Search This Blog

இ-பாஸ்போர்ட் e-passport:

இ-பாஸ்போர்ட் e-passport:


🌟 இ-பாஸ்போர்ட் என்றால் என்ன, அது எப்படிப் பயன்படுகிறது? சாதாரண பாஸ்போர்ட்டுக்கு மாற்றாக இ-பாஸ்போர்ட் எவ்வாறு செயல்படும்? என்பதைப் பற்றி பார்க்கலாம் வாங்க....

இ-பாஸ்போர்ட் என்றால் என்ன?

🍁 இ-பாஸ்போர்ட் சாதாரண பாஸ்போர்ட் போலவே இருந்தாலும், இதில் மின்னணு நுண்செயலி சிப் பயன்படுத்தப்படுகிறது. இது பாஸ்போர்ட்டின் அட்டை அல்லது உள் பக்கங்களில் பொருத்தப்பட்டிருக்கும்.

🍃 மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.முரளீதரன், 'இ-பாஸ்போர்ட்டில் விண்ணப்பதாரர்களின் தகவல்கள் டிஜிட்டல் அடையாள வடிவில் உள்ள சிப்பில் பாதுகாக்கப்படும்" என்று தெரிவித்திருந்தார்.

🍁 அதில் பாஸ்போர்ட் வைத்திருப்பவர் தொடர்பான அனைத்து தகவல்களும் இருக்கும். இந்த சிப்பில் உள்ளிடப்பட்ட தகவலை மாற்ற முடியாது. சிப்பில் சேதம் ஏற்பட்டால், இ-பாஸ்போர்ட் செயலிழந்து விடும்.

சாதாரண பாஸ்போர்ட்டை விட இது எவ்வகையில் வேறுபட்டது?

🌸 நீங்கள் ஒரு சாதாரண பாஸ்போர்ட்டுடன் ஒரு நாட்டிற்குள் நுழையும்போது, உங்கள் நுழைவு குறித்த தகவல் அந்த பாஸ்போர்ட்டில் பதிவு செய்யப்படும்.

🌸 இந்தத் தகவல்கள் அனைத்தும் இ-பாஸ்போர்ட்டில் உள்ள எலக்ட்ரானிக் சிப்பில் சேமிக்கப்படும். இ-பாஸ்போர்ட் வைத்திருப்பவர் எந்தெந்த நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார், அந்தந்த நாடுகளில் எவ்வளவு காலம் வாழ்ந்தார் என்பதை காகித ஆவணங்களின்றி பதிவு செய்யலாம்.

இ-பாஸ்போர்ட்டில் என்ன வசதி?

🌸 சாதாரண கடவுச்சீட்டுடன் நீங்கள் ஒரு நாட்டிற்குச் செல்லும்போது, முதலில் நீங்கள் சம்பந்தப்பட்ட நாட்டின் விசாவைப் பெற வேண்டும். பாஸ்போர்ட்டில் விசா முத்திரையிடப்படுகிறது.

🌸 குடிவரவுத் துறை அதிகாரிகள், பயணம் செய்வதற்கு முன் விமான நிலையத்தில் பாஸ்போர்ட் மற்றும் விசாக்களை சரிபார்க்கிறார்கள். இந்தக் கட்டத்தில், நீண்ட வரிசைகள் இருக்கும். மணிக்கணக்கில் காத்திருந்த பிறகுதான் அந்த நபரின் எண் வந்து பயண அனுமதி கிடைக்கிறது.

🌸 இ-பாஸ்போர்ட்டில் இந்தக் கட்டத்தைக் கடக்க, பாஸ்போர்ட் மற்றும் விசாவை அதிகாரிகள் சரிபார்ப்பதில்லை. தானியங்கி இயந்திரம் சரிபார்க்கிறது.

🌸 மெட்ரோவில் டோக்கன் போட்டவுடன் கேட் திறக்கப்படுவது போல, இமிக்ரேஷன் கேட்டில் இ-பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்தால் கேட் திறக்கப்படுகிறது.

இதில் இ-விசாவும் கிடைக்குமா?

