Search This Blog

மத்தளம் - வகை - தோல்கருவி

மத்தளம் - வகை - தோல்கருவி 

மத்து என்பது ஓசையின் பெயர் . எல்லாம் தளம் இசைக்கருவிகளுக்கு = அடிப்படை ஆகும் . மத்து + தளம் = மத்தளம் என்று ஆகியது என்கிறார் அடியார்க்கு நல்லார் . மத்தளத்தின் நடுப்பகுதி பெருத்தும் கடைப்பகுதி சிறுத்தும் காணப்படும் . மரத்தால் செய்யப்பட்டிருக்கும் இதன் வாய்ப்பகுதி வளையங்களில் தோல் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும் . இக்கருவி இரண்டு கைகளாலும் இசைக்கப்படுகிறது . ஆகவே இதனை முதற்கருவி என்பர் . தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டில் கோயிலுக்கு நியமிக்கப்பட்ட இசைக்கலைஞர்களுள் கொட்டி மத்தளம் வாசிப்பவர் ஒருவரும் இருந்தார் என்பர் . 

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்த பந்தர்க்கீழ்

-  நாச்சியார் திருமொழி
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url