Search This Blog

உடுக்கை : வகை - தோல்கருவி

உடுக்கை : வகை -தோல்கருவி ;


உடுக்கை என்பது இடை சுருங்கிய ஒரு கைப்பறை ஆகும் . இதன் உடல் பித்தளையால் ஆனது . வாய்ப்பகுதி ஆட்டுத்தோலால் பொருத்தப்பட்டிருக்கும் . இரு வாய்களையும் இணைக்கும் கயிறுகள் இடையில் கோக்கப்பட்டிருக்கும் . இவற்றின் மீது ஒரு நாடா சுற்றப்பட்டுத் தொங்கும் . வலது வாயின் மீதுதான் அடிப்பர் . அவ்வப்போது இடையின் மீதுள்ள நாடாவை அமுக்குவர் . பெரிய உடுக்கையைத் தவண்டை என்பர் . சிறு உடுக்கையைக் குடுகுடுப்பை என்பர் . தில்லையில் நடனமாடும் நடராசரின் கைகளுள் ஒன்றில் இதனைக் காணலாம் . இறை வழிபாட்டின் போதும் குறிசொல்லும் போதும் இக்கருவி இசைக்கப்படுகிறது .

 "தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம் பயில்வார்"
- சம்பந்தர் தேவாரம் 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url