பறை : வகை - தோல்கருவி
பறை : வகை - தோல்கருவி
விலங்குத் தோலால் இழுத்துக் கட்டப்பட்ட கருவி பறையாகும் . பழங்காலத்தில் செய்திகளைத் தெரிவிக்கக் கோட்பறையை முழக்கினர் . பகைவர்களின் ஆநிரையைக் கவரச் செல்லும்போது ஆகோட்பறையை முழக்குவர் . இக்காலத்தில் இது தப்பு என்னும் பெயரில் வழங்கப்படுகிறது . இதனை முழக்கிக்கொண்டு ஆடும் ஆட்டம் தப்பாட்டம் என்று அழைக்கப்படுகிறது .