Science Box questions 6th STD term -I | unit 3. நம்மைச்‌ சுற்றியுள்ள பருப்பொருட்கள்‌

6 ஆம்‌ வகுப்பு - முதல்‌ பருவம்‌

3. நம்மைச்‌ சுற்றியுள்ள பருப்பொருட்கள்‌

1. திண்ம, திரவ மற்றும்‌ வாயு நிலைகளைத்‌ தவிர்த்து மேலும்‌ இரண்டு நிலைகள்‌ உள்ளன.

அவை பிளாஸ்மா மற்றும்‌ போஸ்‌ - ஐன்ஸ்டீன்‌ சுருக்கம்‌ ஆகும்‌.

2. பிளாஸ்மா நிலை என்பது பூமியில்‌ உள்ள பருப்பொருளின்‌ பொதுவான நிலை அல்ல.
ஆனால்‌, அது அண்டத்தில்‌ கூடுதலாகக்‌ காணப்படும்‌ ஒரு பொதுவான நிலையாகும்‌.
எடுத்துக்காட்டாக சூரியனும்‌ நட்சத்திர மண்டலமும்‌ சேர்ந்த கலப்பு பிளாஸ்மா நிலை
ஆகும்‌

3. போஸ்‌ - ஐன்ஸ்ட்டீன்‌ சுருக்கம்‌ என்பது மிகக்குறைவான தட்பவெட்ப நிலையில்‌
காணப்படும்‌ வாயு நிலை போன்ற பருப்பொருள்களின்‌ நிலை ஆகும்‌. இது 1925இல்‌
கணிக்கப்பட்டு. 1995ல்‌ உறுதி செய்யப்பட்டது இவ்வகை கடுங்குளிர்‌ முறையில்‌
எந்திரங்களில்‌ பயன்படுகிறது.

4. ஒரு துளி நீரில்‌ ஏறக்குறைய 10“ நீர்‌ துகள்கள்‌ அடங்கியுள்ளது என்பது உனக்கு தெரியுமா?

5. உனது பேனாவால்‌ நீ வைக்கும்‌ ஒரு புள்ளியில்‌ இரண்டு லட்சத்திற்கும்‌ அதிகமான மூலக்கூறுகள்‌ உள்ளது.

6. தங்கத்தின்‌ தூய்மை 'காரட்‌' என்ற அலகால்‌ குறிப்பிடப்படுகிறது. 24 காரட்‌ தங்கம்‌ என்பது தூய நிலையில்‌ உள்ள தங்கமாகக்‌ கருதப்படுகிறது.

7. துணி துவைக்கும்‌ இயந்திரத்தில்‌ மைய விலக்கு விசை தத்துவத்தினைப்‌ பயன்படுத்தி ஈர உடைகளில்‌ இருந்து நீரானது வெளியேற்றப்படுகிறது

8. பிரித்தெடுத்தலை முழுமைப்படுத்துவதற்கென, சில பிரித்தல்‌ முறைகளை இணைத்தும்‌ செயல்படுத்துவதன்‌ மூலம்‌ ஒரு கலவையில்‌ இருந்து பகுதிப்‌ பொருட்களை பிரித்தெடுக்கலாம்‌. உதாரணமாக, நீரில்‌ உள்ள மணலும்‌ உப்பும்‌ கலந்த கலவையினைப்‌ பிரிப்பதற்கு படிய வைத்தல்‌, தெளியவைத்து இறுத்தல்‌, வடிகட்டுதல்‌, ஆவியாக்குதல்‌ மற்றும்‌ குளிரவைத்தல்‌ போன்ற பல முறைகளை வெவ்வேறு படி நிலைகளில்‌ நிகழ்த்த
வேண்டும்‌.

9. பெரும்பாலான இல்லங்களில்‌ நீரில்‌ உள்ள மாசுக்களை நீக்குவதற்காகவும்‌, நீரில்‌ உள்ள
நுண்கிருமிகளை புறஊதா கதிர்களைக்‌ கொண்டு அழிப்பதற்காகவும்‌ வணிக ரீதியான நீரா வடிகட்டிகள்‌ பயன்படுத்தப்படுகின்றன.

10. எதிர்‌ சவ்வூடு பரவல்‌ என்ற முறையில்‌, குடிப்பதற்கென நீரில்‌ உள்ள மாசுக்கள்‌ நீக்கப்பட்டு, சுத்திகரிக்கப்படுகிறது.
Next Post Previous Post