Search This Blog

TNTET paper-I Science Box questions Do you know 5th STD term -III

ஐந்தாம் வகுப்பு மூன்றாம் பருவம்


1. தமிழ்‌ நாட்டின்‌ கிருஷ்ணகிரி மாவட்டத்தில்‌ உள்ள ஓகூறில்‌ அமைந்துள்ள "மாவட்ட
கால்நடைப்‌ பண்ணை" District livestock Farm) எனும்‌ பண்ணையே ஆசியாவிலேயே மிகப்‌ பெறிய கால்நடைப்‌ பண்ணை ஆகும்‌. இதன்‌ மொத்த நிலப்பரப்பு 1641 ஏக்கர்‌.

2. உலகிலேயே இந்தியாதான்‌ அதிக எண்ணிக்கையிலான கால்நடைகளைக்‌
கொண்டுள்ளது. மொத்தம்‌ 280 மில்லியன்‌ கால்நடைகள்‌ இங்கு உள்ளன. 2008 ஆம்‌ ஆண்டு 175 மில்லியன்‌ கால்நடைகளுடன்‌ இந்தியா இரண்டாம்‌ இடத்தில்‌ இருந்தது.

(ஒருமில்லியன்‌ - பத்து லட்சம்‌).

3. பால்‌ உற்பத்தியில்‌ தன்னிறைவு அடைவதற்காக 1970களில்‌ இந்தியாவில்‌ வெண்மைப்‌ புரட்சி ஆரம்பிக்கப்பட்டது. டாக்டர்‌ வர்கீஸ்‌ குறியன்‌ வெ ண்மைப்‌ புரட்சியின்‌ தந்தை என்று அழைக்கப்பருகிறார்‌.

4. கோழி வளர்ப்பில்‌ இந்தியா
உலகிலேயே ஐந்தாவது இடத்தில்‌ உள்ளது. வெள்ளை ஸெக்கான்‌ கோழிகளே உலகிலேயே அதிக அளவில்‌ முட்டை இரும்‌ கோழிகள்‌ ஆகும்‌.

5. முட்டையில்‌ கால்சியம்‌, பாஸ்பரஸ்‌ மற்றும்‌ சோடியம்‌ போன்ற தாது உப்புகளும்‌, வைட்டமின்கள்‌ B1, B2 மற்றும்‌ D போன்ற ஊட்டச்சத்துக்களும்‌ அடங்கியுள்ளன. 
முட்டையில்‌ காணப்பரும்‌ ஊட்டச்‌
சத்துகள்‌: 
நீர்‌ - 66%, 
புரதம்‌ - 21%,
கொழுப்பு - 9%, 
தாது உப்புகள்‌ - 4%

6. ஒரு வேலைக்காரத்‌ தேனீ ஒரு
பவுண்ட்‌ தேன்‌ சேகறிக்க 90,000
மைல்‌, அதாவது பூமியை மூன்று
முறை சுற்றிவர வேண்டும்‌.

7. தேனீக்கள்‌ மணிக்கு 6 மைல்‌
வேகத்தில்‌ ஒரு நாளைக்கு 15
மைல்கள்‌ பறக்கக்கூடியவை.

8. தேன்‌ ஒரு அற்புதமான இயற்கை இனிப்பு ஆகும்‌. இது திரவத்‌ தங்கம்‌ என்றும்‌ அழைக்கப்படுகிறது.

9. நாம்‌ காணக்கூடிய சாதாரண
மண்புழுக்கள்‌ மண்புழு உரம்‌ தயாரித்தலில்‌ பயன்பருத்தப்படுவதில்லை. கூட்டாக வாழ்ந்து பெருகும்‌ தண்மையுடைய சிறப்பு வகை மண்புழுக்களே இதற்கு பயன்பருத்தப்பருகின்றன.


10. சிவப்பு ஊர்ந்தி (ரெட்‌ விக்லர்ஸ்‌) ஐரோப்பிய க்ராலர்ஸ்‌, ஆப்பிரிக்க க்ராலர்ஸ்‌ போன்ற மன்புழு வகைகள்‌ பொதுவாக இதற்குப்‌ பயன்பருத்தப்பருகின்றன.

