Search This Blog

பாரதிதாசன்‌ Bharathidasan 6th to 12th new and old bookk

பாரதிதாசன்‌ 
புதிய புத்தகம்

6th இன்பத்தமிழ்

  தமிழுக்கும்‌ அமுசென்றுபேற்‌! - அந்தத்‌

தமிழ்‌ இன்பத்‌ தமிழ்‌எங்கள்‌ உயிருக்கு நேர்‌! 

தமிழுக்கு நிலவன்று பேர்‌! - இன்பத்‌

தமிழ்‌ எங்கள்‌ சமுகத்கின்‌ விளைவக்கு நீர்‌! 

தமிழுக்கு மணமென்று பேர்‌! - இன்பத்‌

தமிழ்‌ எங்கள்‌ வாழ்வுக்கு நிறாமித்த ஊர்‌! 

கமிழ்‌ எங்கள்‌ இளமைக்குப்‌ பால்‌! - இன்பத்‌

குமிழ்‌ நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்‌!

தமிழ்‌ எங்கள்‌ உயர்வுக்கு வான்‌! - இன்பத்‌

குமிழ்‌ எங்கள்‌ அசகிக்குச்‌ சுடர்கந்த தேன்‌!

தமிழ்‌ எங்கள்‌ அறிவுக்குத்‌ தோள்‌! - இன்பத்‌

தமிழ்‌ எங்கள்‌ கவிதைக்கு வயிரத்தின்‌ வாள்‌!

- பாரதிதாசன்‌


சொல்லும்‌ பொருளும்‌

நிருமித்த - உருவாக்கிய விளைவு - வளர்ச்சி
சமூகம்‌ - மக்கள்‌ குழு அசதி - சோர்வு

பாடலின்‌ பொருள்‌

* தமிழுக்கு அமுது என்று பெயர்‌. இன்பம்‌ தரும்‌ அந்தத்‌ தமிழ்‌ எங்கள்‌ உயிருக்கு
இணையானது.

*தமிழுக்கு நிலவு என்று பெயர்‌. இன்பத்தமிழ்‌ எங்கள்‌ சமூக வளர்ச்சிக்கு அடிப்படையான நீர்‌ போன்றது.

*தமிழுக்கு மணம்‌ என்று பெயர்‌. அது எங்கள்‌ வாழ்விற்காகவே உருவாக்கப்பட்ட ஊர்‌ ஆகும்‌.

* தமிழ்‌ எங்கள்‌ இளமைக்குக்‌ காரணமான பால்‌ போன்றது. நல்ல புகழ்மிகுந்த புலவர்களுக்குக்‌ கூர்மையான வேல்‌ போன்ற கருவியாகும்‌.

* தமிழ்‌ எங்கள்‌ உயர்விற்கு எல்லையாகிய வானம்‌ போன்றது. இன்பத்தமிழ்‌ எங்கள்‌
சோர்வை நீக்கி ஒளிரச்‌ செய்யும்‌ தேன்‌ போன்றது.

* தமிழ்‌ எங்கள்‌ அறிவுக்குத்‌ துணை கொடுக்கும்‌ தோள்‌ போன்றது. தமிழ்‌ எங்கள்‌
கவிதைக்கு வைரம்‌ போன்ற உறுதி மிக்க வாள்‌ ஆகும்‌.

நூல்‌ வளி:

* பாரதிதாசனின்‌ இயற்பயர்‌ சுப்புரத்தினம்‌.

* பாரதியாரின்‌ கவிதைகள்‌ மீது கொண்ட பற்றின்‌ காரணமாகத்‌ தம்‌ பெயரைப்‌ பாரதிதாசன்‌ என மாற்றிக்‌ கொண்டார்‌.

*  தம்‌ கவிதைகளில்‌ ஸெண்கல்வி, கைம்‌ஸபண்‌ மறுமணம்‌, பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளைப்‌
பாடுவாொருளாகப்‌ பாடியுள்ளார்‌.

*  எனவே, இவர்‌ புரட்சிக்கவி என்று போற்றப்பருகிறார்‌. இவர்‌ பாவேந்தர்‌ என்றும்‌ சிறப்பிக்கப்பருகிறார்‌.

* இப்பாடல்‌, 'பாரதிதாசன்‌ கவிதைகள்‌' என்ற நூலில்‌ 'தமிழ்‌' என்னும்‌ தலைப்பின்கீழ்‌ இடம்பெற்றுள்ளது.
-------------------------------------

7th இன்பத்தமிழ்க்‌ கல்‌வி

74 இன்பத்தமிழ்க்‌ கல்வி (பாரதிதாசன்‌)

1. பாரதிதாசன்‌ __________ விருது பெற்ற நூல்‌ பிசிராந்தையார்‌?
 சாகித்ய அகாடமி

2. __________ பாரதிதாசன்‌ கவிதையாக எழுதச்‌ சொன்னார்‌?
பெண்கள்‌ அன்பினைக்‌

3. வீரர்களின்‌ தோள்களுக்கு நிகராகப்‌ பாரதிதாசன்‌ கூறுவது? மலை

4. __________ பசுமையான தோகைகளை உடையது? மயில்‌

5. பெண்களுக்கு நிகராகப்‌ பாரதிதாசன்‌ கூறுவது ____=___= ? மயில்‌

6. பாரதிதாசனின்‌ மனத்தைக்‌ கவர முயன்ற இயற்கைப்‌ பொருள்கள்‌ யாவை? வானம்‌,
நீரோடை, தாமரை, காடு, வயல்‌, மேகம்‌, தென்றல்‌, மயில்‌, அன்னம்‌, கதிரவன்‌

7. என்னை கவிதையாக எழுதுக என்று பாரதிதாசனிடம்‌ முதலில்‌ கூறியது எது? வானம்‌
தன்னைக்‌ கவிதையாக எழுதுக என்று பாரதிதாசனிடம்‌ முதலில்‌ கூறியது.

8. பாரதிதாசனிடம்‌ கவி ஓவியமாகத்‌ தங்களைத்‌ தீட்டுமாறு கூறியவை எவை? நீரோடை,
தாமரை மலர்கள்‌

9. பாரதிதாசன்‌ வேல்‌ ஏந்திய வீரர்கள்‌ எதனை எழுதுமாறு வேண்டினர்‌? பாரதிதாசன்‌
வேல்‌ ஏந்திய வீரர்கள்‌ மலை போன்ற தங்களின்‌ தோள்களின்‌ அழகை எழுதுமாறு
வேண்டினர்‌

10. பாரதிதாசன்‌ இயற்றியுள்ள நூல்கள்‌ யாவை? குடும்ப விளக்கு, இருண்ட வீடு,
தமிழியக்கம்‌, பாண்டியன்‌ பரிசு, அழகின்‌ சிரிப்பு

11. தமிழ்‌ மொழிக்கல்வி பயில்வதால்‌ உண்டாகும்‌ நன்மைகள்‌ எவையெனப்‌ பாரதிதாசன்‌
குறிப்பிடுகிறார்‌?
1. தமிழ்நாட்டு மக்கள்‌ அறியாமை தூக்கம்‌ களையும்‌
2. வாழ்வின்‌ துன்பங்கள்‌ நீங்கும்‌
3.  நஞ்சில்‌ தூய்மை உண்டாகும்‌. வீரம்‌ வரும்‌

* பாரதிதாசன்‌ குறிப்பு வரைக

* பாரதிதாசனின்‌ இயற்பெயர்‌ சுப்புரத்தினம்‌

*  கவிஞர்‌, இதழாளர்‌, தமிழாசிரியர்‌ என்ற பன்முக ஆற்றல்‌ கொண்டவர்‌

*  கதை, கவிதை, கட்டுரை, நாடகம்‌ ஆகியவற்றைப்‌ படைப்பதில்‌ வல்லவர்‌

*  பாண்டியன்‌ பரிசு, அழகின்‌ சிரிப்பு, இசையமுது, இருண்ட வீடு, குடும்ப விளக்கு,
கண்ணகி புரட்சிக்‌ காப்பியம்‌ உள்பட பல நூல்களை எழுதியுள்ளார்‌.

