குலை வகை - தாவரங்களின் குலை வகைகளைக் குறிப்பதற்கான ( காய்களையோ கனிகளையோ ) சொற்கள் :
கொத்து : அவரை , துவரை முதலியவற்றின் குலை ;
குலை : கொடி முந்திரி போன்றவற்றின் குலை ;
தாறு : வாழைக் குலை ;
கதிர் : கேழ்வரகு , சோளம் முதலியவற்றின் கதிர் ;
அலகு அல்லது குரல் : நெல் , தினை முதலியவற்றின் கதிர் ;
சீப்பு : வாழைத்தாற்றின் பகுதி .