Search This Blog

கெட்டுப்போன காய்கனி வகை - கெட்டுப்போன காய்க்கும் கனிக்கும் தாவரத்திற்கேற்ப வழங்கும் சொற்கள் :


 சூம்பல் : நுனியில் சுருங்கிய காய் ;

 சிவியல் : சுருங்கிய பழம் ;

 சொத்தை : புழுபூச்சி அரித்த காய் அல்லது கனி ;

 வெம்பல் : சூட்டினால் பழுத்த பிஞ்சு ;

 அளியல் : குளுகுளுத்த பழம் ;

 அழுகல் : குளுகுளுத்து நாறிய பழம் அல்லது காய் ;

 சொண்டு : பதராய்ப் போன மிளகாய் .

கோட்டான் காய் அல்லது கூகைக்காய் : கோட்டான் உட்கார்ந்ததினால் கெட்ட காய் ;

 தேரைக்காய் : தேரை அமர்ந்ததினால் கெட்டகாய் ;

 அல்லிக்காய் : தேரை அமர்ந்ததினால் கெட்ட தேங்காய் ; 

ஒல்லிக்காய் : தென்னையில் கெட்ட காய் .

 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url