சர்வதேச யானைகள் தினம்
சர்வதேச யானைகள் தினம்:
 ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி சர்வதேச யானைகள் தினம்
கொண்டாடப்படுகிறது. அக்காலத்தில் காடுகளில் சுதந்திரமாய் சுற்றித்
திரிந்த யானைகளை நாம் இப்போது கோவில்களிலும், சர்கசிலும் தான்
காணமுடிகிறது. இன்று, பல யானைகள் தந்தத்திற்காக அதிக அளவில்
வேட்டையாடப்படுகின்றன. நம் நாட்டின் செழிப்பு மற்றும் பாரம்பரியத்தின்
அடையாளமாக விளங்கும் யானைகளின் இனம் அழிந்து வருவதை உணர்த்தும் வகையில்
இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.