Search This Blog

மனிதக் கணிணி சகுந்தலா தேவி! Human Computer Shakuntala Devi


கணிதமேதை சகுந்தலா தேவி!


 'கணிதமேதை சகுந்தலா தேவி'

சகுந்தலா தேவி (நவம்பர் 4, 1929 - ஏப்ரல் 21, 2013) ஒரு இந்தியக் கணித மேதை. பெங்களூரில் பிறந்த அவள் தந்தை ஒரு "பிராமணர் சர்க்கஸ்" இல் பணிபுரிந்தார்.


 அவருக்கு மூன்று வயது இருந்த போது, அவள் தந்தையுடன் சீட்டு வித்தைகள் செய்த பொழுதே அவரின் கணிதத் திறன் புலப்பட்டது. இவரது கணிதத் திறமையை கண்ட இவர் தந்தை தன் சர்க்கஸ் வேலையை விட்டுவிட்டு சகுந்தலாவின் கணிதத் திறனை தெருக்களில் நிகழ்த்திக் காட்டினார்.

 சகுந்தலாவால் எந்த ஆரம்பக் கல்வியும் இல்லாமலே இத்தகைய கணிதத் திறனை வெளிப்படுத்த முடிந்தது. அவருக்கு ஆறு வயது இருந்த போது 'மைசூர் பல்கலைக்கழகத்தில்' அவரது கணக்கு மற்றும் நினைவாற்றல் திறமைகளை வெளிப்படுத்தினார்.

 எட்டு வயதில் அவர் அதையே அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் செய்து வெற்றி பெற்றார்.

1944 ல் தன் தந்தையுடன் லண்டன் சென்ற சகுந்தலா 1960 ன் மத்தியில் இந்தியா திரும்பினார்.

 கொல்கத்தாவை சேர்ந்த 'பரிடோஸ் பேனர்ஜி' என்னும் IAS அதிகாரியை மணந்தார். இவர்களுக்கு 1979 ல் விவாகரத்து ஆனது.1980 ல் சகுந்தலா பெங்களூருக்குத் திரும்பினார் .

 'சகுந்தலா தேவி' தனது கணிதத் திறனை காண்பிக்க உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டார். இவற்றில் 1950ல் ஐரோப்பா மற்றும் 1976 ல் நியூயார்க் பயணமும் முக்கியமானவை. 1988 ல் 'ஆர்தர் ஜென்சென்' என்ற கலிபோர்னியா பல்கலைகழக உளவியல் பேராசிரியர் தேவியின் கணிதத் திறனை பரிசோதித்தார்.

 அவற்றில் பெரிய எண்களை கொண்ட கணக்குகளும் அடக்கம். உதாரணமாக 61,629,875 என்ற எண்ணின் கன மூலமும், 170,859,375 என்ற எண்ணின் ஏழாவது மூலமும் கேட்கப்பட்டன.


 இதில் விந்தை என்னவெனில் ஆர்தர் கேள்வியை தேவியிடம் கேட்டுவிட்டு அவரது நோட்டு புத்தகத்தில் கேள்வியை குறிப்பதற்குள் தேவி பதிலைத் துல்லியமாக சொன்னது தான்.1990ல் ஆர்தர் தனது ஆய்வின் முடிவை intelligence என்ற கல்வி இதழில் வெளியிட்டார்.

'சகுந்தலா தேவி' ஜோதிடத்திலும் தேர்ந்தவர் ஆவார். இவர் சமையல் குறிப்பு, கற்பனை நாவல்கள், புதிர் புத்தகங்கள் பலவற்றை எழுதி உள்ளார்.

 கணித மேதை சகுந்தலா தேவி தான் இந்தியாவில் ஒரு பால் ஈர்ப்பை பற்றி மிகவும் வெளிப்படையாக முதலில் "The World of Homosexuals" எனும் புத்தகத்தை எழுதியவர். 


'சகுந்தலா தேவி'அ வர்களின் சாதனைகள் வருமாறு: 


1977ல் 188,132,517 என்ற எண்ணின் கன மூலத்தை வேகமாக கணக்கிடுவதில் கணினியை தோற்கடித்தார். அதே ஆண்டில், தெற்கு 'மெத்தடிஸ்ட் பல்கலைக்கழகத்தில்' அவர் ஒரு 201 இலக்க எண்ணின் 23வது மூலத்தை 50 நொடிகளில் 546,372,891 எனக் கணக்கிட்டார். ஆனால் அதனை சரிபார்க்க 'U.S. Bureau of Standards' யுனிவாக் 1101 என்ற கணினியில் சிறப்பு நிரல் ஒன்றை நிறுவியது குறிபிடத்தக்க விஷயமாகும்.


 ஜூன் 18, 1980ல் இம்பீரியல் கல்லூரி, லண்டன் கணினி துறை மூலம் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் இரண்டு 13 இலக்க ஐக்கிய எண்கள் 7,686,369,774,870 × 2,465,099,745,779 லை பெருக்கி சரியாக 28 வினாடிகளில் 18.947.668.177.995.426.462.773.730 பதில் அளித்தது கின்னஸ் சாதனை புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 1977ல் அவர் ஒரு 201 இலக்க எண்ணின் 23வது மூலத்தை கணக்கிட்டார். இதை யூனிவாக்-1108 என்ற கணினியை விட 12 வினாடிகள் விரைவாக செய்து முடித்தார். 


தேவியின் பிறந்த நாளான நவம்பர் 4 2013ல் கூகிள் நிறுவனம் தனது முகப்பு பக்கத்தில் சகுந்தலா தேவியின் படத்தை வெளியிட்டு அவருக்கு மரியாதையை செய்தது குறிப்பிடத்தக்கது. 


இவரின் மறைவிற்குப் பிறகு 2020-ஆம் ஆண்டில், அதி வேக மனித கணக்கீட்டாளர் என கின்னஸ் சாதனை விருது இவருக்கு வழங்கப்பட்டது.

'சகுந்தலா தேவி' அவர்களின் மறைவு: 'சகுந்தலா தேவி' ஏப்ரல் 2013 இல், சுவாசப் பிரச்சனைகளால் பெங்களூரு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 அடுத்த 2 வாரங்களில் அவர் இதயம் மற்றும் சிறுநீரகம் சம்மந்தமான சிக்கல்களால் அவதிப்பட்டார். அதன் பின்னர், சகுந்தலா தேவி ஏப்ரல் 21, 2013 இல் மருத்துவமனையில் தனது 83 வது வயதில் இறந்தார். தேவிக்கு 'அனுபமா பானர்ஜி' என்ற மகள் உள்ளார்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url