Search This Blog

ஆகஸ்டு 10

வி.வி. கிரி

🎌 இந்தியாவின் நான்காவது ஜனாதிபதியான வி.வி. கிரி 1894 ஆம் ஆண்டு ஆகஸ்ட்
10 ஆம் தேதி பிறந்தார். இவரது இயர்பெயர் வராககிரி வேங்கட கிரி. இவரது
தந்தை ஒரு புகழ்பெற்ற வக்கீல். 1936 ஆம் ஆண்டு நடைபெற்ற மதராஸ் பொது
தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளராக போப்பிலியின் ராஜாவை எதிர்த்து
போட்டியிட்டு வென்றார்.

🎌 1942 ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு ராஜினாமா செய்தபொழுது "வெள்ளையனே
வெளியேறு" இயக்கத்தை ஆதரித்ததால் ஆங்கில அரசால் கைது செய்யப்பட்டார்.
குடியரசுத் தலைவர் சாகிர் உசேன் பதிவியிலிருக்கும் போதே மரணமடைந்ததால்
இந்திய தேசிய காங்கிரசின் வி.வி. கிரி இடைக்காலக் குடியரசுத் தலைவராக
நியமிக்கப்பட்டார். 1975 ஆம் ஆண்டு இந்தியாவின் தலைசிறந்த விருதான, பாரத
ரத்னா விருதினை பெற்றார். இந்தியாவின் நான்காவது குடியரசுத் தலைவரான இவர்
1980 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி இறந்தார்.

"""""""""""""""""""""""
🌎 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி மெகல்லன் விண்கலம் வெள்ளிக் கோளை அடைந்தது.
💣 1948 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஜவஹர்லால் நேரு இந்திய அணுசக்திப்
பேரவையைத் துவக்கி வைத்தார்.
🔴 1519 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி மெகல்லனின் ஐந்து ஸ்பானியக்
கப்பல்கள் உலகைச் சுற்றிவர செவில் நகரில் இருந்து புறப்பட்டன.
🔸 1821 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி மிசு+ரி ஐக்கிய அமெரிக்காவின்
24வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url