Search This Blog

கும்பகோணம் வெற்றிலை - புவிசார் குறியீடு



கும்பகோணம் வெற்றிலை - புவிசார் குறியீடு

கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு பெற தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் விண்ணப்பித்துள்ளது.

புவிசார் குறியீடின் முக்கியத்துவம் :

🍃 தனித்தன்மையோடு, குறிப்பிட்ட பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு சட்டப் பாதுகாப்பும் சந்தை மதிப்பும் ஏற்படுத்தும் வகையில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. 

🌴 புவிசார் குறியீடு பெறும் பொருட்களை, அதே பெயரில் வேறு இடத்தில் உற்பத்தி செய்ய முடியாது. விற்பனை செய்யவும் கூடாது என்கிற சட்டப் பாதுகாப்பு கிடைக்கிறது.

🍃 புவிசார் குறியீடு பெறுவதற்காக விண்ணப்பிக்கும் போது, இதற்கான அட்டவணை இந்த பொருள் எந்த ஊரில் அல்லது வட்டாரத்தில் அல்லது மாவட்டம் முழுவதும் தயாரிக்கப்படுகிறது என்று ஆராய்ந்து அந்த ஊரின் பெயர் மற்றும் வட்டாரம், மாவட்டம், மாநிலம் பெயர் குறிப்பிட்டு அதற்கான வரைபடமும் வைக்கப்படும்.

🌴 அந்த ஊர் அல்லது வட்டாரங்களில் மட்டும்தான் இந்த பெயரை பயன்படுத்தி தயாரித்து விற்பனை செய்ய முடியும். இதன்மூலம் பொருள் தயாரிக்கும் உரிமையாளர்கள் ஒரு வட்டத்திற்குள் வருவார்கள்.

🍃 அவர்களால் தயாரிக்கப்படும் பொருட்களின் உறுதித்தன்மை, தரம் அங்கு மட்டும்தான் கிடைக்கும் என்கிற நம்பகத்தன்மை ஏற்படும்.

🌴 இந்தியாவில் புவிசார் குறியீடுகள் சட்டம் (பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம்) 1999 நிறைவேற்றப்பட்டு, கடந்த 2003ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.

🍃 அதன்படி, மதுரை மல்லி, திண்டுக்கல் பூட்டு, ஈரோடு மஞ்சள், பத்தமடை பாய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு தமிழ்நாட்டில் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

🌴 உலக வர்த்தக உடன்படிக்கையில் 156 நாடுகள் உறுப்பினர் நாடுகளாக உள்ளன. இந்த உறுப்பு நாடுகள் அனைத்தும் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை அங்கீகாரம் செய்கின்றன.

🍃 குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் விவசாயம் சார்ந்த பொருட்களை மற்றும் உணவு சார்ந்த பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்குகிறது.

🌴 அந்த வகையில் கும்பகோணம் வெற்றிலை ஐரோப்பிய யூனியனுக்கு ஏற்றுமதி செய்யவும் வழிபிறக்கும் என்கிறார் தமிழ்நாடு அரசின் புவிசார் குறியீடு பொறுப்பு அலுவலர், புவிசார் குறியீடு அட்டர்னியாக உள்ள வழக்குரைஞர் சஞ்சய் காந்தி. 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url