* இவர்‌ எழுதிய பிசிராந்தையார்‌ என்னும்‌ நாடகநூலக்குச்‌ சாகித்திய அகாடமி விருது அளிக்கப்பட்டது.

ஏடெடுத்தேன்‌ கவி ஒன்று வரைந்திட

என்னை எழுதென்று சொன்னது வான்‌

ஓடையும்‌ தாமரைப்‌ பூக்களும்‌ தங்களின்‌

ஓவியத்‌ தீட்டுக என்றுரைக்கும்‌

காடும்‌ கழனியும்‌ காற்முகிலும்‌ வந்து

கண்ணைக்‌ கவர்ந்திட எத்தனிக்கும்‌

ஆடும்‌ மயில்‌ நிகர்‌ எபபண்களல்லாம்‌ உயிர்‌

அன்பினைச்‌ சித்திரம்‌ செய்க என்றார்‌

சோலைக்‌ குளிர்தறா தென்றல்‌ வரும்பசுந்‌

தோகை மயில்வரும்‌ அன்னம்‌ வரும்‌

மாலைப்‌ பொழுதினில்‌ மேற்றிசையில்‌ விழும்‌
மாணிக்கப்‌ பறிகி காட்சி தரும்‌

வேலைச்‌ சுமந்திகும்‌ வீரரின்‌ தோள்‌ உயர்‌

வெற்‌பென்று சொல்லி வரைக என்னும்‌

கோலங்கள்‌ யாவும்‌ மலை மலையாய்‌ வந்து

கூவின என்னை - இவற்றிடையே

இன்னலிலே தமிழ்‌ நாட்டிணிலேயுள்ள

என்தமிழ்‌ மக்கள்‌ துயின்றிருந்தார்‌

அன்னதோர்‌ காட்சி இரக்கமுண்டாக்கியென்‌

ஆவியில்‌ வந்து கலந்ததுவே

இன்பத்‌ தமிழ்க்‌ கல்வி யாவரும்‌ கற்றவர்‌

என்றுரைக்கும்‌ நிலை எய்தி விட்டால்

துன்பங்கள்‌ நீங்கும்‌ சுகம்‌ வரும்‌ நெஞ்சினில்‌

தூய்மை உண்டாகிடும்‌ வீரம்‌ வரும்‌ 

- பாரதிதாசன்‌


பாடலின்‌ பொருள்‌

கவிதை எழுத ஏடு ஒன்று எடுத்தேன்‌.
 என்னைக்‌ கவிதையாக எழுதுக என்று வானம்‌ கூறியது.
நீரோடையும்‌ தாமரை மலர்களும்‌ "எங்களைக்‌ கவி ஓவியமாகத்‌ தீட்டுக" என்றன.
காடும்‌ வயல்களும்‌ கருநிற மேகங்களும்‌ என்‌ கண்களைக்‌ கவர்ந்து, கவிதையில்‌ இடம்பெற முயன்றன.
 ஆடும்‌ மயில்‌ போன்ற பெண்கள்‌ "அன்பினைக்‌ கவிதையாக எழுதுக” என்றனர்‌.

சோலையின்‌ குளிர்ந்த தென்றல்‌ வந்தது. பசுமையான தோகையையுடைய மயில்‌ வந்தது.
அன்னம்‌ வந்தது.
 மாணிக்கம்‌ போல்‌ ஒளி வீசி மாலையில்‌ மேற்குத்‌ திசையில்‌ மறைகின்ற கதிரவனும்‌ வந்தான்‌.
 வேல்‌ ஏந்திய வீரர்கள்‌, "மலை போன்ற எங்களது தோள்களின்‌
அழகினை எழுதுங்கள்‌” என்றனர்‌. 

இவ்வாறு அழகிய காட்சிகள்‌ எல்லாம்‌ பெருந்திரளாக
வந்து தங்களைக்‌ கவிதையாக எழுதுமாறு கூறின.

ஆனால்‌, துன்பத்தில்‌ கிடக்கும்‌ என்‌ தமிழ்நாட்டு மக்கள்‌ அறியாமையில்‌ தூங்கிக்‌
கிடக்கிறார்கள்‌.
 அந்தக்‌ காட்சி என்‌ மனத்தில்‌ இரக்கத்தை உண்டாக்கி, என்‌ உயிரில்‌ வந்து கலந்து விட்டது.
 இத்துன்பம்‌ நீங்க அனைவரும்‌ இன்பத்தமிழ்க்‌ கல்வியைக்‌ கற்றவர்கள்‌ என்னும்‌ நிலை ஏற்பட வேண்டும்‌.
 அந்நிலை ஏற்பட்டால்‌ வாழ்வில்‌ துன்பங்கள்‌ நீங்கிடும்‌.

நெஞ்சில்‌ தூய்மை உண்டாகிடும்‌. வீரம்‌ வரும்‌.

நூல்‌  வெளி
கவிஞர்‌, இதழாளர்‌, தமிழாசிரியர்‌ எனப்‌ பன்முக
ஆற்றல்‌ கொண்டவர்‌ பாரதிதாசன்‌.
இவர்‌ கவிதை,
து கதை, கட்ருரை, நாடகம்‌ ஆகியவற்றைப்‌ படைப்பதில்‌
வல்லவர்‌.
 பாண்டியன்‌ பறிசு, அழகின்‌ சிரிப்பு, இசையமுது, இருண்ட
வீடு, குடும்ப விளக்கு, கண்ணகி புரட்சிக்‌ காப்பியம்‌ உள்ளிட்ட பல
நூல்களை எழுதியுள்ளார்‌.
 இவர்‌ எழுதிய பிசிராந்தையார்‌ என்னும்‌ நாடகநூலுக்குச்‌ சாகித்திய அகாடமி விருது அளிக்கப்பட்டது.



பாரதிதாசன்‌ கவிதைகள்‌ என்னும்‌ தொகுப்பிலிருந்து தமிழ்ப்பேறு என்னும்‌ தலைப்பில்‌ உள்ள
பாடல்‌ இங்குப்‌ பாடமாக வைக்கப்பட்டுள்ளது.


