Search This Blog

8th std - தமிழ் - சொல்லும் பொருளும் - பொருத்தமான பொருளை தேர்வு செய்தல் : பொதுத்தமிழ் - பகுதி - அ - இலக்கணம் -

8th சொல்லும் பொருளும்

 தமிழ்மொழி வாழ்த்து:

1. நிரந்தரம்‌ - காலம்‌ முழுமையும்‌
2. வைப்பு - நிலப்பகுதி
3. சூழ்கலி - சூழ்ந்துள்ள அறியாமை இருள்‌
4. வண்மொழி - வளமிக்க மொழி
5. இசை - புகழ்‌
6. தொல்லை - பழமை , துன்பம்‌

தமிழ்மொழி மரபு:
7. விசும்பு - வானம்‌
8. மயக்கம்‌ - கலவை
9. இருதிணை - உயர்திணை, அஃறிணை
10. வழாஅமை - தவறாமை
11. ஐம்பால்‌ - ஆண்பால்‌, பெண்பால்‌, பலர்பால்‌, ஒன்றன்பால்‌,
பலவின்பால்‌ மரபு - வழக்கம்‌
12. திரிதல்‌ - மாறுபடுதல்‌
13. செய்யுள்‌ - பாட்டு
14. தழாஅல்‌ - தழுவுதல்‌ (யயன்படுத்துதல்‌)

ஓடை:
15. தூண்டுதல்‌ - ஆர்வம்‌ கொள்ளுதல்‌
16. ஈரம்‌ - இரக்கம்‌
17. முழவு - இசைக்கருவி
18. நன்செய்‌ - நிறைந்த நீர்‌ வளத்தோடு பயிர்கள்‌ விளையும்‌ நிலம்‌
19. புன்செய்‌ - குறைந்த நீரால்‌ பயிர்கள்‌ விளையும்‌ நிலம்‌
20. வள்ளைப்பாட்டு - நெல்குத்தும்‌ போது பாடப்படும்‌ பாடல்‌
21. பயிலுதல்‌ - படித்தல்‌
22. நாணம்‌ - வெட்கம்‌
23. செஞ்சொல்‌ - திருந்திய சொல்‌

கோணக்காத்துப்‌ பாட்டு:
24. முகில்‌ - மேகம்‌
25. வின்னம்‌ - சேதம்‌
26. கெடிகலங்கி - மிக வருந்தி
27. வாகு - சரியாக
28. சம்பிரமுடன்‌ - முறையாக
29. காலன்‌ - எமன்‌
30. சேகரம்‌ - கூட்டம்‌
31. மெத்த - மிகவும்‌
32. காங்கேய நாடு - கொங்குமண்டலத்தின்‌ 24 நாடுகளுள்‌ ஒன்று.

நோயும்‌ மருந்தும்‌:

33. தீர்வன - நீங்குபவை
34. உவசமம்‌ - அடங்கி இருத்தல்‌
35. நிழல்‌ இகழும்‌ - ஒளிபொருந்திய
36. பேர்தற்கு - அகற்றுவதற்கு
37. திரியோகமருந்து - மூன்று யோகமருந்து
38. தெளிவு - நற்காட்சி
39. திறத்தன - தன்மையுடையன
40. கூற்றவா - பிரிவுகளாக
41. பூணாய்‌ - அணிகலன்களை அணிந்தவளே
42. பிணி - துன்பம்‌
43. ஓர்தல்‌ - நல்லறிவு
44. பிறவார்‌ - பிறக்கமாட்டார்‌

வருமுன்‌ காப்போம்‌:
45. நித்தம்‌ நித்தம்‌ - நாள்தோறும்‌
46. மட்டு - அளவு
47. சுண்ட - நன்கு
48. வையம்‌ - உலகம்‌
49. பேணுவையேல்‌ - பாதுகாத்தால்‌
50. திட்டுமுட்டு - தடுமாற்றம்‌

கல்வி அழகே அழகு:
51. கலன்‌ - அணிகலன்‌
52. முற்ற - ஓளிர
புத்தியைத்‌ தீட்டு
53. தடம்‌ - அடையாளம்‌
54. அகம்பாவம்‌ - செருக்கு

திருக்கேதாரம்‌:
55. பண்‌ - இசை
56. கனகச்சுனை - பொன்‌ வண்ண நீர்நிலை
57. மதவேழங்கள்‌ - மத யானைகள்‌
58. முரலும்‌ - முழங்கும்‌
59. பழவெய்‌ - முதிர்ந்த மூங்கில்‌

பாடறித்து ஒழுகுதல்‌:
60. அலந்தவர்‌ - வறியவர்‌
61. செறாஅமை - வெறுக்காமை
62. நோன்றல்‌ - பொறுத்தல்‌
63. போற்றார்‌ - பகைவர்‌
64. கிளை - உறவினர்‌
65. பேதையார்‌ - அறிவற்றவர்‌
66. மறாஅமை - மறவாமை
67. பொறை - பொறுமை

வளம்‌ பெருகுக:
68. வாரி - வருவாய்‌
6. எஞ்சாமை - குறைவின்றி
70. முட்டாது - தட்டுப்பாடின்றி
71. ஒட்டாது - வாட்டம்‌ இன்றி
72. வைகுக - தங்குக
73. ஓதை - ஓசை
74. வெரீஇ - அஞ்சி
75. யாணர்‌ - புதுவருவாய்‌

படை வேழம்‌:
76. மறலி - காலன்‌
77. கரி.- யானை
78. தூறு - புதர்‌
79. அருவர்‌ - தமிழர்‌
80. உடன்றன - சினந்த எழுந்தன
81. வழிவர்‌ - நழுவி ஓடுவர்‌
82. பிலம்‌ - மலைக்குகை
83. மண்டுதல்‌ - நெருங்குதல்‌
84. இறைஞ்சினர்‌ - வணங்கினர்‌
85. முழை - மலைக்குகை

விடுதலைத்‌ திருநாள்‌:
86. சீவன்‌ - உயிர்‌
87. சத்தியம்‌ - உண்மை
88. ஆனந்த தரிசனம்‌ - மகிழ்வான காட்சி
89. வையம்‌ - உலகம்‌
90. சபதம்‌ - சூளுரை
91. மோகித்து - விரும்பி

ஒன்றே குலம்‌:
92. நமன்‌ - எமன்‌
93. சித்தம்‌ - உள்ளம்‌
94. நம்பர்‌ - அடியார்‌
95. படமாடக்‌ கோயில்‌ - படங்கள்‌ அமைந்த மாடங்களையுடைய
கோயில்‌ நாணாமே - கூசாமல்‌
96. உய்ம்மின்‌ - ஈடேறுங்கள்‌
97. ஈயில்‌ - வழங்கினால்‌

மெய்ஞ்ஞான ஒளி:
98. பகராய்‌ - தருவாய்‌
99. ஆனந்த வெள்ளம்‌ - இன்பப்பெருக்கு
100. பராபரம்‌ - மேலான பொருள்‌
101. அறுத்தவருக்கு - நீக்கியவர்க்கு

உயிர்க்குணங்கள்‌:
102. நிறை - மேன்மை
103. பொறை - பொறுமை
104. பொச்சாப்பு - சோர்வு
105. மையல்‌ - விருப்பம்‌
106. ஓர்ப்பு - ஆராய்ந்து தெளிதல்‌
107. அழுக்காறு - பொறாமை
108. மதம்‌ - கொள்கை
109. இகல்‌ - பகை
110. மன்னும்‌ - நிலைபெற்ற




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url