Search This Blog

விக்கிரம் சாராபாய்

🏆 இந்திய இயற்பியலாளரான விக்கிரம் அம்பாலால் சாராபாய் 1919 ஆம் ஆண்டு
ஆகஸ்ட் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் பிறந்தார். சிறுவயதிலிருந்தே
கணிதத்திலும் இயற்பியலிலும் அதிக நாட்டம் கொண்டவராக இருந்தார்.
இங்கிலாந்தில் Ph.d. ஆராய்ச்சியை முடித்த பிறகு 1947 ஆம் ஆண்டு நவம்பர்
11 ஆம் தேதி அகமதாபாத்தில் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை நிறுவினார்.

🏆 இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவின் விண்ணேவுதலுக்கு
முழுமுதல் காரணமானவர் இவரே. 1969 ஆம் ஆண்டு "சாந்தி ஸ்வரூப் பட்நாகர்"
விருது இவருக்கு வழங்கப்பட்டது. SITE எனப்படும் "செயற்கைக்கோள் உதவியுடன்
தொலைக்காட்சியில் பயிற்றுவிக்கும் முயற்சி" மூலம் இந்தியாவில் உள்ள பல
கிராம மக்களுக்கு கல்வியை எடுத்துச்செல்ல உதவினார். இந்திய விண்வெளித்
திட்டத்தின் தந்தை எனக் கருதப்பட்ட இவர் 1971 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம்
தேதி இறந்தார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url