9th குடும்ப விளக்கு (பாரதிதாசன்‌)

1. பாவேந்தரின்‌ பிசிராந்தையார்‌ நாடக நூலுக்குச்‌ விருது வழங்கப்பட்டுள்ளது?
சாகித்திய அகாதெமி

2. கல்வி இல்லாத பெண்கள்‌ போன்றவர்கள்‌? களர்நிலம்‌

3. குடும்ப விளக்கு ஆகும்‌? மறுமலர்ச்சி இலக்கியம்‌

4. குடும்ப விளக்கு நூல்‌ பகுதிகளாப்‌ பிரிக்கப்பட்டுள்ளது?  ஐந்து
5.________என்பது பொருள்‌ மற்றும்‌ வீர்த்தால்‌ அமைவதன்று? வாழ்க்கை

6. மறுமலர்ச்சி இலக்கியங்கள்‌ எதனால்‌ தோன்றியவை? புதுமைக்‌ கருத்துகளை இயம்பும்‌
வகையில்‌ இருபதாம்‌ நூற்றாண்டில்‌ எழுந்தவையே மறுமலர்ச்சி இலக்கியங்கள்‌.

7. கல்வியறிவு இல்லாத பெண்களை பற்றி பாவேந்தர்‌ கூறுவதென்ன? கல்வியறிவு இல்லாத பெண்கள்‌ பண்படாத நிலத்தைப்‌ போன்றவர்கள்‌. அந்நிலத்தில்‌ புல்‌ முதலானவைதான்‌
விளையலாம்‌. நல்ல பயிர்‌ விளையாது. அறிவுடைய மக்கள்‌ உருவாகமாட்டார்கள்‌.

8. பாரதிதாசனின்‌ படைப்புகள்‌ யாவை? பாண்டியன்‌ பரிசு, அழகின்‌ சிரிப்பு, இருண்ட வீடு,
குடும்ப விளக்கு, தமிழியக்கம்‌

9. மறுமலர்ச்சி இலக்கியங்களின்‌ பாடுபொருள்கள்‌ சிலவற்றை கூறு.

இயற்கையைப்‌ போற்றுதல்‌, தமிழுணர்ச்சி ஊட்டுதல்‌, பகுத்தறிவு பரப்புதல்‌, பொதுவுடைமை பேசுதல்‌, விடுதலைக்குத்‌ தூண்டுதல்‌, பெண்கல்வி பெறுதல்‌

10. சிறுபஞ்சமூலம்‌ - அற இலக்கியம்‌

 
11. குடும்ப விளக்கு - தற்கால இலக்கியம்‌.


12. சீவகசிந்தா மணி - காப்பிய இலக்கியம்‌
13. குறுந்தொகை - சங்க இலக்கியம்‌

14. பாரதிதாசன்‌ - சிறு குறிப்பு வரைக

 

1. பாரதிதாசனின்‌ இயற்பெயர்‌ கனக.சுப்புரத்தினம்‌.

2. இவர்‌ பாரதியின்‌ கவிதை மீதுகொண்ட ஈர்ப்பினால்‌ பாரதிதாசன்‌ என்று தம்பெயரை
மாற்றிக்‌ கொண்டார்‌.

3. பாண்டியன்‌ பரிசு, அழகின்‌ சிரிப்பு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, தமிழியக்கம்‌
உள்ளிட்டவை இவரது படைப்புகள்‌.

4. இவர்‌ இயற்றிய கவிதைகள்‌ அனைத்தும்‌ 'பாவேந்தர்‌ பாரதிதாசன்‌ கவிதைகள்‌' என்னும்‌ பெயரில்‌ தொகுக்கப்பட்டுள்ளன.

 5. இவரது பிசிராந்தையார்‌ நாடக நூலுக்குச்‌ சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது.

12. குடும்ப விளக்கு நூல்‌ பற்றிய சிறு குறிப்பு வரைக

1. பாரதிதாசன்‌ இயற்றிய நூல்களுள்‌ ஒன்று குடும்ப விளக்கு

* குடும்ப உறவுகள்‌ அன்பு என்னும்‌ நூலால்‌ பிணைந்துள்ளதை உணர்த்துகிறது;

*  கற்ற பெண்ணின்‌ குடும்பமே பல்கலைக்கழகமாக மிளிரும்‌ என்பதைக்‌ காட்டுகிறது

* குடும்பம்‌ தொடங்கி உலகினைப்‌ பேணுதல்வரை பெண்ணுக்குக்‌ கல்வி இன்றியமையாதது
என கூறும்‌ நூல்‌

*  இந்நூல்‌ ஐந்து பகுதிகளாகப்‌ பகுக்கப்பட்டுள்ளது.

 


1. கல்வி இல்லாத பெண்கள்‌
களர்நிலம்‌ அந்நிலத்தில்‌
புல்விளையுந்‌ திடலாம்‌ நல்ல
புதல்வர்கள்‌ விளைதல்‌ இல்லை
கல்வியை உடைய பெண்கள்‌
திருந்திய கழனி அங்கே
நல்லறிவு உடைய மக்கள்‌
விளைவது நவில வோநான்‌! - குடும்பவிளக்கு 
- பாரதிதாசன்‌

 

2. வானூர்தி செலுத்தல்‌ வைய
மாக்கடல்‌ முழுது மளத்தல்‌
ஆனஎச்‌ செயலும்‌ ஆண்பெண்‌
அனைவர்க்கும்‌ பொதுவே! இன்று
நானிலம்‌ ஆடவர்கள்‌
ஆணையால்‌ நலிவு அடைந்து
போனதால்‌ பெண்களுக்கு
விடுதலை போனது அன்றோ!
 - பாரதிதாசன்‌ - குடும்பவிளக்கு

3. இந்நாளில்‌ பெண்கட்கு எல்லாம்‌

ஏற்பட்ட பணியை நன்கு

பொன்னேபோல்‌ ஒருவகை யாலும்‌

விடுதலை பூணும்‌ செய்கை

இன்னொரு மலர்க்கை யாலும்‌

இயற்றுக! கல்வி இல்லா

மின்னாளை வாழ்வில்‌ என்றும்‌

மின்னாள்‌ என்றே உரைப்பேன்‌ 

- பாரதிதாசன்‌ - குடும்பவிளக்கு

4. சமைப்பதும்‌ வீட்டு வேலை

சலிப்பின்றிச்‌ செயலும்‌ பெண்கள்‌

தமக்கே ஆம்‌ என்று கூறல்‌

சரியில்லை : ஆடவர்கள்‌

நமக்கும்‌ அப்‌ பணிகள்‌ ஏற்கும்‌

என்றெண்ணும்‌ நன்னாள்‌ காண்போம்‌!

சமைப்பது தாழ்வா? இன்பம்‌

சமைக்கின்றார்‌ சமையல்‌ செய்வார்‌ 

- பாரதிதாசன்‌ - குடும்பவிளக்கு

5. உணவினை ஆக்கல்‌ மக்கட்கு!

உயிர்‌ ஆக்கல்‌ அன்றோ? வாழ்வு

பணத்தினால்‌ அன்று! வில்வாள்‌

படையினால்‌ காண்ப தன்று!

தணலினை அடுப்பில்‌ இட்டுத்‌

தாழியில்‌ சுவையை இட்டே

அணிந்திருந்‌ திட்டார்‌ உள்ளத்‌(து)

அன்பிட்ட உணவால்‌ வாழ்வோம்‌! 

