Search This Blog

தமிழர் இசைக்கருவிகள்

இசை:

          மக்களின் உள்ளத்தில் எழுந்த உணர்ச்சி , குரல் வழியாக அல்லது செயற்கைக் கருவி ஒன்றின் வழியாக வெளிப்பட்டது . இது நகை , அழுகை , வீரம் உள்ளிட்ட ஒன்பது சுவைகளை வெளிப்படுத்தக்கூடிய கலையாகப் பிறந்தது . இக்கலையே இசை எனப்பட்டது . குரல்வழி இசை , கருவிவழி இசை என இசையை இரண்டாகப் பிரிப்பர் .

இசைக்கருவிகள்:

         இசையின் இனிமைக்குத் துணை செய்பவை இசைக் கருவிகள் ஆகும் . காலத் தேவைகள் , சமயச்சடங்குகள் , திருவிழாக்கள் போன்ற பல நிகழ்வுகளின் பொருட்டு பலவிதமான இசைக்கருவிகள் தோன்றி வளர்ச்சிபெற்றன . இசைக்கருவிகள் ரல்இசைக்கு மட்டும் பயன்படுபவை , நாடகத்திற்கு மட்டும் பயன்படுபவை , இரண்டிற்கும் பயன்படுபவை எனப் பலவாகத் தோன்றிக் கிளைத்தன . இசைக்கருவிகளை இசைத்துப் பாடல் பாடுவோர் பாணர் எனப்பட்டனர் . நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணன் சூடான் பாடினி அணியாள் - -புறநானூறு
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url