Search This Blog

நூலகம் பற்றிய தகவல்கள்


◆ புகழுக்குரிய aநூலகம் ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்குரியது தஞ்சை சரசுவதி மகால் நூலகம் .

◆  இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ள ஓலைச்சுவடிகள் இங்குப் பாதுகாக்கப்படுகின்றன .

◆  உலகளவில் தமிழ் நூல்கள் அதிகமுள்ள நூலகம் கன்னிமரா நூலகமே . இது சென்னை எழும்பூரில் அமைந்துள்ளது .

◆  இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் என்ற பெருமைக்கு உரியது , திருவனந்தபுரம் நடுவண் நூலகம் .

◆  கொல்கத்தாவில் 1836 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு , 1953 இல் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட தேசிய நூலகமே இந்தியாவின் மிகப் பெரிய நூலகமாகும்.  இது ஆவணக் காப்பக நூலகமாகவும் திகழ்கிறது . 

◆ உலகின் மிகப் பெரிய நூலகம் என்ற பெருமையைத் தாங்கி நிற்பது அமெரிக்காவிலுள்ள லைப்ரரி ஆப் காங்கிரஸ் .
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url