வீணை: வகை - நரம்புக்கருவி
வீணை: வகை - நரம்புக்கருவி -
யாழ் போன்ற அமைப்பையுடைய நரம்புக்கருவி வீணையாகும் . இஃது ஏழு நரம்புகளைக் கொண்டது . இடக்கை விரல்களால் நரம்புகளை அமுக்கியும் தேய்த்தும் வலக்கை சுண்டுவிரலால் கம்பிகளை மீட்டியும் இசை எழுப்புவர் . இவ்வாறு நரம்புகள் மூலம் எழுப்பப்படும் இசையை அதன் குடம் , தண்டு முதலிய பாகங்கள் பெருக்கி அனுப்புகின்றன . பரிவாதினி என்னும் வீணை பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் வழக்கத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது .