மழையை எவ்வாறு அளக்கிறார்கள்?
மழையை எவ்வாறு அளக்கிறார்கள்?
🌌 வானிலை செய்திகள் கேட்டிருப்பீர்கள்.. கடந்த 24 மணி நேரத்தில் இங்கு 500 மில்லி மீட்டர் மழை.. அங்கு 300 மில்லி மீட்டர் மழை என்று கூறி கேட்டு இருப்போம்.
🌌 தண்ணீர் என்பது திரவம்.. அதை லிட்டர் அளவில்தானே குறிப்பிட வேண்டும்? ஏன் மீட்டர் அளவில் சொல்கிறார்கள்? என்று யோசித்திருக்கிறீர்களா?
🌌 மேலும் மழையை எப்படி அளக்கிறார்கள்? என்கிற சந்தேகமும் உங்களுக்கு தோன்றியிருக்கிறதா? அவை எவ்வாறு அளவிடப்படுகிறது என்பது குறித்து இப்பகுதியில் பார்க்கலாம்..
எவ்வாறு அளக்கப்படுகிறது?
🌼 வானிலை ஆராய்ச்சி மையங்களில் "Rain gauge" என்று கூறப்படும் மழை மானி கருவி இருக்கும். இதைப் பயன்படுத்தித்தான் மழையை அளந்து, 'இத்தனை மில்லி மீட்டர் மழை பெய்தது" என்று சொல்கிறார்கள்.
🌽 ஒரு சதுர மீட்டருக்கு, 24 மணிநேர கால அளவில் எவ்வளவு மழை பொழிந்திருக்கிறது என்பதை அதன் மூலம் அறிவார்கள். அதை வைத்து ஒரு குறிப்பிட்ட பகுதியில் எவ்வளவு மழை பெய்தது என்று கணக்கிடுவார்கள்.
🌼 ஒரு மில்லி மீட்டர் மழை என்பது, ஒரு சதுர மீட்டருக்கு 1 லிட்டர் என்பதற்குச் சமம். எனவே, 10 மில்லி மீட்டர் மழை என்று பதிவானால், அதை 10 லிட்டர்/சதுர மீட்டர் என்று எடுத்துகொள்ள வேண்டும்.
🌽 தற்போது பல வகையான தானியங்கி மழை மானிகள் கிடைக்கின்றன. அது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதிவான மழை அளவை குறித்து தகவல் தந்துவிடும்.
🌼 இது கொஞ்சமாகப் பெய்யும் மழையை அளந்து பார்க்க உதவும். பாட்டில் நிரம்பி வழியும் அளவுக்கு மழை பெய்தால் என்ன செய்வது என்று கேட்டால்? வானிலை ஆராய்ச்சி மையம் சொல்வதை, செய்திகளில் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியதுதான்.
நாம் எப்படி மழையை அளந்து பார்க்கலாம்?
📏 ஒரு கண்ணாடி பாட்டிலை எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த பாட்டிலின் அடிப்பாக விட்டம் என்ன அளவு என்று பாருங்கள். அதே அளவு விட்டத்தை வாயாகக் கொண்ட புனல் (Funnel) ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். புனலை பாட்டிலின் மேலே பொருத்தி வைக்க வேண்டும்.
📐 இதை வெட்டவெளியான ஓரிடத்தில் பெய்யும் மழை நீர் தடை இல்லாமல் விழும்படியாக வைக்க வேண்டும். உங்கள் வீட்டு மொட்டை மாடி வசதியாக இருக்கலாம். மழை பெய்யும்போது மழைமானி அசையக்கூடாது. கீழே விழுந்துவிடக்கூடாது. அப்படி வைக்க வேண்டும்.
📏 24 மணிநேர கால அளவு வரை மழை நீர் மழைமானியில் விழும்படி இருக்கட்டும். அதன் பிறகு, அடிக்குச்சியால் (Scale) மழைமானியில் விழுந்த நீரின் அளவை அளக்கவும். எத்தனை மில்லி மீட்டர் இருக்கிறதோ அதுவே அந்தப் பகுதியில் பெய்த மழையின் அளவு ஆகும்.