அடி வகை - ஒரு தாவரத்தின் அடிப்பகுதியைக் குறிப்பதற்கான சொற்கள் .
தாள் : நெல் , கேழ்வரகு முதலியவற்றின் அடி
தண்டு : கீரை , வாழை முதலியவற்றின் அடி
கோல் : நெட்டி , மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடி
தூறு : குத்துச்செடி , புதர் முதலியவற்றின் அடி
தட்டு அல்லது தட்டை : கம்பு , சோளம் முதலியவற்றின் அடி
கழி : கரும்பின் அடி
கழை : மூங்கிலின் அடி
அடி : புளி , வேம்பு முதலியவற்றின் அடி .