Search This Blog

தேநீர் என்று அழைக்கப்படும் Tea அருந்தும் பழக்கம் முதன்முதலில் | உணவு பற்றிய தகவல்கள் | உங்களுக்குத் தெரியுமா ? |


* சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இருக்கும் 'டக் ரெஸ்டாரண்ட்' ஒரே நேரத்தில் ஒன்பதாயிரம் பேர் வரை அமர்ந்து சாப்பிடும் அளவுக்கு பெரியதாம்.

* எந்த திட உணவும் சாப்பிடாது, வெறும் டீ மட்டும் 22 ஆண்டுகள் சாப்பிட்டு உயிர் வாழ்ந்தவர் ‘சத் பவர் பாய் டோபேர்’ என்பவர். இவர் இந்தியாவில், மகாராஷ்டிரா மாநிலம் உஸ்மானாயத் மாவட்டத்துக்காரர்.

* சிக்கரி செடியின் வேரிலிருந்து தான் சிக்கரித் தூள் தயாரிக்கப்படுகிறது.

* பீட்ரூட் ஒரு வகை கிழங்கு. இதில் துத்தநாகம் 910 மி.கிராம். கால்சியம், சோடியம், பொட்டாசியம் ஆகிய தாதுப்பொருட்கள் உள்ளன. உணவில் சேர்ப்பது உடல் நலத்திற்கு நல்லது.

* பாகற்காய் விட்டமின் சி. உள்ள காய். இரும்புச்சத்து உள்ளது. வயிற்றில் உள்ள பூச்சியைக்கொல்லும். சர்க்கரை நோயைக் கட்டுபடுத்தும். பசி ஏற்படுத்தும். நன்மை செய்யும் கசப்பான காய் இது.

* உருளைக் கிழங்கில் மாவுச்சத்து அதிகம். 22.6 கிராம். அதோடு விட்டமின் ஏ, விட்டமின் சி, மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகியவையும் உள்ளன.

* ஐரோப்பிய நாடுகளில் மிளகாய்க்குப் பதில் மிளகை அதிகம் பயன்படுத்தினர். இந்தியாவில் ஐரோப்பிய நாடுகள் இதனை இறக்குமதி செய்தனர். எவ்வித நஞ்சையும் முறியடிக்கும் சக்தி இதற்குண்டு.

* வாழைப்பழத்தில் 20 வகைச் சத்துக்கள் உள்ளன.

* இளநீரில் குளுக்கோஸ், வைட்டமின்-பி, கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து ஆகியவை உள்ளன.

* கரும்புச் சாறில் உள்ள சத்து கால்சியம் ஆகும்.

* தேனில் இருக்கும் சத்துக்கள் இரும்புச் சத்து, கார்போஹைட்ரேட், குளுக்கோஸ் ஆகும்.

* தேநீர் என்று அழைக்கப்படும் Tea அருந்தும் பழக்கம் முதன்முதலில் சீனாவில்தான் ஆரம்பிக்கப்பட்டது. ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன்பு – கி.மு.விலேயே இப்பழக்கம் தோன்றியது. சீனாவில் பால் சேர்க்காத ‘ப்ளாக் டீ’ – சர்க்கரை இல்லாது அருந்துவார்கள். பால் – ஜீனி சேர்த்து பருகும் பழக்கம் இந்தியாவில்தான் அதிகம். சீன சக்கரவர்த்தி ‘ஷன்நுங்’ என்பவர் இப்பழக்கத்தின் தந்தை. கி மு. 2337- ல் சீனாவில் டீ அறிமுகம். 1644 - ல் இங்கிலாந்தில் டீ அறிமுகம். 1800 கி,பி. முதல் உலக நாடுகளில் டீ பிரபலம் ஆனது.

கொதிப்பதற்கு வைத்த நீரில் எதிர்பாராவிதமாக விழுந்த தேயிலை... அதன்மூலம் உருவானதே இப்பழக்கம். இன்று உலகில் மாபெரும் பானமாக வளர்ந்திருக்கிறது. இந்தியா, இலங்கை தேயிலை உற்பத்தியில் சிறப்பிடம் பெறுகின்றன.

