Search This Blog

Science Box questions 6th STD term -I | unit 1. அளவீடுகள்‌

6 ஆம்‌ வகுப்பு - முதல்‌ பருவம்‌

1. அளவீடுகள்‌

1. பூமியின்‌ பரப்பில்‌ எடை என்பது நிறைக்கு நேர்தகவில்‌ இருக்கும்‌. பூமியை விட நிலவில்‌ ஈர்ப்பு விசை குறைவு என்ற போதிலும்‌ இரண்டிலும்‌ நிறை சமமாகவே இருக்கும்‌. ஆனால்‌ எடை குறையும்‌.

2. நிலவில்‌ ஈர்ப்புவிசை புவியை போல ஆறில்‌ ஒரு பங்கு தான்‌. ஆகவே நிலவில்‌ பொருளின்‌ எடை என்பது பூமியில்‌ உள்ள எடையில்‌ ஆறில்‌ ஒரு பங்கு ஆகும்‌.

3. முற்காலத்தில்‌ மக்கள்‌ பகல்‌ நேரத்தைக்‌ கணக்கிட, மணல்‌ கடிகாரம்‌ மற்றும்‌ சூரியக்கடிகாரத்தைப்‌ பயன்படுத்தி நேரத்தை அளவிட்டனர்‌. தரையில்‌ நடப்பட்ட ஒரு குச்சியின்‌ நிழலினைக்‌ கொண்டு நேரத்தைக்‌ கணக்கிட முடியும்‌.

4. ஒரு சிறிய துளை உள்ள பாத்திரத்தைக்‌ கொண்டு காலத்தைக்‌ கணக்கிட்டனர்‌. நீர்‌ நிரம்பிய ஒரு பெரிய கலனில்‌, துளையுள்ள இப்பாத்திரத்தை வைத்து அது மூழ்கும்‌
நேரத்தைக்‌ கணக்கிட்டனர்‌. பின்‌ இதனைக்‌ கணக்கிடும்‌ கருவியாகப்‌ பயன்படுத்தினர்‌. மேற்கண்ட கடிகாரங்கள்‌ நேரத்தைத்‌ தோராயமாக அளவிட உதவின.

5. நவீன காலத்தில்‌ மின்னணு கடிகாரங்கள்‌, நிறுத்துக்‌ கடிகாரம்‌ போன்ற உபகரணங்கள்‌ நேரத்தைத்‌ துல்லியமாகக்‌ கணக்கிட உதவுகின்றன.

6. ஒடோமீட்டர்‌ என்பது தானியங்கி வாகனங்கள்‌ கடக்கும்‌ தொலைவைக்‌ கணக்கிடூவதற்கு பயன்படுத்தப்படும்‌ ஒரு கருவியாகும்‌.

7. மெட்ரிக்‌ முறை அலகுகள்‌ அல்லது திட்ட அலகுகள்‌, 1790ல்‌ பிரெஞ்சுக்காரர்களால்‌
உருவாக்கப்ட்டது.

8. நீளத்தை அளக்கத்‌ தற்காலத்தில்‌ பயன்படும்‌ அளவுகோல்‌, பதினாறாம்‌ (16) நூற்றாண்டில்‌ வில்லியம்‌ பெட்வெல்‌ என்ற அறிவியல்‌ அறிஞரால்‌ கண்டுபிடிக்கப்பட்டது.

9. பிரான்ஸ்‌ நாட்டின்‌ தலைநகர்‌ பாரீஸில்‌ உள்ள எடைகள்‌ மற்றும்‌ அளவீடுகளுக்கான அனைத்துலக நிறுவனத்தில்‌ பிளாட்டினம்‌ - இரிடியம்‌ உலோகக்‌ கலவையிலான ஒரு
படித்தரமீட்டர்‌ கம்பி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த மீட்டர்‌ கம்பியின்‌ நகல்‌ ஒன்று டில்லியில்‌ உள்ள தேசிய இயற்பியல்‌ ஆய்வகத்தில்‌ வைக்கப்பட்டூள்ளது.

10. 1 கிலோகிராம்‌ என்பது பிரான்ஸில்‌ உள்ள செவ்ரெஸ்‌ என்ற இடத்தில்‌ சர்வதேச எடைகள்‌ மற்றும்‌ அளவீடுகளுக்கான அனைத்துலக நிறுவனத்தால்‌ 1889ல்‌ நிறுவப்பட்ட, பிளாட்டினம்‌ - இரிடியம்‌ உலோகக்‌ கலவையால்‌ ஆன ஒரு உலோக தண்டின்‌ நிறைக்கு சமம்‌.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url