தமிழ்ச்சொல் வளம் - தேவநேயப் பாவாணர்
தமிழ் பயிர்வகை சொற்கள் :
1. அடிவகை
2. கிளைப்பிரிவுகள்
3. காய்ந்த அடியும் கிளையும் பெயர்பெறுதல்
4. இலை வகை
5.கொழுந்து வகை
6. பூவின் நிலைகள்
7. பிஞ்சு வகை
8. குலை வகை
9. கெட்டுப்போன காய்கனி வகை
10. பழத்தோல் வகை
11. மணிவகை
12. இளம் பயிர் வகை
நூல் வெளி:
மொழிஞாயிறு என்றழைக்கப்படும் தேவநேயப் பாவாணரின் " சொல்லாய்வுக் கட்டுரைகள் " நூலில் உள்ள தமிழ்ச்சொல் வளம் என்னும் கட்டுரையின் சுருக்கம் பாடமாக இடம்பெற்றுள்ளது . இக்கட்டுரையில் சில விளக்கக் குறிப்புகள் மாணவர்களின் புரிதலுக்காகச் சேர்க்கப்பட்டுள்ளன . பல்வேறு இலக்கணக் கட்டுரைகளையும் மொழியாராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதிய பாவாணர் , தமிழ்ச் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டஇயக்குநராகப் பணியாற்றியவர் ; உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர் .
பாவாணர் , தமிழ்ச்சொல்வளம் கட்டுரையில் வித்துவகை , வேர்வகை , அரிதாள் வகை , காய்ந்த இலைவகை , இலைக்காம்பு வகை , பூமடல் வகை , அரும்பு வகை , பூக்காம்பு வகை , இதழ்வகை , காய்வகை , கனி வகை , உள்ளீட்டு வகை , தாவரக் கழிவு வகை , விதைத்தோல் வகை , பதர் வகை , பயிர் வகை , கொடி வகை , மர வகை , கரும்பு வகை , காய்ந்த பயிர் வகை , வெட்டிய விறகுத்துண்டு வகை , மரப்பட்டை வகை , பயிர்ச்செறிவு வகை , நிலத்தின் தொகுப்பு வகை , செய் வகை , நில வகை , நன்செய் வகை , வேலி வகை , காட்டு வகை ஆகியவற்றின் சொல்வளங்களையும் விளக்கியுள்ளார்.