
புகழுடையவர்களாக விளங்குவார்கள்‌

மணிமேகலை:
58. சமயக்‌ கணக்கர்‌ - சமயத்‌ தத்துவவாதிகள்‌
59. பாடைமாக்கள்‌ - பல மொழிபேசும்‌ மக்கள்‌, குழிஇஒன்றுகூடி
60. தோம்‌ - குற்றம்‌
61. கோட்டி - மன்றம்‌
62. பொலம்‌ - பொன்‌
63. வேதிகை - திண்ணை
64. தூணம்‌ - தூண்‌
65. தாமம்‌ - மாலை
66. கதலிகைக்‌ கொடி -சிறு சிறு கொடியாகப்‌ பல கொடிகள்‌ கட்டியது,
67. காமூன்று கொடி - கொம்புகளில்‌ கட்டும்‌ கொடி
68. விலோதம்‌ - துணியாலான கொடி
69. வசி - மழை
70. செற்றம்‌ - சினம்‌
71. கலாம்‌ - போர்‌
72. துருத்தி - ஆற்றிடைக்குறை (ஆற்றின்‌ நடுவே இருக்கும்‌
மணல்திட்டு).

குடும்ப விளக்கு:
73. களர்நிலம்‌ - உவர்நிலம்‌,
74. நவிலல்‌ - சொல்‌
75. வையம்‌ - உலகம்‌
76. மாக்கடல்‌ - பெரிய கடல்‌
77. இயற்றுக - செய்க மின்னாளை - மின்னலைப்‌ போன்றவளை
78. மின்னாள்‌ - ஒளிரமாட்டாள்‌
79. தணல்‌ - நெருப்பு
80. தாழி - சமைக்கும்‌ கலன்‌
81. அணித்து - அருகில்‌
82. தவிர்க்கஒணா - தவிர்க்க இயலாத
83. யாண்டும்‌ - எப்பொழுதும்‌

சிறுபஞ்சமூலம்‌:
84. மூவாது - முதுமை அடையாமல்‌
85. நாறுவ - முளைப்ப
86. தாவா - கெடாதிருத்தல்‌
87. மைவனம்‌ - மலைநெல்‌
88. முருகியம்‌ - குறிஞ்சிப்பறை
89. பூஞ்சினை-பூக்களை உடைய கிளை
90. சிறை - இறகு
91. சாந்தம்‌ - சந்தனம்‌
92. பூவை- நாகணவாய்ப்‌ பறவை
93. பொலம்‌- அழகு

இராவண காவியம்‌:
94. கடறு - காடு
95. முக்குழல்‌-கொன்றை, ஆம்பல்‌, மூங்கில்‌ ஆகியவற்றால்‌ ஆன குழல்கள்‌;
96. பொலி - தானியக்குவியல்‌
97. உழை - ஒரு வகை மான்‌. 
கல்‌ - மலை 
முருகு - தேன்‌, மணம்‌,
அழகு மல்லல்‌- வளம்‌
98. செறு- வயல்‌
99. கரிக்குருத்து - யானைத்தந்தம்‌
100. போர்‌- வைக்கோற்போர்‌
101. புரைதப- குற்றமின்றி
102. தும்பி- ஒருவகை வண்டு
103. துவரை-பவளம்‌
104. மரை - தாமரை மலர்‌
105. விசும்பு- வானம்‌
106. மதியம்‌-நிலவு

நாச்சியார்‌ திருமொழி:

107. தீபம்‌ - விளக்கு
108. சதிர்‌ - நடனம்‌
109. தாமம்‌ - மாலை

சீவக சிந்தாமணி

110. தெங்கு - தேங்காய்‌
111. இசை - புகழ்‌

112. வருக்கை - பலாப்பழம்‌
113. நெற்றி - உச்சி
114. மால்வரை - பெரியமலை
115. மடுத்து - பாய்ந்து
116. கொழுநிதி - திரண்ட நிதி
117. மருபபு - கொம்பு

118. வெறி - மணம்‌;

119. கழனி - வயல்‌

120. செறி - சிறந்த

121. இரிய - ஓட

122. அடிசில்‌ - சோறு

123. மடிவு - சோம்பல்‌
124. கொடியன்னார்‌ - மகளிர்‌
125. நற்றவம்‌ - பெருந்தவம்‌
126. வட்டம்‌ - எல்லை
127. வெற்றம்‌ - வெற்றி

முத்தொள்ளாயிரம்‌
128. அள்ளல்‌ - சேறு
129. பழனம்‌ - நீர்‌ மிக்க வயல்‌
130. வெரீஇ - அஞ்சி
131. பார்பபு - குஞ்சு
132. “நாவலோ - நாள்‌ வாழ்க என்பது போன்ற வாழ்த்து
133. இசைத்தால்‌ - ஆரவாரத்தோடு கூவுதல்‌
134. நந்து - சங்கு
135. கமுகு - பாக்கு
136. முத்தம்‌ - முத்து
மதுரைக்காஞ்சி
137. புரிசை - மதில்‌
138. அணங்கு - தெய்வம்‌
139. சில்காற்று - தென்றல்‌
140. புழை - சாளரம்‌
141. மாகால்‌ - பெருங்காற்று
142. முந்நீர்‌ - கடல்‌
143. பணை - முரசு
144. கயம்‌ - நீர்நிலை
145. ஓவு - ஓவியம்‌
146. நியமம்‌ - அங்காடி.

ஒளியின்‌ அழைப்பு
147. விண்‌ - வானம்‌
148. ரவி - கதிரவன்‌
149. கமுகு - பாக்கு

யசோதர. காவியம்‌

150. அறம்‌ - நற்செயல்‌

151. வெகுளி - சினம்‌

152. ஞானம்‌ - அறிவு

153. விரதம்‌ - மேற்கொண்ட நன்னெறி
குறுந்தொகை

154. நசை - விருப்பம்‌

155. நல்கல்‌ - வழங்குதல்‌

156. பிடி - பெண்யானை

157. வேழம்‌ - ஆண்யானை

158. யா - ஒரு வகை மரம்‌, பாலை நிலத்தில்‌ வளர்வது

159. பொளிக்கும்‌ - உரிக்கும்‌

160. ஆறு - வழி

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url