Search This Blog

ஆப்பிள் 1 கணிப்பொறி:

ஆப்பிள் 1 கணிப்பொறி:

 1976ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி பிரபல ஆப்பிள் நிறுவனத்தின் முதல்
கணிப்பொறி வெளியிடப்பட்டது. ஆப்பிள் நிறுவனமானது, 1976ஆம் ஆண்டு ஏப்ரல்
மாதம் 1ஆம் தேதி துவங்கப்பட்டது. இதனை ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீவ் வாஸ்னயிக்
ஆகியோர் இணைந்து தொடங்கினர். இதன் முதல் தயாரிப்பான ஆப்பிள் 1 அந்தக்
காலத்திலேயே 36,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மரத்தினால் ஆன கீ
போர்டுடன் கூடிய இந்த கணினி, உலகம் முழுவதும் பெரிதும் பேசப்பட்டது. இதனை
வடிவமைத்தவர் ஸ்டீவ் வாஸ்னயிக் ஆவார். இதன் வெற்றிகரமான விற்பனைக்கு
ஸ்டீவ் ஜாப்ஸின் யோசனை தான் பெரிதளவில் உதவியது. கடந்த 2013ஆம் வருடம்
இந்த ஆப்பிள் 1 கணிப்பொறி ஜெர்மனியில் ஏலம் விடப்பட்டது. அப்போது, ரூ.3.5
கோடிகளுக்கு ஏலம் போனது என்பது குறிப்பிடத்தக்கது.



♥1814 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி மாவீரன் நெப்போலியன் முதன் முறையாக
அரசு பதவியைத் துறந்து எல்பா தீவுக்குச் சென்றார்.
♥அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் கடைசி உரை 1865 ஆம் ஆண்டி ஏப்ரல்
11 ஆம் தேதி இடம்பெற்றது.
♥1905 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி ஐன்ஸ்டீன் தனது சார்புக் கோட்பாட்டை
வெளியிட்டார்.
♥1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி சர்வதேச தொழிலாளர் அமைப்பு தொடங்கப்பட்டது.
♥1921ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி விளையாட்டு வர்ணனை முதன் முறையாக
வானொலியில் ஒலிபரப்பானது.
♥2003 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி உலகம் முழுவதும் பயத்தை ஏற்படுத்திய
சார்ஸ் நோய்க்கான வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url