- பாரதிதாசன்‌ - குடும்பவிளக்கு

6. சமைப்பது பெண்களுக்குத்‌

தவிர்க்கஒணாக்‌ கடமை என்றும்‌

சமைத்திடும்‌ தொழிலோ, நல்ல

தாய்மார்க்கே தக்கது என்றும்‌

தமிழ்த்திரு நாடு தன்னில்‌

இருக்குமோர்‌ சட்டந்‌ தன்னை

இமைப்‌ போதில்‌ நீக்கவேண்டில்‌


பெண்கல்வி வேண்டும்‌ யாண்டும்‌

 - பாரதிதாசன்‌ - குடும்பவிளக்கு

நூல்வெளி

குடும்ப உறவுகள்‌ அன்பு என்னும்‌ நூலால்‌ பிணைந்துள்ளதை உணர்த்துகிறது;

கற்ற பெண்ணின்‌ குடும்பமே பல்கலைக்கழகமாக மிளிரும்‌ என்பதைக்‌ காட்டுகிறது

குடும்பம்‌ தொடங்கி உலகினைப்‌ பேணுதல்வரை தன்‌ பணிகளைச்‌ செய்யும்‌ பெண்ணுக்குக்‌
கல்வி முதன்மையானது இன்றியமையாதது என கூறும்‌ நூல்‌

பாரதிதாசனின்‌ இயற்பெயர்‌ கனக.சுப்புரத்தினம்‌.

இவர்‌ பாரதியின்‌ கவிதை மீதுகொண்ட ஈர்ப்பினால்‌ பாரதிதாசன்‌ என்று தம்பெயரை மாற்றிக்‌ கொண்டார்‌.

பாண்டியன்‌ பரிசு, அழகின்‌ சிரிப்பு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, தமிழியக்கம்‌ உள்ளிட்டவை
இவரது படைப்புகள்‌.

இவர்‌ இயற்றிய கவிதைகள்‌ அனைத்தும்‌ 'பாவேந்தர்‌ பாரதிதாசன்‌ கவிதைகள்‌' என்னும்‌ பெயரில்‌ தொகுக்கப்பட்டுள்ளன.

இவரது பிசிராந்தையார்‌ நாடக நூலுக்குச்‌ சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது.

பாரதிதாசன்‌ இயற்றிய நூல்களுள்‌ ஒன்று குடும்ப விளக்கு

குடும்ப உறவுகள்‌ அன்பு என்னும்‌ நூலால்‌ பிணைந்துள்ளதை உணர்த்துகிறது:

இந்நூல்‌ ஐந்து பகுதிகளாகப்‌ பகுக்கப்பட்டுள்ளது.


11 புரட்சிக்கவி (பாரதிதாசனின்‌)

1. அழகும்‌ அறிவும்‌ இளமையும்‌ வாய்ந்தவன்‌ - யார்‌ யாரிடம்‌ கூறியது? அமைச்சர்‌ மன்னனிடம்‌

2. உழைப்பாளர்களின்‌ தோள்‌ வலிமையால்‌ விளைந்தன யாவை?

1. உழைப்பாளர்கள்‌ தங்கள்‌ தோள்‌ வலிமையால்‌ பாழ்நிலத்தைப்‌ பயன்படுத்திப்‌
புதுநிலமாக்கினர்‌.

2. அழகு நகர்களையும்‌, சிற்றார்களையும்‌ உருவாக்கினர்‌.

3. வரப்பெடுத்து வயல்களையும்‌, ஆற்றைத்‌ தேக்கி நீர்வளத்தையும்‌ பெருக்கி, உழுதுவிளைபொருள்களை உற்பத்தி செய்தனர்‌.

3. உயிர்‌ எமக்கு வெல்லமன்று எனக்‌ கூறியவர்‌ ______ ? இளவரசி அமுதவல்லி

4. சிரம்‌ அறுத்தல்‌ ______ பொழுதுபோக்கு? வேந்தனுக்கு

5. குடிகட்கெல்லாம்‌ ஆளுரிமையை பொதுவாக்க நினைத்தது ----- ? அமுதவல்லி

6. சாகித்திய அகாதெமி விருது பெற்ற பாரதிதாசனின்‌ நாடகம்‌ ________ ? பிசிராந்ததையர்‌

7. பாரதிதாசன்‌ நடத்திய இலக்கிய இதழின்‌ பெயர்‌ ? குயில்‌

8. பாரதிதாசன்‌ புரட்சிக்கவி எனக்‌ போற்றப்படக்‌ காரணம்‌ என்ன? தம்‌ கவிதைகளில்‌
தாய்மொழி, தமிழினம்‌, குடியாட்சி உரிமைகள்‌, சமூக சீர்த்திருத்தங்கள்‌ என்பன பற்றி, உரத்த சிந்தனைகளை வெளியிட்ட காரணத்தினால்‌ பாரதிதாசனைப்‌ புரட்சிக்கவி என போற்றப்பட்டார்‌

9. மக்களாட்சி அடிப்படைக்‌ கூறுகளாகப்‌ புரட்சிக்கவி கூறுவன யாவை? சுதந்திரம்‌, சமத்துவம்‌, சகோதரத்துவம்‌

10. பாரதிதாசன்‌ இயற்றி காப்பியங்கள்‌ யாவை? குடும்ப விளக்கு, பாண்டியன்‌ பரிசு, இருண்ட வீடு, சேர தாண்டவம்‌, பிசிராந்தையார்‌, அழகின்‌ சிரிப்பு

 

நூல்‌ வெளி:

* வடமொழியில்‌ எழுதப்பட்ட பீல்கணீயம்‌ என்னும்‌ காவியத்தைத்‌ தழுவி பாரதிதாசனால்‌ 1937-ல்‌
எழுதப்பட்டது புரட்சிக்கவி

* பாரதியின்‌ மீது கொண்ட பற்றின்‌ காரணமாகத்‌ கனக சுப்புரத்தினம்‌ என்னும்‌ தம்‌ பெயரை பாரதிதாசன்‌ என மாற்றிக்‌ கொண்டார்‌.

* மொழி, இனம்‌, குடியாட்சி உரிமைகள்‌ ஆகியவை பற்றித்‌ தம்‌ பாடல்களில்‌ உரக்க வெளிப்படுத்தியமையால்‌ புரட்சிக்‌ கவிஞர்‌ என்றும்‌ பாவேந்தர்‌ என்றும்‌ அழைக்கப்பட்டார்‌.

* பிரெஞ்சு மொழில்‌ அமைந்த தொழிலாளர்‌ நலச்சட்டத்தை தமிழ்‌ வடிவில்‌ தந்தார்‌.

* குடும்ப விளக்கு, பாண்டியன்‌ பரிசு, இருண்ட வீடு, சேர தாண்டவம்‌ ஆகிய காப்பியங்களையும்‌
எண்ணற்ற பாடல்களையும்‌ இயற்றியுள்ளார்‌.

* இவருடைய “பிசிராந்தையார்‌” நாடகத்திற்காக சாகித்திய அகாதெமி விரு வழங்கப்பட்டது.

