Search This Blog

இராமன் விளைவு Raman Effect

இராமன் விளைவு Raman Effect


 1921ஆம் ஆண்டு மத்திய தரைக் கடலில் ஒரு கப்பல் இங்கிலாந்தை நோக்கி சென்றுகொண்டிருந்தது. தமிழர் ஒருவர் கப்பலின் மேல் தளத்தில் நின்று கடல் அலைகளை பார்த்துக்கொண்டிருந்தார். திடீரென்று அவரது உள்ளத்தில் கடல் நீர் ஏன் நீல நிறமாக காட்சி அளிக்கிறது என்று வினா எழுந்தது. அவ்வினா அவரை உறங்க விடவில்லை இங்கிலாந்து பயணம் முடிந்து இந்தியா திரும்பினார். பிறகு பாதரச ஆவி விளக்கு பென்சீன் மற்றும் நிறமாலக் காட்டி ஆகியவற்றின் உதவியுடன் தமது ஆய்வை தொடங்கினார்.



 ஆய்வின் முடிவில் 1928 பிப்ரவரி இருபத்தி எட்டாம் நாள் "ராமன் விளைவு" என்னும் தமது கண்டுபிடிப்பை வெளியிட்டார். இக்கண்டுபிடிப்பு இந்தியாவிற்கு அறிவியலுக்கான முதல் நோபல் பரிசை பெற்று தந்தது. அவர் தமது கண்டுபிடிப்பை வெளியிட்ட பிப்ரவரி 28 ஆம் நாளை நாம் ஆண்டுதோறும் தேசிய அறிவியல் நாள் என கொண்டாடி மகிழ்கிறோம் அவர் யார் தெரியுமா அவர்தான் சர்.சி வி.ராமன்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url