இசைக்கருவிகளின் வகைகள் :
இசைக்கருவிகளின் வகைகள் :
இசைக்கருவிகள் தோல்கருவி , நரம்புக்கருவி , காற்றுக்கருவி , கஞ்சக்கருவி என நான்கு வகைப்படும் .
1.விலங்குகளின் தோலால் மூடப்பட்டுச் செய்யப்படும் கருவிகள் தோல்கருவிகள் எனப்படும் . ( எ.கா. ) முழவு , முரசு
2. நரம்பு அல்லது தந்திகளை உடையவை நரம்புக்கருவிகள் எனப்படும் . ( எ.கா. ) யாழ் , வீணை
3.காற்றைப் பயன்படுத்தி இசைக்கப்படுபவை காற்றுக்கருவிகள் எனப்படும் . ( எ.கா. ) குழல் , சங்கு
4.ஒன்றோடு ஒன்று மோதி இசைக்கப்படுபவை கஞ்சக்கருவிகள் எனப்படும் . ( எ.கா. ) சாலரா , சேகண்டி