Search This Blog

மின்சாரம் பாய்ந்தால் மாறும் கண்ணாடி!



குவி கண்ணாடி

🍀 சீனாவிலுள்ள ஹேபெய் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (Hebei University of Technology) ஆராய்ச்சியாளர்கள், ஒரு புதுமையான குவி ஆடியை வடிவமைத்துள்ளனர். 

🌾 இது செல்பேசி, புகைப்படக் கருவி போன்றவற்றில் பயன்படுத்த ஏற்றது. வழக்கமான கண்ணாடி ஆடிகளைவிட, இலகுவான எடைகொண்டது.

🍀 ஒரு ஆடிக்குள், டைபியூடைல் அடிபேட் எனப்படும் திரவத்தை நிரப்புவதன் வாயிலாக இந்த புதுமையான குவி ஆடி உருவாக்கப்பட்டுள்ளது.

🌾 இந்த திரவம் எதிர்மறை மின்னணு மூலக்கூறுகளைக் கொண்டது. இந்த மூலக்கூறுகள், நேர் மின்சாரம் பாய்ந்தால் விரிவடையும் தன்மை கொண்டவை.

🍀 எனவே, ஆடியின் குவியத்தை மாற்ற, லேசான மின்சாரம் பயன்படுத்தினால் போதும். மின்சாரம் பாய்ச்சினால், இமைப்பொழுதில் குவியத்தை மாற்றும் கண்ணாடி பலவகைகளில் சிறந்ததாகவே இருக்கும் என புகைப்பட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.


குவி ஆடி :

👉 கோளக ஆடியின் குவிந்த பரப்பில் ஒளி எதிரொளிப்பானது நிகழ்ந்தால் அது குவி ஆடி.

👉 பொருளின் அளவை விட, சிறிய பிம்பத்தை உருவாக்கும் ஆடி, குவி ஆடிகள்.

👉 சாலைகளில் பின்புறம் வரும் வாகனங்களை காண்பதற்கு பயன்படுத்தப்படும் ஆடி, குவி ஆடி.

👉 சாலைகளில் மிகவும் குறுகிய நுட்பமான வளைவுகளில் பயன்படுத்தப்படும் ஆடி, குவி ஆடி.

👉 கட்டிடத்தின் குறுகிய வளைவுகள் உள்ள சுவர்கள் (அ) கூரைகளில் பொருத்தப்பட்டிருக்கும் ஆடி, குவி ஆடி.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url