11. இரண்ட விதமான வாழ்க்கை
முறைகளைக்‌ கொண்ட விலங்குகள்‌ நீர்நில வாழ்விகள்‌ எனப்பருகின்றன.
இவை ஆரம்ப நிலையில்‌ நீரில்‌
வாழ்கின்றன. வளர வளர நிலத்தில்‌ வாழ ஆரம்பிக்கின்றன. தவளை
போன்ற நீர்நில வாழ்விகள்‌
ஆயிரக்கணக்கான, சில வேளைகளில்‌ லட்சக்‌ கணக்கான மென்மையான சிறிய முட்டைகளை நீரில்‌ இருகின்றன.

12. ஒரு விலங்கின்‌ எண்ணிக்கை ஒரு
வருடத்தில்‌ 50 க்கும்‌ கீழே
குறைந்தாலோ அல்லது மூன்று
வருடங்களில்‌ 250 க்கும்‌ கீழே
குறைந்தாலோ அது அழியும்‌ நிலையில்‌ உள்ளதாகக்‌ கருதப்படும்‌.

13. சமீப காலங்களில்‌ அதிக எண்ணிக்கையிலான விலங்குகள்‌ நெகிழிக்‌ குப்பையினால்‌
பாதிக்கப்பட்ருள்ளன. விலங்குகள்‌ நெகிழியை உணவு என நினைத்து சாப்பிட்டு விடுகின்றன. சென்னையில்‌ அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவப்‌ பல்கலைக்கழகத்தில்‌ சமீபத்தில்‌ கால்நடை மருத்துவர்கள்‌ ஒரு பசுவின்‌ வயிற்றில்‌ இருந்து 52 கிகி நெகிழியை அகற்றியுள்ளனர்‌.

14. வங்கப்‌ புலிகளைக்‌ காப்பதற்காக 1972 இல்‌ புலிகள்‌ பாதுகாப்புத்‌ திட்டம்‌ ( Project Tiger ) ஒன்றை உருவாக்க வரைவு கொண்டுவரப்பட்டு
சட்டம்‌ இயற்றப்பட்டது. இத்திட்டத்தின்‌ மூலம்‌ இந்தியாவில்‌ புலிகளின்‌ எண்ணிக்கை
அதிகரித்துள்ளது. 2006 இல்‌ 1400 ஆக இருந்த புலிகளின்‌ எண்ணிக்கை 2018 இல்‌ 2967 ஆக அதிகரித்துள்ளது.

15. இந்தியாவின்‌ சிவப்பு புள்ளி விவர புத்தகம்‌ இந்திய துணைக்‌
கண்டத்திலுள்ள விலங்குகள்‌ மற்றும்‌ தாவரங்களின்‌ பாதுகாப்பு நிலை குறித்த தகவல்களைக்‌ கொண்ருள்ளது.
இந்திய விலங்கியல்‌ மதிப்பாய்வு மற்றும்‌ இந்திய தாவரவியல் மதிப்பாய்வு ஆகிய இரு அமைப்புகளின்‌ மதிப்பீருகள்‌ இப்புத்தகத்திற்குத்‌ தேவையான புள்ளி
விவரங்களைத்‌ தருகின்றன.

16. ஐக்கிய நாருகள்‌ கல்வி, அறிவியல்‌ மற்றும்‌ பண்பாட்கு அமைப்பானது UNESCO காஸிரங்கா பூங்காவை வனவியல்‌ பாரம்பரிய களமாக பிரகடனப்‌ படுத்தியுள்ளது.

