Science Box questions 6th STD term -I | unit 2.விசையும் இயக்கமும்
6 ஆம் வகுப்பு - முதல் பருவம்
2.விசையும் இயக்கமும்
1. இந்தியாவின் பழங்கால வானியலாளர் ஆரிய பட்டா, "எவ்வாறு நீங்கள் ஆற்றில் ஒரு
படகில் செல்லும்போது ஆற்றின் கரையானது உங்களுக்குப் பின்புறம் எதிர்த்திசையில் செல்வது போலத் தோன்றுகிறதோ, அதுபோலவே வானில் உள்ள நட்சத்திரங்களை நாம் காணும்போது அது கிழக்கிலிருந்து மேற்காகச் செல்வதாகத் தோன்றுவதால், நிச்சயம் நமது பூமியானது மேற்கிலிருந்து கிழக்காகத்தானே சுற்ற வேண்டும்" என்று அனுமானித்தார்.
2. பொருட்களின் மீது உயிருள்ள அல்லது உயிரற்ற காரணிகளால் செயல்படுத்தப்படும்
தள்ளுதல் அல்லது இழுத்தலே விசை என அழைக்கப்படுகிறது
3. நேர்க்கோட்டு இயக்கம் - பொருளானாது நேர்க்கோட்டுப் பாதையில் இயங்கும். (எ.கா)
நேர்க்கோட்டுப் பாதையில் நடந்து சென்று கொண்டிருக்கும் மனிதன். தானாக கீழே விழும்
பொருள்
4. தனது பாதையில் தனது திசையைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்கும் (எ.கா.
பந்தினை வீசுதல்)
5. வட்டப்பாதை இயக்கம் - ஒரு பொருள் வட்டப்பாதையில் இயங்கும் (எ.கா. கயிற்றின் ஒரு
முனையில் கல்லினைக் கட்டிச் சுற்றுதல்
6. தற்சுழற்சிய இயக்கம் - ஒரு பொருள் அதன் அச்சினை மையமாகக் கொண்டு இயங்குதல்
(௭.கா. பம்பரத்தின் இயக்கம்)
7. அலைவு இயக்கம் - ஒரு பொருள் ஒரு புள்ளியை மையமாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் முன்னும் பின்னுமாகவோ அல்லது இடம் வலமாகவோ மாறி மாறி
நகர்தல் (எ.கா. தனிஊசல்
8. ஒழுங்கற்ற இயக்கம் - ஒரு ஈயின் இயக்கம் அல்லது மக்கள் நெருக்கம் மிகுந்த தெருவில்
நடந்து செல்லும் மனிதர்களின் இயக்கம்
9.அதிவேகத்தில் இயங்கும் அலைவு இயக்கம் - அலைவானது அதிவேகமாக நடைபெறும் போது நாம் அவ்வியக்கத்தினை அதிர்வுறுதல் என அழைக்கிறோம்.
10. அலைவு இயக்கம் அனைத்துமே கால ஒழுங்கு இயக்கமாக அமையும். ஆனால்
அனைத்துக் கால ஒழுங்கு இயக்கங்களும் அலைவு இயக்கமாகக் காணப்படாது.
11. ஓரலகு காலத்தில் ஒரு பொருள் எவ்வளவு தூரம் கடந்தது என்று கூறுவதே சராசரி வேகமாகும். அதாவது ஒரு பொருளானது 4 தொலைவினை 1 கால இடைவெளியில்
கடந்தால் அதன் சராசரி வேகம் (S) = {கடந்த தொலைவு (d)} / { எடுத்துக்கொண்ட
காலம் (t) = d/dt
12. தரையில் வாழும் விலங்குகளில் சிறுத்தையானது சராசரியாக 112 கிமீ / மணி என்ற வேகத்தில் ஓடும் மிக வேகமான விலங்காகும்.
13. குறிப்பிட்ட கால இடைவெளியில் சீரான வேகத்தில் இயங்கும் பொருளின் இயக்கத்தினை
நாம் சீரான இயக்கம் என்றும், மாறுபட்ட வேகங்களில் இயங்கும் பொருளின்
இயக்கத்தினை நாம் சீரற்ற இயக்கம் என்றும் கூறுகிறோம்.