நீரில் பசளை உப்பை இட அது குளிர்ச்சியாய் இருத்தல் ஏன்?

நீரில் பசளை உப்பை இட அது குளிர்ச்சியாய் இருத்தல் ஏன்?

🌟 சில பொருட்களை நீரினுள் இட அவை வெப்பத்தை வெளிவிடும். ஆனால், ஒரு சில பொருட்களை நீரினுள் இட்டால் வெப்பத்தை உறிஞ்சும். உதாரணமாக, நீரினுள் அமோனியம் சல்பேட் (Ammonium sulfate) அல்லது பொட்டாசியம் அயோடைடு (Potassium iodide) இட்டால் அது கரையும் பொழுது வெப்பசக்தி உறிஞ்சப்படும்.

🌟 இதனால் அது கரையும் பாத்திரத்தின் வெளிப்பக்கத்தை தொட்டுப் பார்த்தால் குளிர்ச்சியாக இருக்கும். இவ்வாறே சோதனைக்குழாய் ஒன்றினுள் சிறிதளவு நீரை எடுத்து அதனுள் பசளை உப்பு சிறிதளவை இட்டு பார்த்தால் அதுவும் குளிரும்.
Next Post Previous Post