Search This Blog

கல்வியில் சிறந்த பெண்கள்:


பெண்மை - புரட்சி
 முத்துலெட்சுமி ( 1886-1968 ) 


தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் இந்தியப்பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் .

 சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் . 

சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி . 

தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம் , இருதார தடைச்சட்டம் , பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம் , குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் ஆகியவை நிறைவேற காரணமாக இருந்தவர் .

 அடையாற்றில் 1930 இல் அவ்வை இல்லம் , 1952 இல் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர் .
_______________

பெண்மை - உயர்வு 

 பண்டித ரமாபாய் ( 1858-1922 ) 


இவர் சமூகத் தன்னார்வலர் . தடைகளை மீறிக் கல்வி கற்றுப் பண்டிதராகியவர் . பெண்களின் உயர்வுக்குத் துணை நின்றவர் .
_______________

பெண்மை - துணிவு 

 மூவலூர் இராமாமிர்தம் ( 1883-1962 ) 

தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி ; எழுத்தாளர் ; திராவிட இயக்க அரசியல் செயல்பாட்டாளர் .; தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறத் துணைநின்றவர் . தமிழக அரசு 8 ஆம் வகுப்புவரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித் தொகையை இவரின் பெயரில் வழங்கிவருகிறது .

________________

பெண்மை - சிறப்பு 
ஐடாஸ் சோபியா ஸ்கட்டர் ( 1870-1960 ) 



பெண்கள் மருத்துவராவதை மருத்துவ உலகமே விரும்பாத காலத்தில் மருத்துவராகி , தமிழகத்திற்கு வந்து , வேலூரில் இலவச மருத்துவம் அளித்தவர் .
_________________

பெண்மை - அறிவு 

 சாவித்திரிபாய் பூலே 

( 1831 - 1897 ) 


1848 இல் பெண்களுக்கெனத் தொடங்கப்பட்ட ள் ளி யி ல் ஆசிரியராகப் பணியாற்றியவர் இவரே நாட்டின் முதல் பெண் ஆசிரியர் .

____________________


யார் இவர் ?


 பாகிஸ்தானில் , பெண்கல்வி வேண்டுமெனப் போராட்டக் களத்தில் இறங்கியபோது மலாலாவின் வயது பன்னிரண்டு ( 1997 ) .

___________


தனித் தமிழில் சிறந்த நீலாம்பிகை அம்மையார் ( 1903-1943 ) 


மறைமலையடிகளின் மகள் ஆவார் . தந்தையைப் போலவே தனித்தமிழ்ப் பற்றுடையவர் ; இவரது தனித்தமிழ்க் கட்டுரை , வடசொல் தமிழ் அகரவரிசை , முப்பெண்மணிகள் வரலாறு , பட்டினத்தார் பாராட்டிய மூவர் ஆகிய நூ ல்கள் தனித்தமிழில் எழுத விரும்புவோர்க்கு மிகவும் பயனுள்ளனவாக விளங்குகின்றன .
_____________


 ஈ.த. இராஜேஸ்வரி அம்மையார் ( 1906-1955 ) 


தமிழ் , இலக்கியம் அறிவியல் ஆகிய துறைகளிலும் சிறந்து விளங்கினார் . திருமந்திரம் , தொல்காப்பியம் , கைவல்யம் போன்ற நூ ல்களிலுள்ள அறிவியல் உண்மைகள் குறித்துச் சொற்பொழிவு ஆற்றியுள்ளார் . இராணி மேரி கல்லூரியில் அறிவியல் பேராசிரியாகப் பணியாற்றினார் . சூரியன் , பரமாணுப் புராணம் போன்ற அறிவியல் நூல்களை எழுதியுள்ளார் .
____________

தெரிந்து தெளிவோம் :

கோத்தாரி கல்விக் குழு 

1964 ஆம் ஆண்டு கோத்தாரிக் கல்விக் குழு தன் பரிந்துரையில் அனைத்து நிலையிலும் மகளிர் கல்வியை வலியுறுத்தியது .

 சாரதா சட்டம் :
  பெண் முன்னேற்றத்தின் தடைக்கல்லாய் இருப்பது குழந்தைத் திருமணம் . எனவே , அதைத் தடுக்க 1929 ஆம் ஆண்டு சாரதா சட்டம் கொண்டு வரப்பட்டது .

பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டங்கள் :

ஈ.வெ.ரா. நாகம்மை இலவசக் கல்வி உதவித் திட்டம் பட்டமேற்படிப்பிற்கு உரியது . 

சிவகாமி அம்மையார் கல்வி உதவித்திட்டம் - கல்வி , திருமண உதவித் தொகை ஆகியவற்றுடன் தொடர்புடையது .  

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url