Search This Blog

TNPSC Syllabus Wise Study Material in Tamil

  

TNPSC Syllabus Wise Study Material in Tamil

ஒருங்கிணைந்த குடிணைப் பணிகள் தேர்வு – IV

பகுதி - அ

கட்டாயத் தமிழ் மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்விற்கான பாடத்திட்டம்

(கொள்குறி வினா  வகைக்காண தலைப்புக்கள்

பத்தாம் வகுப்புத் தரம் )

--------------------------------------------------------------------

பகுதி - அ
இலக்கணம்


1.      பொருத்துதல் - பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல் , புகழ் பெற்ற நூல் , நூலாசிரியர் .

2.     தொடரும் தொடர்பும் அறிதல்

(i) இத்தொடரால் குறிக்கப்படும் சான்றோர்

(ii) அடைமொழியால் குறிக்கப்படும் நூல் .


3. பிரித்தெழுதுக .


4. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் . 


5. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் . 


6. பிழைதிருத்தம் சந்திப்பிழையை நீக்குதல் , ஒருமை பன்மை பிழைகளை  நீக்குதல், மரபுப் பிழைகள் , வழுஉச் சொற்களை நீக்குதல், பிறமொழிச்         சொற்களை நீக்குதல். 


7. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல் . 


8. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல் . 


9. ஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளைக் கண்டறிதல்.


10. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்.


11. வேர்ச்சொல்லைக் கொடுத்து , வினைமுற்று , வினையெச்சம் , வினையாலணையும் பெயர் , தொழிற்பெயரை உருவாக்கல்.


12. அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல் . 


13. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல் . 


14. பெயர்ச் சொல்லின் வகை அறிதல் . 


15.  இலக்கணக் குறிப்பறிதல் .


16. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் . 


17. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் . 


18. தன்வினை , பிறவினை , செய்வினை . செயப்பாட்டுவினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல் .


19. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல் .


20. எதுகை மோனை , இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெழுதுதல் .


21. பழமொழிகள் .

--------------------------------------------------------------------


பகுதி - ஆ இலக்கியம்


1. திருக்குறள் தொடர்பான செய்திகள் , மேற்கோள்கள் , தொடரை நிரப்புதல் (இருபத்தைந்து அதிகாரம் மட்டும் )

அன்பு , பண்பு , கல்வி , கேள்வி , அறிவு , அடக்கம் , ஒழுக்கம் , பொறை , நட்பு , வாய்மை , காலம் , வலி , ஒப்புரவறிதல் , செய்நன்றி , சான்றாண்மை , பெரியாரைத் துணைக் கோடல் , பொருள்செயல்வகை , வினைத்திட்பம் , இனியவை கூறல் , ஊக்கமுடைமை , ஈகை , தெரிந்து செயல்வகை , இன்னா செய்யாமை , கூடா நட்பு , உழவு .


2. அறநூல்கள் - நாலடியார் , நான்மணிக்கடிகை , பழமொழி நானூறு , முதுமொழிக் காஞ்சி , திரிகடுகம் , இன்னா நாற்பது , இனியவை நாற்பது , சிறுபஞ்சமூலம் , ஏலாதி , ஒளவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள் , பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள் . 


3. கம்பராமாயணம் , இராவண காவியம் தொடர்பான செய்திகள் , பாவகை , சிறந்த தொடர்கள் . 


4. புறநானூறு , அகநானூறு , நற்றிணை , குறுந்தொகை , ஐங்குறுநூறு , கலித்தொகை தொடர்பான செய்திகள் , மேற்கோள்கள் , அடிவரையறை , எட்டுத்தொகை , பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள் . 


5. சிலப்பதிகாரம் - மணிமேகலை தொடர்பான செய்திகள் , மேற்கோள்கள் , சிறந்த தொடர்கள் , உட்பிரிவுகள் மற்றும் ஐம்பெரும் - ஐஞ்சிறுங் காப்பியங்கள் தொடர்பான செய்திகள் . 


6. பெரியபுராணம் - நாலாயிர திவ்வியப்பிரபந்தம் - திருவிளையாடற் புராணம் - தேம்பாவணி - சீறாப்புராணம் தொடர்பான செய்திகள் . 


7. சிற்றிலக்கியங்கள் : திருக்குற்றாலக்குறவஞ்சி - கலிங்கத்துப்பரணி - முத்தொள்ளாயிரம் , தமிழ்விடு தூது - நந்திக்கலம்பகம் - முக்கூடற்பள்ளு - காவடிச்சிந்து முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் இராஜராஜ சோழன் உலா தொடர்பான செய்திகள் . 


