Search This Blog

மனித உடலில் உள்ள உறுப்புகளில் கடைசியாகச் செயலிழப்பது எது? நம் உடல் பற்றி அறியாத சில தகவல்கள் | Facts

நம் உடல் பற்றி அறியாத சில தகவல்கள் | Fact

* மனித மூளையின் நிறம் சாம்பல் நிறம்.

* ரத்தவகை ஆயுள் முழுவதும் மாறாது.

* மனித உடலில் வினாடிக்கு 15 மில்லியன் ரத்தச் சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகின்றன. அதேசமயம் அழியவும் செய்கின்றன.

* மனித உடலில் உள்ள ஐம்புலன்களின் உறுப்புகளில் கடைசியாகச் செயலிழப்பது காது.

* இடது நுரையீரலை விட அதிகமான காற்றை வலது நுரையீரல் உள் வாங்குகின்றது.

* மனித மூளையின் நினைவுத்திறன் நான்கு டெராபைட் அளவை விட அதிகமானது.

* நமது நாக்கின் நீளம் 10 செ.மீ. எடை 56 கிராம். சுவை அறியும் சுவை மொட்டுகள் நாக்கில் உள்ளன. அதன் மூலம் சுவை அறிய முடிகிறது. பேசும் சாதனம். உமிழ்நீர் சுரக்கும் இடம். நுனி நாக்கில் உப்பு சுவை மொட்டுகள், நடுவில் இனிப்பு சுவை அறியும் மொட்டுகள், உள் நாக்கில் கசப்பு சுவை மொட்டுகள், நாக்கின் ஓரத்தில் காரச்சுவை உணரும் மொட்டுகள் உள்ளன.

* நமது நாக்கில் உள்ள சுவை மொட்டு 3ஆயிரம்.

* நமது தலையின் எடை அளவு 3,175 கிலோ கிராம்.

* நமது உடலில் 600 தசைகள் உள்ளன.

* நமது உடலில் இருக்கும் கொழுப்பைக் கொண்டு 7 சோப்புகள் செய்யலாம்.

* மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு தோல்.

* மனித உடலில் இருக்கும் இரத்தம் 30 அடி தூரம் வரை பீய்ச்சியடிக்கும் தன்மையுடையது.

* மூளையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் சத்துப்பொருட்கள் புரதச்சத்து ஆகும்.

* ஒரு மனிதனுக்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு ஒரு கிலோ உண‌வும், ஒன்றரை லிட்டர் தண்ணீரும் தேவை. இதே போல் 12 கிலோ காற்றும் சுவாசிப்பதற்கு தேவை.

* தும்மலின் வேகம் மணிக்கு 160 கிலோ மீட்டர்.

* ‘மெலனின்’ என்று ஒரு ரசாயனப் பொருள்தான் நமது உடம்பின் தோலுக்கு நிறம் கொடுக்கிறது.

* ஒரு நாளில் நமது இரத்தம் 30 கோடி கி.மீ பயணம் செய்கிறது.

* நுரையீரல்கள் 23 ஆயிரத்து 40 தடவைகள் சுவாசிக்கின்றன.

* இதயம் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 689 தடவைகள் துடிக்கிறது.

* குழந்தை பிறந்த போது 270 எலும்புகள் இருக்கும். பிறகு சேர்ந்து 206 எலும்புகள் நிலைக்கும்.

* கைரேகையைப் போலவே நாக்கிலுள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

* மனித உடலில் சதை அழுத்தமாக உள்ள பகுதி நாக்கு.

* மனிதர்களின் இரண்டு பக்க மூக்குத் துவாரங்களும் நுகர்வதர்கு வெவ்வேறாக செயல்படுகின்றன மனதுக்கு பிடித்த வாசனைகளை இடது பக்கத்தைக் காட்டிலும், வலது பக்கத் துவாரங்களே அதிகம் உணருகின்றன. எனினும், சரியான வாசனைகளைத் துல்லியமாக உணர இடது பக்கமே உதவுகிறது.

* மூக்கை அடைத்துக்கொண்டு ஆப்பிளையோ உருளைக்கிழங்கையோ வெங்காயத்தையோ சாப்பிட்டால் எல்லாம் ஒரே ருசியாகத்தான் தெரியும்.

* ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது, நமக்கு வாசனை உணர்வுகள் ஏற்படாது.

* கோபம் மிகும்பொது முகத்திலுள்ள சிறு நாளங்கள் விரிந்து அதிக இரத்தம் பாய்கிறது. அதனால் முகம் சிகப்பாகிறது.

* நம் உடலில் அதிகம் உள்ள சுரப்பி வியர்வைச் சுரப்பிகளே. ஏறத்தாழ 20 லட்சம் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன.

* 'ஆக்சிஜன் படகு' எனப்படுவது ஹீமோகுளோபின்.

* மனித உடலில் ஒன்பது துவாரங்கள் உள்ளன.

* நம் உடலில் உள்ள தசைகளின் எண்ணிக்கை 830.

* நமக்கு களைப்பு ஏற்படும்போதும், மூளை சோர்வு அடையும்போதும், இதனை நமக்கு அறிவிக்கும் செயலே கொட்டாவி ஆகும்.

* நாம் உண்ணும் உணவில் அதிகப்படியாக புரதப் பொருள் இருந்தாலும், புளிப்பு பொருள்கள் இருந்தாலும் இவற்றை சிதைக்கும்பொழுது ஏற்படும் வாயு ஏப்பமாக வெளிவருகிறது.