* “வாழ்வினில்‌ செம்மையைச்‌ செய்பவள்‌ நீயே” என்ற இவரின்‌ தமிழ்‌ வாழ்த்துப்‌ பாடலை புதுவை அரசது தனது தமிழ்தாய்‌ வாழ்த்தாக ஏற்றுக்‌ கொண்டுள்ளது.

* தமிழக அரசு இவருடைய பெயரால்‌ திருச்சியில்‌ ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளது.


1. பட்டங்கள்‌ ஆள்வதும்‌ சட்டங்கள்‌ செய்வதும்‌
பாறினில்‌ பெண்கள்‌ நடத்த வந்தோம்‌ - பாரதி

2. மங்கையராய்ப்‌ பிறப்பதற்கே நல்ல மாதவம்‌
செய்திடல்‌ வேண்டுமம்மா.... - கவிமணி

3. பெண்‌எணில்‌ பேதை என்ற எண்ணம்‌
இந்த நாட்டில்‌ இருக்கும்‌ வரைக்கும்‌
உருப்படல்‌ என்பது சரிப்படாது - பாவேந்தர்‌
---------------------------    

இயல்‌ ஒன்று செய்யுள்‌

இசையமுது

மழையே மழையே வா வா - நல்ல
வானப்‌ புனலே வா வா - இவ்‌
வையத்‌ தமுதே வா வா

தகரப்‌ பந்தல்‌ தணதண வென்ன
  தாழும்‌ கூரை சளசள வென்ன
நகரப்‌ பெண்கள்‌ செப்புக்‌ குடங்கள்‌
    நன்றெங்‌ கும்கண கணகண வென்ன (மழையே மழையே ...)



ஏரிகுளங்கள்‌ வழியும்படி, நாடு
எங்கும்‌ இன்பம்‌ பொழியும்படி, பொடி

வாரித்தூவும்‌ பூவும்‌ காயும்‌
மரமும்‌ தழையும்‌ நனைந்திடும்படி (மழையே மழையே...)

தழையா வெப்பம்‌ தழைக்கவும்‌ மெய்‌
தாங்கா வெப்பம்‌ நீங்கவும்‌
உழுவார்‌ எல்லாம்‌ மலைபோல்‌ எருதை
ஓட்டிப்‌ பொன்னேர்‌ பூட்டவும்‌ * (மழையே மழையே...)

- புரட்சிக்கவிஞர்‌ பாரதிதாசன்‌


சொல்பொருள்‌

வானப்புனல்‌ - மழைநீர்‌; வையத்து அழுது - உலகின்‌ அமுதம்‌;
வையம்‌ - உலகம்‌; 
தகரப்பந்தல்‌ - தகரத்தால்‌ அமைக்கப்பட்ட
பந்தல்‌; 
பொடி - மகரந்தப்‌ பொடி; 
தழை - செடி; 
தழையா
வெப்பம்‌ - பெருகும்‌ வெப்பம்‌;
 குறையாத வெப்பம்‌ எனவும்‌
பொருள்‌ கொள்ளலாம்‌;
 தழைக்கவும்‌ - குறையவும்‌.

ஆசிரியர்‌ குறிப்பு

“புரட்சிக்கவிஞர்‌” எனவும்‌, 'பாவேந்தர்‌” எனவும்‌ புகழப்படுபவர்‌
| பாரதிதாசன்‌.
இவர்தம்‌ இயற்பெயர்‌ சுப்புரத்தினம்‌. இவர்‌
பாரதியின்‌ கவிதைமீது கொண்ட காதலால்‌, தம்முடைய
பெயரைப்‌ பாரதிதாசன்‌ என மாற்றிக்கொண்டார்‌.

 பாண்டியன்‌ பரிசு, அழகின்‌ சிரிப்பு, குடும்ப விளக்கு முதலியன இவர்தம்‌ கவிதை நூல்கள்‌. இவர்‌ வாழ்ந்த காலம்‌ 29. 04. 1891 முதல்‌ 21. 04.1964 வரை.

எங்கள்‌ தமிழ்‌

* இனிமைத்‌ தமிழ்மொழி எமது - எமக்கு
இன்பந்‌ தரும்படி வாய்த்தநல்‌ அமுது!
கனியைப்‌ பிழிந்திட்ட சாறு - எங்கள்‌
கதியில்‌ உயர்ந்திடயாம்‌ பெற்ற பேறு!
தனிமைச்‌ சுவையுள்ள சொல்லை - எங்கள்‌
தமிழினும்‌ வேறெங்கும்‌ யாங்கண்ட தில்லை!
நனியுண்டு நனியுண்டு காதல்‌ - தமிழ்‌
நாட்டினர்‌ யாவர்க்கு மேதமிழ்‌ மீதில்‌ (இனிமைத்‌)

தமிழ்‌ எங்கள்‌ உயிர்‌என்ப தாலே - வெல்லுந்‌
தரமுண்டு தமிழருக்‌ கிப்புவி மேலே
தமிழ்‌என்னில்‌ எம்முயிர்ப்‌ பொருளாம்‌ - இன்பத்‌
தமிழ்குன்று மேல்தமிழ்‌ நாடெங்கும்‌ இருளாம்‌
தமிழுண்டு தமிழ்மக்க ளுண்டு - இன்பத்‌
தமிழுக்கு நாளும்செய்‌ வோம்நல்ல தொண்டு
தமிழ்‌என்று தோள்தட்டி ஆடு - நல்ல
தமிழ்வெல்க வெல்க என்றே தினம்பாடு! ( இனிமைத்‌) *

- பாரதிதாசன்‌

சொற்பொருள்‌: 
கதி - துணை;
 பேறு - செல்வம்‌; 
நனி - மிகுதி ( மிக்க ); 
தரம்‌ - தகுதி;

புவி - உலகம்‌.

பொருள்‌:



இனிமை, இன்பம்‌, அமுது, கனிச்சாறெனத்‌ திகட்டும்‌ சுவைமிக்கது எம்‌தமிழ்‌. இத்தமிழ்ச்சொல்லினும்‌ சுவைமிக்க சொல்‌ வேறெங்கும்‌ இல்லை.

அச்சுவை மிக்க மொழியின்மீது தமிழ்‌ மக்களுக்குக்‌ காதல்‌ மிக உண்டு.
ஆதலால்‌, தமிழ்‌ எங்கள்‌ உயிரென்பதனாலே எவரையும்‌ வெல்லுந்திறமுண்டு இப்புவிமேலே.

எம்‌ தமிழ்‌ எங்கள்‌ விழியாதலால்‌ அதன்‌ ஒளி குன்றினால்‌ நாடே இருளில்‌ மூழ்கிவிடும்‌.

எனவே, தமிழிருக்கும்வரையே தமிழ்‌ மக்களும்‌ இருப்பர்‌.

 ஆதலால்‌, நாளும்‌ அதற்குத்‌
தொண்டுசெய்வோம்‌.

 நம்‌ வாழ்வு தமிழென்று தோள்தட்டி ஆடுவோம்‌; அது தரணியில்‌

நாளும்‌ வெற்றிபெறப்‌ பாடுபடுவோம்‌.