8. மனோன்மணியம் - பாஞ்சாலி சபதம் -குயில் பாட்டு இரட்டுற மொழிதல் ( காளமேகப் புலவர் ) -அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள் . 


9. நாட்டுப்புறப் பாட்டு - சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள் . 


10. சமய முன்னோடிகள் - அப்பர் , சம்பந்தர் , சுந்தரர் , மாணிக்கவாசகர் , திருமூலர் , குலசேகர ஆழ்வார் , ஆண்டாள் , சீத்தலைச் சாத்தனார் , எச்.ஏ.கிருட்டிணனார் , உமறுப்புலவர் தொடர்பான செய்திகள் , மேற்கோள்கள் , சிறப்புப் பெயர்கள் .

--------------------------------------------------------------------


பகுதி - இ தமிழ்

அறிஞர்களும் , தமிழ்த் தொண்டும்


1. 1.பாரதியார் , பாரதிதாசன் , நாமக்கல் கவிஞர் , கவிமணி தேசிக விநாயகனார் தொடர்பான செய்திகள் சிறந்த தொடர்கள் , சிறப்புப் பெயர்கள் .


2. மரபுக் கவிதை முடியரசன் . வாணிதாசன் , சுரதா , கண்ணதாசன் , உடுமலை நாராயண கவி , பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் , மருதகாசி தொடர்பான செய்திகள் , அடைமொழிப் பெயர்கள் . 


3. புதுக்கவிதை - ந.பிச்சமூர்த்தி , சி.சு.செல்லப்பா , தருமு சிவராமு , பசுவய்யா , இரா.மீனாட்சி , சி.மணி , சிற்பி , மு.மேத்தா , ஈரோடு தமிழன்பன் , அப்துல்ரகுமான் , கலாப்ரியா , கல்யாண்ஜி , ஞானக்கூத்தன் தொடர்பான செய்திகள் , மேற்கோள்கள் , சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள் . 


4. தமிழில் கடித இலக்கியம் - நாட்குறிப்பு , ஜவகர்லால் நேரு , மகாத்மா காந்தி , மு.வரதராசனார் , பேரறிஞர் அண்ணா தொடர்பான செய்திகள் .


5. நிகழ்கலை ( நாட்டுப்புறக் கலைகள் ) தொடர்பான செய்திகள் . 


6. தமிழில் சிறுகதைகள் தலைப்பு - ஆசிரியர் பொருத்துதல் . 


7. கலைகள் - சிற்பம் - ஓவியம் - பேச்சு திரைப்படக்கலை தொடர்பான செய்திகள் . 


8. தமிழின் தொன்மை - தமிழ்மொழியின் சிறப்பு , திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள் . 


9. உரைநடை மறைமலை அடிகள் , பரிதிமாற்கலைஞர் , ந.மு.வேங்கடசாமி நாட்டார் , ரா.பி.சேது , திரு.வி.கல்யாண சுந்தரனார் , வையாபுரி , பேரா.தனிநாயகம் அடிகள் , செய்குதம்பி பாவலர் - மொழி நடை தொடர்பான செய்திகள் .


10. உ.வே.சாமிநாதர் , தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் , சி.இலக்குவனார் தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள் .


11. தேவநேயப்பாவாணர் - அகரமுதலி , பாவலரேறு பெருஞ்சித்திரனார் , தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள் , 


12. ஜி.யு.போப் - வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள் .


13. தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்துராமலிங்கர் - அம்பேத்கர் காமராசர் - ம.பொ.சிவஞானம் - காயிதேமில்லத் - சமுதாயத் தொண்டு . 


14. தமிழகம் ஊரும் பேரும் , தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள் .


15. உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் - பெருமையும் - தமிழ்ப் பணியும் . 


16. தமிழ்மொழியின் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள் . 


17. தமிழ் மகளிரின் சிறப்பு - மூவலூர் ராமாமிர்தம்மாள் , டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் , வேலு நாச்சியார் மற்றும் சாதனை மகளிர் விடுதலைப் போராட்டத்தில் மகளிர் பங்கு - தில்லையாடி வள்ளியம்மை , ராணி மங்கம்மாள் அன்னி பெசன்ட் அம்மையார் . 


18. தமிழர் வணிகம் -தொல்லியல் ஆய்வுகள் -கடற் பயணங்கள் - தொடர்பான செய்திகள் .


19. உணவே மருந்து - நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள் .


20. சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர் , இராமலிங்க அடிகளார் , திரு.வி.கல்யாண சுந்தரனார் தொடர்பான செய்திகள் - மேற்கோள்கள் . 


21. நூலகம் பற்றிய செய்திகள் .


---------------------------------------------------------------------------------------



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url