அறியாத தகவல்கள்
அறியாத தகவல்கள்
* ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியை உருவாக்க 44 ஆண்டுகள் ஆனது.
* சில சூப்பர் கம்ப்யூட்டர்கள் ஒரே வினாடியில் 3.6 கோடி செயல்களைச் செய்யும் திறன் கொண்டவை!
* ஜப்பானிலுள்ள ஒரு சுரங்கப்பாதையில் சாலை, ரயில் என இருவகை போக்குவரத்துமே உண்டு. மொத்த நீளம் 54 கிலோ மீட்டர்!
* சுவிட்சர்லாந்தில் பாலாடைக்கட்டிகள் துளைகளுடன் கூடிய சக்கரங்கள் போல தயாரிக்கப்படுகின்றன. இந்த சுவிஸ் சீஸ் 100 கிலோ எடையுள்ள சக்கரங்களாகவே ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
* சில ஜெராக்ஸ் இயந்திரங்கள் ஒரே வினாடியில் இரண்டு நகல்களை வெளித் தள்ளும் அளவு வேகம் கொண்டவை.
* கடிகாரங்களில் உள்ள ஸ்க்ரூக்கள் மிக மிகச் சிறியவை. நம் உள்ளங்கையிலேயே 30 ஆயிரம் ஸ்க்ரூக்களை ஏந்திவிடலாம்!
* 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பீர் பானம் தயாரிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள், பாபிலோனின் பண்டைய கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.
* ஃபிலிம் பயன்படுத்தப்பட்ட காலத்தில், புகைப்படத் துறை ஆபரணக் கடைகள், நாணயத் தயாரிப்புத் துறையை விடவும் அதிக வெள்ளியைப் பயன்படுத்தியது.
* தேநீரில் 2 ஆயிரத்துக்கும் அதிக வெவ்வேறு விதமான கலப்பு வகைகள் (பிளெண்ட்) உள்ளன.
* பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலும் சுதந்திர தேவி சிலை (லிபர்டி) உள்ளது.