* உதரவிதானம் சரிவர சுருங்கி விரிந்து செயல்பட முடியாத போது ஏற்படும் சுவாச சிக்கலே விக்கலாக மாறுகிறது.

* உணவுப் பாதையில் செல்லவேண்டிய உணவுத் துணுக்குகள் சுவாசப் பாதையில் பாதை மாறி நுழையும் பொது பொரை ஏறுதல் நிகழ்கிறது.

* சராசரியாக 800 மில்லி லிட்டர் ரத்தம் ஒவ்வொரு நிமிடமும் நம் மூளைக்குள் பாய்கிறது.

* ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் ஆங்கிலத்தில் லூகோ சைட்டிங் எனப்படும்.

* நம் கையின் கட்டை விரல் நகம்தான் மிகவும் மெதுவாக வளர்கிறதாம். வேகமாக வளர்வது நடு விரல் நகம்.

* உடல் உறுப்புகளில் தானாகவே இயங்கும் உறுப்பு இதயம் ஆகும்.

* பையோபியா நோய் கண்ணைப் பாதிக்கும்.

* மனித உடலில் இரத்தம் பாயாத இடம் விழி வெண் படலம். அதற்கு இரத்தமே செல்வதில்லை. தனக்குத் தேவையான ஆக்ஸிஜெனை அது காற்றிலிருந்து எடுத்துக் கொள்கிறது.

* மனித உடலில் வியர்வைச் சுரப்பிகள் உண்டு. ஆனால் பறவைகளுக்கு வியர்வைச் சுரப்பி கிடையாது அதனால் அதற்கு வியர்ப்பது இல்லை.

* இரத்தம் உறைவதற்குத் தேவையான தாது கால்சியம்.

* மனிதனின் சுவாசத்தைக் கட்டுப்படுத்துவது முகுளம்.

* மனிதக் கண்களின் எடை 1.5 அவுன்சுகள் மட்டுமே ஆகும்.

* மனிதனின் இதயத்துடிப்பு சராசரி ஒரு நிமிடத்திற்கு 72 முறை.

* நமது உடலிலிருந்து தினமும் 0.8 லிட்டர் வியர்வை வெளியேறுகிறது.

* நமது உரோமம் 0.004285 சென்டி மீட்டர் வளர்கிறது.

* பெண்களைக்காட்டிலும் 40  சதவீதம் அதிகமாக ஆண்களுக்கு வியர்க்கிறது.

* நமது உடலில் வியர்க்காத பகுதி உதடு.

* கை விரல்களில் சுட்டு விரலுக்கு உணர்வு அதிகம்.

* சுவாசித்தல் சிதை மாற்றம் எனும் வழியின் கீழ் அடங்கும்.

* மாலைக்கண் நோய் A வைட்டமின் குறைவால் ஏற்படும்.

* இரும்புச்சத்துக் குறைவால் சோகை நோய் ஏற்படுகிறது.

* எலும்புகளுக்கு தேவையான பொருள் கால்சியம்.

* நமது உடல் 866 டிகிரி வெப்பத்தை வெளியேற்றுகிறது.

* கல்லீரலில் சுரக்கப்படுவது பித்தநீர். இது உணவு செரிமானத்திற்கு உதவுகிறது

* நமது உரோமம் 0.04285 செ.மீ. வளர்கிறது.

* நமது விரல் நகம் 0.00115 செ.மீ. வளர்கிறது.

* நமது இதயம் 1,03,689 முறை துடிக்கிறது.

* நாம் 76,09,000 மூளை அணுக்களுக்கு வேலை தருகிறோம்.

* உடலில் மிகத் துரிதமாக செய்தியைக் கடத்துவது நரம்பு மண்டலம்தான். இது ஒரு மணி நேரத்தில் 283 கி.மீ. வேகத்தில் செய்தியைக் கடத்துகிறது.

* நாம் தூங்கும்போது எல்லா உறுப்புகளும் ஒரே நேரத்தில் ஓய்வெடுப்பதில்லை. முதலில் கண்கள், பின்பு காது, தோல் என ஒவ்வொன்றாக ஓய்வெடுக்கத் துவங்கும்.

* இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாகும் இடம் எலும்பு மஜ்ஜையில்.

* ஒரு நபர் இறந்த பிறகும் அவரது உடலில் இருந்து வாயு வெளியேறலாம். ஒருவரது உடலில் இருக்கும் எந்த வகையான வாயுவாக இருந்தாலும், இறந்த பிறகு தசைகளில் ஏற்படும் இறுக்கத்தால் வாயு தானாக உடலில் இருந்து வெளியேறிவிடும்.

* நாம்  தும்மும் போதும் சில மில்லிசெகண்ட்  நம் இதயம் துடிப்பதை நிறுத்தும் எனவே தான் அனைவரும் “God Bless you” என்று சொல்கிறார்கள்.

* நீங்கள் மிகவும் கடினமாக தும்மின்னால், விலா எலும்பு முறிவு ஏற்படவும் வாய்ப்புள்ளது. தும்மலை கட்டுப்படுத்த  முயற்சி செய்தால், நீங்கள் தலையில் அல்லது கழுத்தில் ஒரு இரத்த நாளத்தை முறித்து இறக்க நேரிடலாம்.

* உடலில் வலுவான தசை நாக்கு.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url