Search This Blog

TNPSC - தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள்

TNPSC -  தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள்


1. அறிவின் நுண்ணிலை வளர்ச்சியே ————-. அறிவியல்

2.பெருவெடிப்புக் கொள்கையின்படி, பேரண்டம் விரிவடைந்து நிற்பதைத் திருவாசகப் பாடல் எவ்வாறு விளக்குகிறது? அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி

3.“உலகம்” என்னும் தமிழ்ச் சொல் ————– என்னும் சொல்லின் அடியாகப் பிறந்தது. உலவு

4. உலவு என்ற சொல்லின் பொருள் என்ன? சுற்றுதல்

5. “ஞாலம்” என்னும் தமிழ்ச் சொல் ————– என்னும் சொல்லின் அடியாகப் பிறந்தது. ஞால்

6. ஞால் என்ற சொல்லின் பொருள் என்ன?
தொங்குதல்

7. வானத்தில் காற்றில்லா பகுதியைத் தமிழர் எவ்வாறு கூறுவர்? வறிது நிலைஇய காயமும்

8. விண்ணியலறிவு பற்றி ”வறிது நிலைஇய காயமும்” என்று கூறும் நூல் எது? புறநானூறு

9.”வலவன் ஏவா வானூர்தி” என்று பழந்தமிழர் எவற்றைக் குறிப்பிடுகின்றனர்? விண்ணில் செலுத்திய வானூர்தி

10. ஓட்டுனர் இல்லாத விமானத்தை ——————— இல் “வலவன் ஏவா வானூர்தி” என்று குறிப்பிடப்படுகிறது.

11.கரும்பைப் பிழிவதற்கு எந்திரம் இருந்ததைப் பதிற்றுப்பத்து எவ்வாறு குறிப்பிடுகிறது? தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த

12. “அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்” என்பது எந்த நூலின் வரிகள்?
பெருங்கதை

13. பெருங்கதையில் வரும் எந்திர யானை கிரேக்கத் தொன்மத்தில் வரும் —————- போருடன் இணைத்துப் பேசப்படும் எந்திரக் குதிரையுடன் ஒத்தது. டிராய்

14.எந்திரக் கிணறு என்பது எதைக் குறிக்கிறது? ஆழ்துளைக் கிணறு

15. சிலப்பதிகாரம் உளர்காண் காதையில் பல்வகை மணிகளைப் பற்றி எவ்வாறு விளக்குகிறது? ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின் இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும்

16. ஐவகை மணிகளும் ——————– தன்மையால் வேறுவேறுப் பெயர்களைக் கொண்டுள்ளன.
ஒளிவிடும்

17.நிறத்தின் அடிப்படையில் —————- என்பர்.
செம்மண்

18. செம்மண் நிலத்தைச் ”செம்புலப் பெயல் நீர் போல” என்று கூறும் நூல்?
குறுந்தொகை

19.————— இன் அடிப்படையில் உவர் நிலம் என்பர். சுவை

20.உவர்நிலம் மிகுந்த நீரைப் பெற்றிருந்தும் பயன்படாது என்பதைப் புறநானூறு எவ்வாறு குறிப்பிடுகிறது? அகல் வயல் பொழிந்தும் உறுமிடத் துதவா உவர் நிலம்

21. தன்மையின் அடிப்படையில் ————— என்பர். களர்நிலம்

22. திருக்குறளில் ”பயவாக் களரனையர் கல்லாதவர்” என்று எதைக் குறிக்கிறது?
எதற்கும் பயன்படாத நிலம்


23.அணுவைப் பிளக்கவும் சேர்க்கவும் முடியும் என்பதை ஒளவை எவ்வாறு குறிப்பிடுகிறார்? அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி

24. “ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்” என்று கூறியவர்?
கம்பன்

25. மழை உணவைத் தந்து உயிரைக் காப்பதால் இவ்வுலக உயிர்களுக்கு ————– ஆகிறது. அமிழ்தம்

26. மழையை அமிழ்தம் என்று கூறியவர்?
திருவள்ளுவர்

27. உடம்பைப் பாதுகாக்க வேண்டிய தேவையை உணர்த்தும் திருமூலரின் வாக்கு யாது? உடம்பார் அழியின் உயிரார் அழிவர்

28. இயற்கை தரும் காய் கனியிலிருந்தே மருந்து கண்டு உண்டனர் என்பதை திருக்குறள் வரி எவ்வாறு உணர்த்துகிறது? மருந்தாகித் தப்பா மரத்தற்றால்

29. பதினெண் சித்தர்கள் வளர்த்த மருத்துவம் ————— ஆயிற்று. சித்த மருத்துவம்

30. உடல் உறுதியாய் இருப்பதற்கு எதன் சமநிலையே காரணமாகும்? வாதம், பித்தம், சீதம்

 31.மருத்துவ அறிவு பற்றி விளக்கும் திருவள்ளுவரின் அதிகாரம் எது?
மருந்து

32. வாதம், பித்தம், சீதம் சமநிலை தவறும் போது —————– உண்டாகும். நோய்


33. உலகில் பின் விளைவுகளற்ற மருத்துவம் ——————- ஆகும். சித்த மருத்துவம்

34. இயற்கை மருத்துவம் என்ற —————— அக்காலத்தில் இருந்திருக்க வேண்டும்.
மருந்தில்லா மருத்துவ முறை

35 . ————– முறைதான் உயிர்கள் தழைத்திருப்பதற்கோர் காரணம்.
நீர்ச்சுழற்சி

36. அகத்தியர், தேரையர், போகர், புலிப்பாணி முதலிய சித்தர்களின் மருத்துவ நூல்கள் தமிழர்களின் ——————- யைப் போக்குகின்றன. உடற்பிணி

37. “மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்” என்னும் திருக்குறள் வரிகள் எதற்கு அரண் சேர்க்கிறது.
மருத்துவ அறிவு

38. மணிமேகலையின் தோழியாகிய சுதமதியின் தந்தையை மாடு முட்டியதால் குடல் சரிய, புத்த துறவி அதனை சரிசெய்த செய்தியை ————— கூறுகிறது. மணிமேகலை

39. அறுவை மருத்துவத்தைப் பற்றி திருவாசகம் எவ்வாறு கூறுகிறது?
புல்லாகிப் பூடாய்

40. ’புல்லாகிப் பூடாய்’ எனத் தொடங்கும் திருவாசக வரிகள் எதனைப் பற்றி விரிவாக கூறுகிறது? பல்வகை உயிர்களின் பரிணாம வளர்ச்சி

41. கண்ணிடந் தப்பிய கண்ணப்பன் வரலாறும் ஊனுக்கு ஊன்’ என்று எந்த மருத்துவத்தைச் சுட்டுகிறது?
அறுவை மருத்துவம்

42. “மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில் கிருமி செருவினில் பிழைத்தும்” என்பது எதைப் பற்றி தெரிவிக்கின்றன? கருவியல் அறிவு
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url