ஆசிரியர்‌ குறிப்பு
இயற்பெயர்‌ : சுப்புரத்தினம்‌
பாரதியார்மீது கொண்ட பற்றினால்‌ பாரதிதாசன்‌
எனத்‌ தன்‌ பெயரை மாற்றி அமைத்துக்கொண்டார்‌.

பெற்றோர்‌ : கனகசபை - இலக்குமியம்மாள்‌

கல்வி : தமிழ்‌, பிரெஞ்சு, ஆங்கிலம்‌ ஆகியவற்றில்‌ புலமை மிக்கவர்‌.

இயற்றியவை: குடும்ப விளக்கு,
பாண்டியன்‌ பரிசு,
சேரதாண்டவம்‌, இருண்ட வீடு, தமிழச்சியின்‌ கத்தி, பிசிராந்தையார்‌, குறிஞ்சித்‌ திட்டு, அழகின்‌ சிரிப்பு, தமிழியக்கம்‌ முதலியன.

காலம்‌ :  29.04.1891- 21,04.1964.

நூற்குறிப்பு : இப்பாடல்‌ பாரதிதாசன்‌ கவிதைகள்‌ என்னும்‌ கவிதைத்‌ தொகுதியில்‌ எங்கள்‌ தமிழ்‌ என்னும்‌
தலைப்பில்‌ இடம்பெற்றுள்ளது.

விழுதும்‌ வேரும்‌: 

தூலம்போல்‌ வளர்கி ளைக்கு

விழுதுகள்‌ தூண்கள்‌! தூண்கள்‌

ஆலினைச்‌ சுற்றி நிற்கும்‌

அருந்திறல்‌ மறவர்‌! வேரோ

வாலினைத்‌ தரையில்‌ வீழ்த்தி

மண்டிய பாம்பின்‌ கூட்டம்‌!

நீலவான்‌ மறைக்கும்‌ ஆல்தான்‌

ஒற்றைக்கால்‌ நெடிய பந்தல்‌! *

- பாரதிதாசன்‌

பொருள்‌: தூலம்போல்‌ வளர்ந்துள்ள ஆலங்கிளைக்கு விழுதுகள்‌ தூண்களாகத்‌ திகழ்கின்றன.
தூண்களெல்லாம்‌ ஆலமரத்தைச்‌ சுற்றி நிற்கும்‌ வீரர்களாகக்‌ காட்சி அளிக்கின்றன.
வேர்கள்‌ எல்லாம்‌
தரையில்‌ வாலை ஊன்றித்‌ தோன்றும்‌ பாம்புக்‌ கூட்டம்போல்‌ காணப்படுகின்றன. வானை மறைக்கும்‌ ஆலமரம்‌ ஒற்றைக்காலுடன்‌ விரிந்து பரந்த பந்தலாகத்‌ தோன்றுகின்றது.

சொற்பொருள்‌ : திறல்‌ - வலிமை; மறவர்‌ - வீரர்‌.


ஆசிரியர்‌ குறிப்பு
பெயர்‌ : பாரதிதாசன்‌
இயற்பெயர்‌ : சுப்புரத்தினம்‌
| பெற்றோர்‌ : கனகசபை - இலக்குமி
| ஊர்‌ : புதுச்சேரி
காலம்‌ : 29.04. 1891முதல்‌ 21. 04. 1964வரை
சிறப்புப்பெயர்கள்‌ : பாவேந்தர்‌, புரட்சிக்கவிஞர்‌

சிறப்பு : பாரதியாருடன்கொண்ட நெருங்கிய தொடர்பினால்‌ பாரதிதாசன்‌ எனத்‌ தன்பெயரை அமைத்துக்கொண்டார்‌. தந்தை பெரியாரின்‌ பகுத்தறிவுச்‌ சிந்தனைகளைக்‌ கவிதை
வடிவில்‌ தந்தவர்‌.

இயற்றிய நூல்கள்‌ : பாண்டியன்‌ பரிசு, குடும்ப விளக்கு, இருண்ட வீடு, அழகின்‌ சிரிப்பு, கண்ணகி புரட்சிக்‌ காப்பியம்‌, குறிஞ்சித்திட்டு, தமிழியக்கம்‌ முதலியன.
இங்கு இடம்பெற்றுள்ள பாடல்‌ அழகின்‌ சிரிப்பு
என்னும்‌ நூலில்‌ “விழுதும்‌ வேரும்‌” என்னும்‌ தலைப்பின்கீழ்‌ இடம்பெற்றுள்ளது.

தமிழ்‌ வளர்ச்சி

எளியநடை யில்தமிழ்நூல்‌ எழுதிடவும்‌ வேண்டும்‌

இலக்கணநூல்‌ புதிதாக இயற்றுதலும்‌ வேண்டும்‌

வெளியுலகில்‌ சிந்தனையில்‌ புதிதுபுதி தாக

விளைந்துள்ள எவற்றினுக்கும்‌ பெயர்களெலாங்‌ கண்டு

தெளிவுறுத்தும்‌ படங்களொடு சுவடியெலாம்‌ செய்து

செந்தமிழைச்‌ செழுந்தமிழாய்ச்‌ செய்வதுவும்‌ வேண்டும்‌

எளிமையினால்‌ ஒருதமிழன்‌ படிப்பில்லை யென்றால்‌

இங்குள்ள எல்லாரும்‌ நாணிடவும்‌ வேண்டும்‌.

* உலகியலின்‌ அடங்கலுக்கும்‌ துறைதோறும்‌ நூற்கள்‌

ஒருத்தர்தயை இல்லாமல்‌ ஊரறியும்‌ தமிழில்‌

சலசலென எவ்விடத்தும்‌ பாய்ச்சிவிட வேண்டும்‌

தமிழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும்‌

இலவசநூற்‌ கழகங்கள்‌ எவ்விடத்தும்‌ வேண்டும்‌

எங்கள்தமிழ்‌ உயர்வென்று நாம்சொல்லிச்‌ சொல்லித்‌

தலைமுறைகள்‌ பலகழித்தோம்‌; குறைகளைந்தோ மில்லை

தகத்தகாயத்‌ தமிழைத்‌ தாபிப்போம்‌ வாரீர்‌. *

- பாவேந்தர்‌ பாரதிதாசன்‌

 

பொருள்‌ : தமிழ்‌ நூல்களை எளிய நடையில்‌ எழுதுதல்வேண்டும்‌.
இலக்கண நூல்களைப்‌
புதிதாகப்‌ படைத்தல்வேண்டும்‌.
 உலகின்‌ புதிய ஆய்வுச்‌ சிந்தனைகளைத்‌ தமிழ்ப்படுத்தி
விளக்கப்‌ படங்களுடன்‌ நூல்களாக்கிச்‌ செந்தமிழைச்‌ செழுந்தமிழாய்ச்‌ செய்தல்‌
வேண்டும்‌.
 வறுமையினால்‌ தமிழன்‌ ஒருவன்‌ கல்லாத நிலை ஏற்படுமானால்‌,
இங்குள்ளோர்‌ நாணம்‌ அடைதல்வேண்டும்‌. 
பல்வேறு துறை நூல்களைப்‌ பிறர்‌ துணையின்றி எல்லாரும்‌ படித்தறிந்துகொள்ளும்‌ வகையில்‌, தமிழில்‌ வெளியிடல்வேண்டும்‌.