🍂 சில நாடுகளில் இந்த வசதி உள்ளது, நீங்கள் வீட்டில் அமர்ந்து இ-பாஸ்போர்ட் உதவியுடன் இ-விசா எடுக்கலாம். மெட்டாவெர்ஸ் ப்ளாக்செயின் சொல்யூஷனின் (Metaverse Blockchain Solution) நிறுவனர் ப்ரீத்தி அஷுஹஜாவிடம் இ-பாஸ்போர்ட் உள்ளது.

🍂 வீட்டில் அமர்ந்தபடியே இ-விசா பெறுவதாக அவர் சொல்கிறார். ஒரு நாடு இ-விசாவை வழங்கும் போது, அந்தத் தகவல் பாஸ்போர்ட்டில் உள்ள மின்னணு சிப்பில் ஏற்றப்படுகிறது.

🍂 இ-பாஸ்போர்ட் வைத்திருப்பவர் குடிவரவு வாயிலை அடைந்ததும், அங்கு நிறுவப்பட்டுள்ள இயந்திரம் மற்றும் கேமரா பாஸ்போர்ட்டில் உள்ள சிப்பை ஸ்கேன் செய்கிறது.

🍂 ஸ்கேன் செய்த பிறகு கதவுகள் திறக்கப்படுகின்றன. பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் பயணத்திலிருந்து அனைத்து நடவடிக்கைகளும் சிப்பில் பதிவு செய்யப்படுகின்றன.

🍂 கணினியின் உதவியால், பல ஆண்டுகள் பழமையான பதிவுகளையும் எளிதாகக் காணலாம். இந்திய அரசு எப்போது இ-விசா வழங்கத் தொடங்கும் என்பது குறித்துத் தற்போது தெளிவான தகவல் எதுவும் இல்லை.

இ-பாஸ்போர்ட்டை யார் தயாரிப்பார்கள்?

🍃 நாசிக்கில் உள்ள இந்தியா செக்யூரிட்டி பிரஸ்ஸிடம், எலக்ட்ரானிக் காண்டாக்ட்லெஸ் இன்லேஸ் மற்றும் இ-பாஸ்போர்ட்டுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை வாங்க மத்திய அரசு டெண்டர் கொடுத்துள்ளது.

🍃 நாசிக்கின் இந்தியா செக்யூரிட்டி பிரஸ் கொள்முதல் செயல்முறையை முடித்த பின்னரே இ-பாஸ்போர்ட்கள் வழங்கப்படும்.

பிற நாட்டு இ-பாஸ்போர்ட் இந்தியாவில் எப்படிச் செயல்படுகிறது?

🍁 தற்போது, இ-பாஸ்போர்ட்டில் உள்ள சிப்பை ஸ்கேன் செய்யக்கூடிய குடிவரவு நுழைவு வாயில்கள் நம் நாட்டில் இல்லை. இதுகுறித்து ப்ரீத்தி அஷுஹஜா கூறுகையில், 'கடவுச்சீட்டில் உள்ள சிப் இந்தியாவில் வேலை செய்யாது.

🍁 கடவுச்சீட்டில் உள்ள தாள்கள் குடிவரவு அதிகாரிகளால் முத்திரையிடப்படுகின்றன, அதன் பிறகு இந்தியாவுக்குள் நுழைய அனுமதி கிடைக்கிறது. அதாவது இ-பாஸ்போர்ட்டுக்கான உள்கட்டமைப்பும் உருவாக்கப்பட வேண்டும்." என்று தெரிவிக்கிறார்.

இ-பாஸ்போர்ட்டில் என்னென்ன முறைகேடுகள் சாத்தியம்?

🍀 சைபர் நிபுணர் பவன் துக்கல், இ-பாஸ்போர்ட் என்பது, சொல்வதற்கும் கேட்பதற்கும் மிகவும் நன்றாக இருக்கிறது. இ-பாஸ்போர்ட் வருவதால், இணையப் பாதுகாப்பில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

🍀 இது அரசாங்கத்திற்கு ஒரு சவாலாக இருக்கும். மின்னணு பாஸ்போர்ட்டின் தகவல்கள் திருடப்பட்டுத் தரவு தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளது. 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url