17. கோடியக்கரை பறவைகள்‌ சரணாலயம்‌ - நாகபட்டினம்‌

கரைவெட்டி பறவைகள்‌ சரணாலயம்‌ - அறியலூர்‌

வருவர்‌ பறவைகள்‌ சரணாலயம்‌ - நாகபட்டினம்‌

வல்லநாரு வெளி மான்‌ காப்பகம்‌ - தூத்துக்குடி

விராலிமலை பறவைகள்‌ சரணாலயம்‌ - திருச்சி

சாம்பல்‌ நிற மலை அணில்‌
சரணாலயம்‌ - விருதுநகர்‌

18. இந்தியாவின்‌ நீலச்‌ சிலுவை
சங்கம்‌ எசன்னையைச்‌
என்பவரால்‌ உருவாக்கப்‌பட்டது. இவர்‌ இந்திய விமானியும்‌ விலங்குகள்‌ நலனில்‌ அதிக அக்கறை கொண்டு அதில்‌ ஈடுபாட்டோடு பணிபுரிந்தவரும்‌ ஆவார்‌.

19. உயரம்‌ அதிகரிக்க அதிகறிக்க
வளிமண்டலத்திலுள்ள காற்றின்‌ அளவு
குறைகிறது. இதனால்‌ ஆக்ஸிஜனின்‌
அளவும்‌ குறைகிறது. எனவேதான்‌
மலையேற்றம்‌ சசய்பவற்கள்‌ மலையில்‌
ஏறும்போது ஆக்சிஜன்‌ சிலிண்டர்களைக்‌
கொண்டு செல்கிறார்கள்‌.

20. ஹிமாச்சல்‌ பிரதேசத்தில்‌ உள்ள ஜோகிந்தர்‌ நகர்‌ பள்ளத்தாக்கில்‌ உள்ள பிர்‌ பில்லிங்‌ எனும்‌ மலைப்‌ பிரதேசம்‌ பாரா-கிளைடிங்‌ விளையாட்டின்‌ தலைநகரம்‌ என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில்‌ உள்ள ஏலகிரி மலை பாரா கிளைடிங்‌
விளையாட்டிற்கு ஏற்ற இடமாகும்‌.

21. மாசுபாரு எனப்‌ பொருள்படும்‌ "Pollution" எனும்‌ ஆங்கில வாற்த்தை "Polluere" எனும்‌ லத்தீன்‌ வார்த்தையில்‌ இருந்து பெறப்பட்டது. இதற்கு தூய்மைக்‌ கேடு அல்லது அழுக்காக்குதல்‌ என்று பொருள்‌.

21. ஆக்ராவில்‌ அமைந்துள்ள தாஜ்மஹால்‌ முற்றிலும்‌ எவண்மைநிற சலவைக்‌ கற்களால்‌ கட்டப்பட்டது. ஆனால்‌ இது சமீப காலங்களாக மஞ்சள்‌ நிறமாக மாறி வருகிறது. இதற்குக்‌ காரணம்‌ காற்று மாசுபாடு ஆகும்‌. இப்பகுதியில்‌ அமைந்துள்ள தொழிற்சாலைகள்‌ அதிக
அளவிலான மாசுபருத்திகளை காற்றில்‌ வெளியிருகின்றன. ஒவ்‌வொரு நாளும்‌ 2000 மெட்ரிக்‌ டன்‌ கழிவுகள்‌ அந்நகரில்‌ கொட்டப்பருகின்றன

22. குளிர்சாதனப்‌ வட்டி, வர்ணத்‌ தளிப்பான்‌ மற்றும்‌ தியணைப்பான்‌ போன்றவற்றில்‌
உபயோகப்பருத்தப்படும்‌ குளோரோ புளுரோ கார்பன்‌ போன்ற வேதிப்‌ பொருள்கள்‌ வளிமண்டலத்தின்‌ படை அருக்கிலுள்ள ஓசோனின்‌ அளவைக்‌ குறைந்துபோகச்‌ சசய்கின்றன . இது அண்டாற்க்டிகா பகுதியில்‌ உள்ள ஓசோன்‌ படலம்‌ குறைவுபட வழி வகுக்கிறது.

23. தேசிய காசநோய்‌ கட்டுப்பாட்டுத்‌ திட்டம்‌ 1962 இல்‌ உருவாக்கப்‌ பட்டது. ஒவ்வொரு ஆண்ரும்‌ மார்ச்‌ 24 அன்று உலக காசநோய்‌ ஒழிப்பு தினம்‌
அனுசரிக்கப்படுகிறது.




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url