* கொத்தமல்லியில் வைட்டமின் பி, பி2 மற்றும் சி ஆகிய சத்துக்கள் உள்ளன.

* எவ்வளவு நாள் ஆனாலும் கெட்டுப்போகாத உணவு தேன்.

* மலை வாழைப்பழத்திலுள்ள சத்துக்கள் ‘செரடோனியம்’ ‘கொழுப்பு,வைட்டமின் –இ’ ஆகும்.

* கி.மு 500 ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் மிளகாய் செடியை பயிர் செய்திருக்கிறான். மனிதன் பயிர்செய்த தொன்மையான செடி வகைகளில் மிளகாயும் ஒன்று என தொல்பொருள் ஆராய்ச்சி கூறுகிறது.

* முட்டைக்கோஸ் உலகின் அனைத்து நாட்டு மக்களாலும் விரும்பி சாப்பிடப்படும் உணவுப் பொருளாகும்.

* பைபிள் காலத்தில் உப்பு சாட்சியாக சத்தியம் நடந்துள்ளது. இதனை உண்மையாக்க ‘உப்பு சாட்சியாக செய்த ஒப்பந்தம்’ என்ற வரிகள் பைபிளில் காணப்படுகின்றன. நம் நாட்டில் உப்பும், வெற்றிலையும் வைத்து சாட்சிகள் சத்தியம் செய்கின்றனர்.

* பேரீச்சம்பழத்தில் இரும்புச்சத்து உள்ளது.

* சாதாரண கோழிகளின் முட்டைகளை  வேக வைக்க சுமார் நான்கு நிமிடமாகும். ஆனால் நெருப்புக் கோழியின் முட்டையை வேக வைக்க சுமார் 40 நிமிடங்கள் வரை ஆகின்றன.

* அன்னாசிப்பழம் என்று நாம் எல்லோரும் வழக்கத்தில் சொல்கிறோம். ஆனால் உண்மையில் அது பழமல்ல. பல மலர்கள் சேர்ந்து ஒரு கொத்துதான் அது. இதற்கு விதையும் கிடையாது. தலைப்பகுதி சிறு இலைக் கொத்தைக் கிள்ளி நட்டுதான் இது வளர்க்கப்படுகிறது. பலாச்சுளைகூட பல பூக்களின் தொகுப்பு என்பர்.

* ஒட்டகப் பால் திரவ வடிவில் இருக்கும். கறந்ததும் அப்படியே கட்டியாகி விடும். மிகவும் சத்து நிறைந்தது.

* பாலில் இரும்புச்சத்து கிடையாது. கீரை வகைகளில் இவை உள்ளன.

* திராட்சையில் உள்ள சத்துகள் நீர்ச்சத்து, மாவுச்சத்து, புரதச்சத்து, தாதுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்-சி, இரும்புச்சத்து, பொட்டாசியம் ஆகியனவாகவும்.

* கோதுமையின் தாயகம் இத்தாலி.

வெற்றிலையின் தாயகம் மலேசியா.

வெங்காயத்தின் தாயகம் எகிப்து.

உருளைக்கிழங்கின் தாயகம் பெரு .

சுரியகாந்தியின் தாயகம் வடஅமெரிக்கா.

முந்திரியின் தாயகம் பிரேசில்.

* மனிதர்கள் தனது ஆயுளில் 60,000 பவுண்டு அளவு உணவை உட்கொள்கின்றனர் . இது ஆறு யானைகளின் எடைக்கு சமமானது.

* டென்மார்க் நாட்டின் கிறிஸ்துமஸ் விருந்தில் முக்கிய இடம் வகிக்கும் உணவு அரிசி உணவுதான்.

* தேங்காய்ப்பாலில் மீனை சுட்டும் சாப்பிடும் மக்கள் பனாமா நாட்டினர்.

* ‘குயிஸ்’ என்ற புதிய பானம் குதிரைப் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

* பாலில் இரும்புச்சத்து மட்டும் இல்லை.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url