யாழ் - வகை - நரம்புக்கருவி
யாழ் - வகை - நரம்புக்கருவி
வேட்டுவர் இறுகக் கட்டிய தங்கள் வில் நாணில் இருந்து எழும் ஓசையை உணர்ந்தனர் . வில்லைப் போன்ற வளைவு உடையதும் நரம்புகளால் ஆனதும் விரலால் வருடக் கூடியதுமான கருவி ஒன்றை உருவாக்கினார் . இதன் அடிப்படையில் உருவான கருவியே யாழ் ஆகும் . பேரியாழ் , செங்கோட்டியாழ் போன்றவை மிகப் பழமையானவை . யாழின் வகைக்கு ஏற்ப அதில் இருக்கும் நரம்புகளின் எண்ணிக்கை வேறுபடுகிறது . இருபத்தொரு நரம்புகளைக் கொண்டது பேரியாழ் , பத்தொன்பது நரம்புகளைக் கொண்டதாக மீன் வடிவில் அமைந்தது மகரயாழ் , பதினான்கு நரம்புகளைக் கொண்டது சகோடயாழ் . யாழின் வடிவமே மெல்லமெல்ல மாற்றமடைந்து பிற்காலத்தில் வீணையாக உருமாறியது என்பர் .