Search This Blog

ஏப்ரல் 10

உலக ஹோமியோபதி தினம்:

 ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலக ஹோமியோபதி தினம்
கொண்டாடப்படுகிறது.
ஹோமியோபதி என்பது மருத்துவர் சாமுவேல் ஹhனிமன் என்பவரால் 1796ஆம்
ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மாற்று மருத்துவ முறையாகும். சாமுவேல்
ஹhனிமன் அவர்கள் 1755 ஆம் ஆண்டு ஏப்ரல்10 ஆம் தேதி பிறந்தார். அவரது
நினைவாக ஏப்ரல் 10 ஆம் தேதி உலக ஹோமியோபதி தினம் கொண்டாடப்படுகிறது.
உலகம் முழுவதும் ஹோமியோபதி மருத்துவ முறையானது வளர்ந்து வருகிறது. உலகம்
முழுவதும் மக்கள் ஹோமியோபதி மருத்துவத்தால் பயனடைந்து வருகின்றனர்.
ஹோமியோபதி மருத்துவம் பாதுகாப்பானதாகும், சிறந்த தன்மை,
பண்புகளைக்கொண்டது. இந்திய மக்கள் தொகையில் 10மூ மக்களுக்கு மேல்
இம்மருத்துவத்தினை சார்ந்துள்ளனர். ஹோமியோபதி மருத்துவம் இந்திய மருத்துவ
வழிமுறைகளில் இரண்டாவது இடத்தைப்பெற்றுள்ளது.



மொரார்ஜி தேசாய்:

முன்னாள் இந்திய பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்கள் 1896 ஆம் ஆண்டு
பிப்ரவரி 29 ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் பிறந்தார். அந்த நாளில்
முன்னாள் இந்திய பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்கள் 1896 இல் குஜராத்
மாநிலத்தில் பிறந்தார். இவர் இந்திய விடுதலைப்போராட்ட வீரரும், இந்திய
பிரதமரும், இந்திய அரசியல்வாதியும் ஆவார். இவரே இந்திய தேசிய காங்கிரஸ்
கட்சி சாராத முதல் இந்தியப்பிரதமர் ஆவார்.

புனித பசார் மேல்நிலை பள்ளியில் அவர் மெட்ரிக் கல்வியை
முடித்தார். 1918இல் மும்பை மாகாணத்தில் வில்சன் சிவில் சேவையில் தனது
பட்டப்படிப்பை முடித்து, 12 ஆண்டு காலம் துணை ஆட்சியராகப்
பணிப்புரிந்தார். 1930 இல், மகாத்மா காந்தி சுதந்திர போராட்டத்தை
அறிவித்தபோது தனது வேலையை இராஜினாமா செய்து, சுதந்திர போராட்டத்தில்
இணைத்துக் கொண்டார். சுதந்திர போராட்டத்தின் போது இவர் மூன்று முறை
சிறையில் அடைக்கப்பட்டார். 1931ல் அகில இந்திய காங்கிரஸ் குழுவில் அவர்
உறுப்பினராக இணைந்தார். 1937 வரை குஜராத் காங்கிரஸ் குழுவின் செயலராக
செயல்பட்டார்.
1937ல் முதல் முறை காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது மும்பை
மாகாணத்தில் திரு.பி.ஜி.கேர் தலைமையிலான வருவாய், வேளாண்மை, வனம் மற்றும்
கூட்டுறவு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பணிபுரிந்தார். அதன்பின், 1946ல்
மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு அவர் மும்பையில் உள்துறை மற்றும்
வருவாய் துறை அமைச்சராகப் பதவியேற்றார். அவரின் பணிகாலத்தின் போது, நில
வருவாய் துறையில் பாதுகாப்பு உரிமை மூலம் பல்வேறு திருத்தங்களைக்
கொண்டுவந்தார். 1952இல் இவர் பம்பாயின் முதல் அமைச்சராகப் பதவியேற்றார்.
அதன்பின், 1977 மார்ச் 24 ஆம் தேதி இந்தியாவின் பிரதம மந்திரியாக
பதவியேற்றார். இவர் தனது 83வது வயதில் பிரதமர் பதவியிலிருந்து
மட்டுமன்றி, அரசியலில் இருந்தும் அவர் ஓய்வுபெற்றார். அதன் பின்னர்,
மும்பை மாநகரத்தில் வாழ்ந்த அவர், 10 ஏப்ரல் 1995 ஆம் ஆண்டு தனது 99வது
வயதில் மறைந்தார்.



★வட அமெரிக்க பறவைகள் பாதுகாப்பின் தந்தை என்று போற்றப்படும் ஜாக் மைனர்
1865 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி பிறந்தார்.
★1710 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி காப்புரிமை பற்றிய முதலாவது சட்ட
விதிகள் பிரித்தானியாவில் வெளியிடப்பட்டன.
★1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி டைட்டானிக் பயணிகள் கப்பல், தனது
முதலாவதும் மற்றும் கடைசியுமான பயணத்தை இங்கிலாந்தின் சௌதாப்ம்டன்
துறையில் ஆரம்பித்தது.
★1972 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி உயிரியல் ஆயுத தடுப்பு உடன்பாட்டில்
74 நாடுகள் கையெழுத்திட்டன.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url