தமிழறிவை மதங்களுக்குள்‌ அடக்காமைவேண்டும்‌. இலவச நூல்நிலையங்கள்‌
ஊர்தோறும்‌ ஏற்படுத்தல்வேண்டும்‌.
 தமிழின்‌ பெருமைகளைக்‌ கூறுவதிலேயே
காலம்‌ கழித்தோம்‌; குறைகளை நீக்கிப்‌ புதுமைகளைப்‌ படைத்தோமில்லை; உலகின்‌
ஒளிமிக்க மொழியாகத்‌ தமிழை வளர்ப்போம்‌, வாரீர்‌.

சொற்பொருள்‌ : 
தெளிவுறுத்தும்‌ - விளக்கமாகக்‌ காட்டும்‌; 
சுவடி - நூல்‌; 
எளிமை - வறுமை;

நாணிடவும்‌ - வெட்கப்படவும்‌;

 உலகியலின்‌ அடங்கலுக்கும்‌ - வாழ்வியல்‌ முழுமைக்கும்‌;

தகத்தகாய - ஒளிமிகுந்த (சிறப்பு மிகுந்த என்னும்‌ பொருளில்‌ புதிய சொல்லாக்கத்தைக்‌ கவிஞர்‌ தந்துள்ளார்‌);

 சாய்க்காமை - அழிக்காமை;
 நூற்கழகங்கள்‌ - நூலகங்கள்‌;
 களைந்தோம்‌ - நீக்கி  னோம்‌;
தாபிப்போம்‌
 - நிலைநிறுத்துவோம்‌.

இலக்கணக்குறிப்பு : 
புதிது புதிது, சொல்லிச்‌ சொல்லி - அடுக்குத்தொடர்கள்‌;

 செந்தமிழ்‌ -
பண்புத்தொகை; 

சலசல - இரட்டைக்கிளவி.

பகுபத உறுப்பிலக்கணம்‌ :

 கழித்தோம்‌ - கழி - த்‌ ஈத்‌ * ஓம்‌. கழி - பகுதி;
த்‌ - சந்தி,
 த்‌ - இறந்தகால இடைநிலை,
 ஓம்‌ - தன்மைப்பன்மை வினைமுற்று விகுதி;

களைந்தோம்‌ - களை * த்‌ இரத்‌ ஓம்‌.
 களை - பகுதி, 
த்‌ - சந்தி,
 த்‌ - ந்‌ ஆனது
விகாரம்‌, 
த்‌ - இறந்தகால இடைநிலை, 
ஓம்‌ - தன்மைப்பன்மை வினைமுற்று விகுதி.

பிரித்தறிதல்‌ : வெளியுலகில்‌ - வெளி - உலகில்‌; செந்தமிழ்‌ - செம்மை தமிழ்‌;
ஊரறியும்‌ - ஊர - அறியும்‌; எவ்விடம்‌ - ௭ - இடம்‌.

ஆசிரியர்‌ குறிப்பு : பாவேந்தர்‌ பாரதிதாசனின்‌ இயற்பெயர்‌ சுப்புரத்தினம்‌.

இவர்‌, 1891ஆம்‌ ஆண்டு ஏப்பிரல்‌ 29ஆம்‌ நாள்‌ புதுவையில்‌ பிறந்தார்‌.

தந்தை கனகசபை, தாய்‌ இலக்குமி. பாரதியின்மேல்‌ கொண்ட பற்றால்‌
தம்பெயரைப்‌ பாரதிதாசன்‌ என மாற்றிக்கொண்டார்‌. 
இவர்‌ பாவேந்தர்‌,
புரட்சிக்கவிஞர்‌ ஆகிய சிறப்புப்பெயரால்‌ வழங்கப்படுகிறார்‌.

குடும்பவிளக்கு, இருண்ட வீடு, தமிழியக்கம்‌, பாண்டியன்‌ பரிசு, அழகின்‌ சிரிப்பு முதலியன இவர்தம்‌ படைப்புகளாம்‌. பாரதிதாசன்‌ பரம்பரை
என்றொரு கவிஞர்‌ பரம்பரையே அவர்‌ காலத்தில்‌ உருவானது.

 தமிழக  அரசு, பாவேந்தர்‌ படைப்புகளை நாட்டுடைமையாக்கியுள்ளது;
 ஆண்டு தோறும்‌ சிறந்த கவிஞர்களுக்குப்‌ பாவேந்தர்‌ விருது வழங்கி வருகிறது;
திருச்சிராப்பள்ளியில்‌ பாரதிதாசன்‌ பெயரில்‌ பல்கலைக்கழகம்‌ அமைத்துச்‌ சிறப்புச்‌ சேர்த்துள்ளது.


6. மறுமலர்ச்சிப்‌ பாடல்கள்‌

“பண்டைநலம்‌ புதுப்புலமை பழம்பெருமை அத்தனையும்‌ படைப்பாய்‌ இந்நாள்‌! தொண்டு
செய்வாய்‌ தமிழுக்குத்‌ துறைதோறுந்‌ துறைதோறுந்‌ துடித்தெழுந்தே” என்பார்‌ பாவேந்தர்‌.

பழமையின்‌ பெருமையை அடித்தளமாகவும்‌ துறைதோறும்‌ முகிழ்க்கும்‌ புதிய களங்களைப்‌
பாடுபொருளாகவும்‌ கொண்டு எழுந்தவைதாம்‌ மறுமலர்ச்சியிலக்கியங்களாகும்‌.
இவற்றைச்‌ சுவைபுதிது பொருள்புதிது அழியாதசோதிமிக்க நவகவிதை எனலாம்‌. இவை மானிடத்தின்‌
விழுப்பொருள்களையும்‌ அவலங்களையும்‌ புதிய நோக்குடன்‌ பார்க்கும்‌; புத்தம்‌ புதிய கலைகளைத்‌
திசைதோறும்‌ தேர்ந்து செந்தமிழுக்குச்‌ சேர்க்கும்‌.

புதிய அணுகுமுறைகள்‌, புத்தம்‌ புதிய கற்பனைகள்‌, படிமநோக்கு இவற்றையுடைய
இற்றைநாட்பாவலர்களால்‌ தமிழ்‌ இலக்கியம்‌ புதிய செழிப்பினைப்பெறும்‌ என்று நம்பலாம்‌.

இப்பாவலர்கள்‌ நமது மரபென்னும்‌ மண்ணுக்குள்‌ வேரூன்றியவர்கள்‌; புதுமையென்னும்‌
விண்ணுக்குக்‌ கிளை நீட்டுபவர்கள்‌. புதிய எழுச்சியையும்‌ விழிப்பையும்‌ அவாவுபவர்கள்‌. அவர்தம்‌
படைப்புகளிற்‌ சில இங்கே பாடப்பகுதியாகத்‌ தரப்பட்டுள்ளன.

