டிசம்பர் 28 - மாசற்ற குழந்தைகள் தினம்
மாசற்ற குழந்தைகள் தினம்
"'யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல், அரசியல் என்பது ரத்தம் சிந்தாத யுத்தம்' என்பார்கள்."
இன்று மாசற்ற குழந்தைகள் தினம்.
"எல்லா குழந்தைகளுமே மாசற்ற குழந்தைகள் தானே? இதற்கு எதற்கு ஒரு தினம்? இந்தப் 'பேசும் ரோஜாக்களை' கௌரவிக்க இருக்கவே இருக்கிறதே குழந்தைகள் தினம்? என்றெல்லாம் உங்களுக்குள் கேள்வி எழலாம் எழுவது இயற்கையே.
அப்படி எழும் பட்சத்தில் உங்களுக்காக இந்தக் கட்டுரையை எழுதுகிறோம்.
அக்காலத்தில் இந்த 'அரசியல்' என்பது ராஜாக்களின் கைகளிலும், பெரும் செல்வந்தர்களின் கைகளிலும் பகடையாக இருந்தது. அதில் அடிக்கடி சிக்கிச் சின்னாபின்னமானது என்னமோ நம்மைப் போன்ற பொதுமக்கள் தான். அன்றும், இன்றும், என்றும்
அந்த வகையில், எல்லா நாடுகளிலும், எல்லா ஊர்களிலும், எல்லா காலத்திலும், நூற்றாண்டுக்கு ஒரு 'கம்சன்' இந்த பூமியில் வாழ்ந்திருக்கிறான். அப்படி இயேசு பிறந்த சமயத்தில் 'மகா ஏரோது' ஒருவன் யூதர்களின் அரசனாக இருந்தான்.
"யூதர்களின் ராஜா பிறந்து விட்டார்!" என்று இயேசுவை குறித்து ஞானிகள் சொன்ன மாத்திரத்தில், ஏரோதுவின் கண்கள் சிவந்தது. 'தனது பரம்பரை அரசாட்சி போய்விடுமே!' என்று கவலை கொண்டான். இயேசுவை கொல்ல சித்தம் கொண்டான்.
ஆனால், "இயேசு எங்கு பிறந்திருக்கிறார்? அந்தக் குழந்தை இயேசு எப்படி இருப்பார்? என்பது ஏரோதுக்குத் தெரியாமல் போகவே. பிறந்த பச்சிளம் குழந்தைகள் அனைவரையும் கொல்ல உத்தரவு பிறப்பித்தான் அந்த மகா கொடியவன். அப்படி கொலைசெய்யப்பட்டு இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை நிச்சயம் கணக்கில் அடங்காது. ஆனால், அப்படி கொலை செய்யப்பட்டு இறந்த குழந்தைகள் எத்தனை பேர் என்பதைக் குறித்து வேதாகமத்தில் இல்லை. எனினும், குழந்தை இயேசு அதில் இருந்து இறை சித்தத்தின் படி தப்பித்தார்.
அதன் பிற்பாடு நூற்றாண்டுகள் கடந்து 'மகா ஏரோதுவால்' கொல்லப்பட்ட குழந்தைகளை நினைவு கூறும் வகையில் "மாசற்ற குழந்தைகள் தினம்" கடைபிடிக்கப்படுகிறது. இன்று அந்த தினம்.