தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள்
தமிழில் அறிவியல் தொடர்பான செய்திகள்:
★ உலக உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்தியுள்ள நூல் - தொல்காப்பியம்.
★ நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்தும் கலந்தது இவ்வுலகம் என்பதை விளக்கிய நூல் - தொல்காப்பியம்
"நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்."
- தொல்காப்பியம்
____________________________________________
★ கடல் நீர் ஆவியாகி மேகமாகும். பின்னர் மேகம் குளிர்ந்து மழையாகப் பொழியும், இதனை "கார்நாற்பது" என்னும் நூலில்
"கடல் நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி...." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
____________________________________________
★ திரவப் பொருள்களை எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவைச் சுருக்க முடியாது என்ற கருத்து
"ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால் நாழி"
என ஒளவையார் பாடலில் கூறப்பட்டுள்ளது.
____________________________________________
★ போர்க்களத்தில் மார்பில் புண்படுவது இயல்பு. வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி "பதிற்றுப்பத்து" என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.
"நெடு வெள்ளூசி நெடு வசி பரந்தவடு".
- பதிற்றுப்பத்து -
____________________________________________
★ சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை, நரம்பினால் தைத்த செய்தியும் "நற்றிணை" என்னும் நூலில் காணப்படுகிறது.
"கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரதவர்"
- நற்றிணை
____________________________________________
★ தொலைவில் உள்ளப பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும். அறிவியல் அறிஞர் கலீலியோ நிறுவிய கருத்து இது. இக்கருத்து
'திருவள்ளுவமாலை" என்னும் நூலில் "கபிலர்” எழுதியபாடலில் இடம்பெற்றுள்ளது.
"திளனயைவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும்"
- கபிலர்
____________________________________________
◆ தமிழில் பயின்ற அறிவியல் அறிஞர்கள்:
●அப்துல் கலாம்
●மயில்சாமி அண்ணாதுரை
●இஸ்ரோ தலைவர் சிவன்