Search This Blog

உணவே மருந்து தொடர்பான வினா விடைகள் !!

உணவே மருந்து தொடர்பான வினா விடைகள் !!

1. அடிப்படை தேவைகளுள் முதன்மையானது? – உணவு

2. தமிழர் மருத்துவத்தில் ——— என்பது அனைத்து நோய்களையும் தீர்க்கக்கூடிய சஞ்சீவி மருந்தாக கருதப்படுகிறது. – உணவு

3. நோய்க்கு முதல் காரணம் எது? – உப்பு

4. ‘மீதூண் விரும்பேல்’ என்று கூறியவர் யார்? – ஒளவையார்

5. பசியின் கொடுமையை ———— என்றது மணிமேகலை காப்பியம். – ‘பசிப்பிணி என்னும் பாவி’

6. ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்று கூறும் நூல்கள் எவை? – புறநாநூறு, மணிமேகலை

7. நம் நாட்டு சமையலுக்கு ———– அரிசியே சிறந்தது. – புழுங்கல்

8. ‘நீரின்றமையாது உலகு’ எனக் கூறியவர்? – வள்ளுவர்

9. முன் உண்ட உணவு செரித்தப்பின்னரே மீண்டும் உணவு உண்டால் மருந்தென வேண்டாவாம் யாகைக்கு என்று கூறியவர்? – திருவள்ளுவர்

10. ‘காலை மாலை உலாவி நிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத்தொட்டுக் கும்பிட்டுக் காலன் ஓடிப்போவேனே’ என்று பாடியவர்? – கவிமணி

11. ‘உடம்பை வளர்த்தேன் உயிரை வளர்த்தேன்’ இது யாருடையக் கூற்று? – திருமூலர்க்கூற்று

12. பசிப்பிணிக்கு உணவே ————. – மருந்து

13. உணவே மருந்தாகும் தன்மையை திருவள்ளுவர் திருக்குறளில் எந்த அதிகாரத்தில் தெளிவாக கூறியுள்ளார்? – மருந்து

14. உணவில் புரதம், கொழுப்பு, மாச்சத்து, கனிமங்கள், நுண்ணூட்டச் சத்துக்கள் சேர்ந்த உணவு? – சமச்சீர் உணவு

15. உடலைக் காத்தலின் தேவையை வலியுறுத்தியவர்? – திருமூலர்

16. ‘அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு’ என்பது ———–. – பழமொழி

17. குருதி தூய்மை பெறுவதற்கும், உடலிலுள்ள கழிவுப்பொருள்கள் வெளியேறுவதற்கும் இன்றியமையாதது எது? – நீர்

18. உணவு உண்ணும்போது இடையில் செய்யக் கூடாதது எது? – நீர் குடிக்கக் கூடாது

19. உணவினை நன்றாக மென்று விழுங்குவதால் வயிற்றினுள் ———– சுரக்கிறது. – உமிழ்நீர்

20. அறுசுவையின் பயன்கள் யாவை?
🗸 இனிப்பு – வளம்
🗸 துவர்ப்பு – ஆற்றல்
🗸 கைப்பு – மென்னை
🗸 கார்ப்பு – உணர்வு
🗸 உவர்ப்பு – தெளிவு
🗸 புளிப்பு – இனிமை
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url