Search This Blog

ஆங்கில புத்தாண்டு வரலாறு History of English New Year


ஆங்கிலப் புத்தாண்டு! 




"உலகம் முழுக்க ஜாதி, மதம், இனம், தேசம் கடந்து அனைவராலும் கொண்டாடப்படுவது 'ஆங்கிலப் புத்தாண்டு'."

அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 ஆம் தேதி 'ஆங்கிலப் புத்தாண்டாக' கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. இதன் வரலாறு என்ன? வாருங்கள் இந்தக் கட்டுரையின் வாயிலாகப் பார்ப்போம்.

தெரியுமா உங்களுக்கு?

கடந்த 500 ஆண்டுகளாகத் தான் ஜனவரி 1 ஆம் தேதியை நாம் புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறோம்.

ஆனால் அதற்கு முன்னால்!.

மெசபடோனியர்கள், மார்ச் 25-ந் தேதியைத் தான் ஆண்டின் முதல் நாளாகக் கருதினர். அவர்கள் காலத்தில், ஆண்டுக்கு 10 மாதங்கள் தான் இருந்தது. மார்ச் மாதம் ஆண்டின் முதல் மாதமாகவும், மார்ச் 25-ந் தேதி ஆண்டின் முதல் தேதியாகவும் இருந்தது. இயேசுவின் தாய் மேரி கர்ப்பமுற்ற தேதி என்பதால் இந்த நாளை புத்தாண்டு தினமாக அனுசரித்தனர்.

மெசபடோனியர்கள் இப்படி என்றால், ரோமானியர்களோ!.

சூரியனின் நகர்வினை அடிப்படையாகக் கொண்டு ரோமானியர்களின் காலண்டரின் மார்ச் 1 ம் தேதியே புத்தாண்டு தினமாக கொண்டாடத் தொடங்கினர். ரோமானிய மன்னர்களில் ஒருவரான, நுமா போம்பிலியஸ் என்பவர், 10 மாதமாக இருந்த ஆண்டில், கூடுதலாக இரண்டு மாதங்களைச் சேர்த்து, ஒரு ஆண்டுக்கு 12 மாதங்கள் என்றாக்கினார். முதல் இரண்டு மாதங்களுக்கு ஜனவரி, பிப்ரவரி என்று பெயர்கள் வைத்தனர். ரோமர்களின் கடவுளான ஜனஸ் நினைவாகத் தான் ஜனவரி என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. அதுவே, இப்போதும் கடைபிடிக்கப்படுகிறது.

ஜனவரி 1 ஐ புத்தாண்டாக அறிவித்தவர் இவரே!.

ரோமானிய மன்னர் ஜுலியஸ் சீசர்தான், ஜனவரி 1-ந் தேதியை ஆண்டின் முதல் நாளாக அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். அதை, இயேசு பிறப்பதற்கு 46 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது கி.மு. 46 ஆம் ஆண்டில் அறிவித்தார். அவர் பின்பற்றிய காலண்டர் முறை, ஜுலியன் காலண்டர் முறை என அழைக்கப்பட்டது.


"உலகம் முழுக்க ஜாதி, மதம், இனம், தேசம் கடந்து அனைவராலும் கொண்டாடப்படுவது 'ஆங்கிலப் புத்தாண்டு'."

இதன் பகுதி-1 கீழே உள்ள தொடர்புடைய கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு இடையே புத்தாண்டு குறித்து நிலவிய சில குழப்பங்கள் வருமாறு.

இங்கிலாந்து மன்னர், இயேசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25ஆம் தேதியை புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்று கூறினர். அதன் பின்னர் டிசம்பர் 25 ஆம் தேதியையே புத்தாண்டாக பின்பற்றினர். இப்படியாக , 1500 ஆம் ஆண்டு வரை, ஆண்டின் முதல் தேதியில் பல குழப்பங்கள் நிலவியது குறிப்பிடத்தக்கது.

கிரிகோரியன் காலண்டர் வந்த பிறகு தீர்ந்தது குழப்பம். அதன் வரலாறு வருமாறு.

கி.பி. 1582 ஆம் ஆண்டு, போப் 13 ஆம் கிரிகோரி, ஜுலியன் காலண்டரை ரத்து செய்தார். நான்காண்டுகளுக்கு ஒரு ஆண்டு லீப் ஆண்டு என்று கூறி, அந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்துக்கு 29 நாட்கள் என்று 365 நாட்களையும், 12 மாதங்களுக்குள் மிகச் சரியாக அடக்கினார். இதனையடுத்து உலகம் முழுவதும் கிரிகோரியன் காலண்டர் முறை நடைமுறைக்கு வந்தது. இதன்படி, ஆண்டின் முதல் நாள் ஜனவரி 1 என்று நிர்ணயிக்கப்பட்டது. அதன் முதல் கடந்த 500 ஆண்டுகளாக ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு தினமாக உலகம் முழுவதுமுள்ள மக்களால் அனுசரிக்கப்பட்டு வருகிறது.


"இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2023"

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url