Vijay Maths

முக்கிய தினங்கள், TNPSC,TNTET Study Material, பொது தகவல்கள், சுவாரஸ்யமான தகவல்கள்

Breaking

Apr 3, 2016

மராட்டிய மாவீரர் சத்ரபதி சிவாஜி:

மராட்டிய மாவீரர் சத்ரபதி சிவாஜி:

மராட்டியப்பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலைச்சிறந்து விளங்கிய சத்ரபதி
சிவாஜி அவர்கள் 1627 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி இந்தியாவின்
மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள பூனே மாவட்டத்தில் பிறந்தார். தன்னுடைய
தாயின் அரவணைப்பில் வளர்ந்த சத்ரபதி சிவாஜி, இளமையிலேயே இராமாயணம்,
மகாபாரதம் போன்ற வீரகாவியங்கள் கற்பிக்கப்பட்டு சிறந்த வீரனாக
வளர்க்கப்பட்டார்.
இளம் வயதிலேயே திறமைப் பெற்ற போர்வீரனாகவும், சிறந்த ஆட்சியாளராகவும்,
நிர்வாகியாகவும் மற்றும் வல்லமைப்பெற்ற படைத் தளபதியாகவும் விளங்கியவர்.
இராணுவத்தில் சீர்திருத்தங்களை வகுத்து, போர்களில் கொரில்லா உத்திகளை
பயன்படுத்தி, பல கோட்டைகளையும், பகுதிகளையும் கைப்பற்றி மராட்டியப்பேரரசை
விரிவுபடுத்தினார்.
மராட்டியர்களின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் முக்கிய காரணாமாய்
விளங்கி, பிளவுபட்டு கிடந்த பகுதிகளை ஒன்றிணைத்து மராட்டிய
சாம்ராஜ்ஜியத்தை நிறுவினார். சிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகியாகவும்
விளங்கிய சத்ரபதி சிவாஜி அவர்கள் 1680 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி
தன்னுடைய 53 வது வயதில் காலமானார்.



★பல நடிகர்களின் கனவு நாயகனாக விளங்கிய, உலகப் புகழ்பெற்ற நடிகர் மார்லன்
பிராண்டோ 1924 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி அன்று பிறந்தார்.
★வெளிநாட்டில் தஞ்சமடைந்திருந்த விளாடிமிர் லெனின் 1917 ஆம் ஆண்டு ஏப்ரல்
3 ஆம் தேதி ரஷ்யா திரும்பினார்.
★1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி முதலாவது செல்லிட தொலைபேசி அழைப்பை
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மேற்கொள்ளப்பட்டது. மோட்டரோலா நிறுவன
ஆராய்ச்சியாளர் பெல் கூப்பர் இந்த அழைப்பை மேற்கொண்டார்.
★1966 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி ரஷ்யாவின் லு}னா-10 விண்கலம்
சந்திரனின் சுற்றுவட்டத்தை அடைந்தது.
★பிரபல இந்தி நடிகை ஜெயப்பிரதா 1962 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி பிறந்தார்.
★நடன அமைப்பாளரும், தமிழ் நடிகரும் மற்றும் இயக்குநருமான பிரபுதேவா 1973
ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி பிறந்தார்.

No comments:

Post a Comment

CATEGORIES

அன்பு அறிந்து கொள்வோம் அறிவோம் அறிவோம் அறிவியல் அறிவோம் கணிதம் அறிவோம் தமிழ் ஆன்மீகம் இன்று பிறந்தவர் இன்று பிறந்தவர்கள் இயற்கை மருத்துவம் இலக்கியம் உங்களுக்குத் தெரியுமா? உடல்நலம் ஏன்? எதற்கு? எப்படி? கணித மேதைகள் கண்டுபிடிப்பாளர்கள் கண்டுபிடிப்பு கண்டுபிடிப்புகளும் சாதனைகளும் கலைச்சொல் கல்வி உளவியல் காரணம் அறிவோம் குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் கொரோனா கோவில் சந்திர கிரகணம் சுவாரசியமான தகவல்கள் சூரிய கிரகணம் சொல்லும் பொருளும் ஜனவரி ஜோதிடம் டி.என்.பி.எஸ்.சி டெட் தமிழர் இசைக்கருவிகள் தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கணம் தமிழ் எண்ணுறு திராவிட மொழிக் குடும்பம் திருக்குறள் திருவிழா திரைப்படம் தெரிந்துகொள்வோம் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நலத்திட்டங்கள் நாளைந்து கேள்விகள் நீதிக் கதைகள் நூலகம் பற்றிய செய்திகள் TNPSC நெல் நோபல் பரிசு பள்ளிப்பாடப்புத்தகம் பழமொழிகள் பாடல் வரிகள் பாரதியார் பிரித்தெழுதுக பிறந்தநாள் புவிசார் குறியீடு பூக்கள் பொங்கல் விழா பொது அறிவியல் பொது அறிவு பொதுத்தமிழ் மகாகவி பாரதியாரின் அரிய புகைப்படங்கள் மரம் மரம் தகவல்கள் முக்கிய ஆண்டுகள் முக்கிய தினங்கள் முதன் முதலில் முதல் தமிழ்க் கணினி முதல் பெண்மணி யார் இவர் ராஜராஜ சோழர் ராயப்பனூர் வரலாறு வரலாற்றில் இன்று வாழ்க்கை வாழ்வியல் சிந்தனை விருதுகள் விருந்தோம்பல் விவசாயம்