மயில்சாமி அண்ணாதுரை
மயில்சாமி அண்ணாதுரை
இளைய கலாம் ' என்று அன்புடன் இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் , கோதவாடி என்னும் சிற்றூரில் பிறந்தவர் .
11 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் தமிழ்வழியில் படித்தவர் . இதுவரை 5 முனைவர் பட்டங்கள் பெற்றுள்ளார் .
1982 ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணியில் சேர்ந்த இவர் தற்போது இயக்குநராகப் பணிபுரிகிறார் .
நம் நாடு நிலவுக்கு முதன் முதலில் அனுப்பிய ஆய்வுக்கலம் சந்திரயான் -1 திட்டத்தின் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர் .
சந்திரயான் - 2 திட்டத்திலும் பணியாற்றிவருகிறார் .
சர்.சி.வி. இராமன் நினைவு அறிவியல் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் .
தமது அறிவியல் அனுபவங்களை , கையருகே நிலா என்னும் நூலாக எழுதியுள்ளார் .