Search This Blog

B.Ed, D.T.Ed இறுதி ஆண்டு மாணவர்கள் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) - 2022 Press News

ஆசிரியர் தேர்வு வாரியம்
 பத்திரிக்கை செய்தி 

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2022 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கை ( 17.03.2022 அன்று வெளியிடப்பட்டு , விண்ணப்பங்கள் இணைய தளம் வாயிலாக 14 : 03.2022 முதல் பெறப்பட்டு வருகிறது . விண்ணப்பங்கள் பெற கடைசி தேதி 13.04.2022 ஆகும் .

 ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கையில் பக்கம் எண் 4 , வரிசை எண் 3 ( b ) யில் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 க்கான கல்வித் தகுதிகள் குறித்தான வரையரையில் பட்டப்படிப்பு முடித்து பி.எட் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் Bonafide Certificate- னை அடிப்படையாகக் கொண்டு விண்ணப்பிக்க Online விண்ணப்பத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது . மேலும் அறிவிக்கையின் பக்கம் எண் 2 , வரிசை எண் 3 ( a ) ல் தாள் ! க்கான கல்வித் தகுதிகள் குறித்தான வரையரையில் மேல்நிலைக் கல்வி முடித்து இறுதியாண்டு ஆசிரியர் கல்வி பட்டயப்படிப்பு ( Diploma in Teacher Education ) படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் Bomufide Certificate- னை அடிப்படையாகக் கொண்டு விண்ணப்பிக்க Online விண்ணப்பத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது . 


எனவே , பி.எட் இறுதியாண்டு  மற்றும் ஆசிரியர் கல்வி பட்டயப்படிப்பு ( Diploma in Teax.her Education ) இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் Bonafide Certificate- னை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது . 

நாள் : 09.04.2022 .
 இடம் சென்னை -6 . தலைவர்

TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) - 2022 Press News  pdf 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url