Search This Blog

உலக தண்ணீர் தினம் World Water Day


 உலக தண்ணீர் தினம் World Water Day


🌊 ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

🌊 நீரின்றி அமையாது உலகு என்பதற்கு ஏற்ப, நீரின்றி நம்மால் வாழ இயலாது. பூமியில் 30 விழுக்காடு மட்டுமே நிலப்பரப்பாகும். மீதமிருக்கும் 70 விழுக்காடும் நீர்பரப்புதான்.

🌊 ஆனால், இன்று அந்த 30 விழுக்காட்டில் வசிக்கும் மக்களுக்கு தேவையான நீரை அளிக்கும் போதிய வசதியை பூமி இழந்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

🌊 1993ஆம் ஆண்டு முதல் மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினமாக ஐ.நா-வால் அறிவிக்கப்பட்டு இன்றுவரை கடைப்பிடிக்கப்பட்டு கொண்டாடி வருகிறோம். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல கோடி மக்கள் தண்ணீரின்றி திண்டாடி வரும் நிலையும் எந்த வகையிலும் அகலவில்லை.

🌊 எனவே, உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில், தண்ணீரை மாசுப்படுத்தாமல், உயிர் போல் காப்போம் என்ற உறுதிமொழியை மனதில் ஏந்தி, அதனை நிறைவேற்ற பாடுபடுவோம்.

நோக்கம்:

🌊 நீரின் முக்கியத்துவத்தை உலக மக்களுக்கு உணர்த்துதல்.

🌊 நீர் வளங்களை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை பற்றி மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

🌊 நீர் பாதுகாப்பு மற்றும் நிலையான நீர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

🌊 நீர் வளங்களை பாதுகாக்கவும், நிலையான முறையில் பயன்படுத்தவும் அறிவுறுத்தல்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url