புரட்சிக்‌ கவிஞர்‌ என்றும்‌ பாவேந்தர்‌ என்றும்‌ அறிஞர்‌ பெருமக்களாற்‌ பாராட்டப்‌ பெறுபவர்‌ பாரதிதாசன்‌. பாரதியார்‌ மீது கொண்ட அளவற்ற பற்றின்‌ காரணமாகச்‌ சுப்புரத்தினம்‌ என்ற
பெயரைப்‌ பாரதிதாசன்‌ என்று மாற்றிக்‌ கொண்டவர்‌.

29-04-1891-ல்‌ புதுச்சேரியில்‌ கனகசபை - இலக்குமியம்மாள்‌ என்பவருக்கு மகனாகப்‌
பிறந்தவர்‌. இளமையிலேயே பிரெஞ்சு மொழியிலும்‌ தமிழ்‌ மொழியிலும்‌ சிறந்த புலமை பெற்றவர்‌.

தமிழ்‌ மொழியிடத்தும்‌ தமிழ்‌ மக்களிடத்தும்‌ ஆராத அன்பு பூண்டவர்‌. தமிழ்‌ நாட்டின்‌
இரசூல்‌ கம்சதோவ்‌ என்று பாராட்டப்‌ பெறுபவர்‌, (இரசூல்‌ கம்சதோவ்‌ உருசிய நாட்டின்‌ மாக்கவிஞர்‌)

உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே' என்றும்‌ “இன்பத்‌ தமிழ்க்‌ கல்வி யாவரும்‌ கற்றவர்‌
என்றுரைக்கும்‌ நிலை எய்தி விட்டால்‌ துன்பங்கள்‌ நீங்கும்‌ சுகம்‌ வரும்‌ நெஞ்சினில்‌ தூய்மை உண்டாகிடும்‌ வீரம்‌ வரும்‌” என்று தமிழர்க்காகவும்‌ எழுதியவர்‌.

குடும்பவிளக்கு, பாண்டியன்‌ பரிசு, இருண்டவீடு, தமிழச்சியின்‌ கத்தி, சேரதாண்டவம்‌,
பிசிராந்தையார்‌, அழகின்‌ சிரிப்பு, குறிஞ்சித்திட்டு ஆகிய காப்பியங்களையும்‌ இறவாப்‌ புகழ்‌ பெற்ற எண்ணற்ற பாடல்களையும்‌ இயற்றியவர்‌. இவரியற்றிய பிசிராந்தையார்‌ நாடகம்‌ சாகித்திய
அகாதெமிப்‌ பரிசு பெற்றது.

“வாழ்வினில்‌ செம்மையைச்‌ செய்பவள்‌ நீயே” என்ற இவரின்‌ தமிழ்வாழ்த்துப்‌ பாடலைப்‌
புதுவை அரசு தனது தமிழ்த்தாய்‌ வாழ்த்தாக ஏற்றுக்கொண்டுள்ளது. தமிழக அரசு பாரதிதாசன்‌
பல்கலைக்‌ கழகம்‌ நிறுவி இவர்‌ புகழைப்‌ போற்றியுள்ளது.

குயில்‌ என்ற இலக்கிய இதழை நடத்திவந்த இந்தப்‌ புதுவைக்‌ குயில்‌ 21-4-1964 அன்று
இயற்கை யெய்தியது.

எந்நாளோ ?:

என்னருந்‌ தமிழ்நாட்‌ டின்கண்‌
எல்லோரும்‌ கல்வி கற்றுப்‌
பன்னருங்‌ கலைஞா னத்தால்‌
பராக்கிர மத்தால்‌, அன்பால்‌
உன்னத இமம௰லை போல்‌
ஓங்கிடும்‌ கீர்த்தி யெய்தி
இன்புற்றார்‌ என்று மற்றோர்‌
இயம்பக்‌ கேட்டிடல்‌ எந்நாளோ ! 1*

கைத்திறச்‌ சித்தி ரங்கள்‌
கணிதங்கள்‌ வான நூற்கள்‌
மெய்த்திற நூற்கள்‌ சிற்பம்‌
விஞ்ஞானம்‌ காவி யங்கள்‌
வைத்துள்ள தமிழர்‌ நூற்கள்‌
வையத்தின்‌ புதுமை என்னப்‌
புத்தகச்‌ சாலை எங்கும்‌
புதுக்குநாள்‌ எந்த நாளோ ? 2

தாயெழிற்‌ றமிழை, என்றன்‌
தமிழரின்‌ கவிதை தன்னை
ஆயிரம்‌ மொழியிற்‌ காண
இப்புவி அவாவிற்‌ றென்ற
தோயுறும்‌ மதுவின்‌ ஆறு
தொடர்ந்தென்றன்‌ செவியில்‌ வந்து
பாயுநாள்‌ எந்த நாளோ ?
ஆரிதைப்‌ பகர்வார்‌ இங்கே. 3

வெள்ளம்போல்‌ தமிழர்‌ கூட்டம்‌;
வீரங்கொள்‌ கூட்டம்‌; அன்னார்‌
உள்ளத்‌ தால்‌ஒரு வரேமற்‌
றுடலினால்‌ பலராய்க்‌ காண்பார்‌
கள்ளத்தால்‌ நெருங்கொ ணாதே
எனவையம்‌ கலங்கக்‌ கண்டு
துள்ளும்நாள்‌ எந்நாள்‌ ? உள்ளம்‌
சொக்கும்நாள்‌ எந்த நாளோ ? 4

கண்களும்‌ ஒளியும்‌ போலக்‌
கவின்மலர்‌ வாசம்‌ போலப்‌

பெண்களும்‌ ஆண்கள்‌ தாமும்‌
பெருந்தமிழ்‌ நாடு தன்னில்‌

தண்கடல்‌ நிகர்த்த அன்பால்‌

சமானத்தார்‌ ஆனார்‌ என்ற
பண்வந்து காதிற்‌ பாயப்‌
பருகுநாள்‌ எந்த நாளோ ? 5

- புரட்சிக்கவிஞர்‌ பாரதிதாசன்‌

அருஞ்சொற்பொருள்‌

பராக்கிரமம்‌ - வீரம்‌;
 உன்னதம்‌ - உயர்வு; 
இமமலை - இமயமலை; 
கீர்த்தி - புகழ்‌; 
நிகர்த்த
- போன்ற; 
சமானத்தர்‌ - ஒத்தஉரிமை உடையவர்‌; 
பண்‌ - பாடல்‌ ; 
புதுக்கும்‌ நாள்‌ - புதியதாக
அமைக்கும்‌ நாள்‌; சொக்கும்‌ நாள்‌ - மகிழ்ச்சியால்‌ மயங்கும்‌ நாள்‌; பாவகை : அறுசீர்க்‌ கழிநெடிலடி
ஆசிரிய விருத்தம்‌.

இலக்கணம்‌

இயம்பக்‌ கேட்டிடல்‌ - செய்வென்‌ வாய்பாட்டு வினையெச்சம்‌; அருந்தமிழ்‌ -
பண்புத்தொகை; புதுக்குநாள்‌, பருகுநாள்‌, பாயு நாள்‌ - வினைத்தொகைகள்‌; பகர்வார்‌ -
வினையாலணையும்‌ பெயர்‌; தண்கடல்‌ - பண்புத்தொகை.






Next Post Previous Post
No Comment
Add Comment
comment url