Search This Blog

வானத்தில் மேகங்கள் வெவ்வேறு வடிவங்களில் தோன்றுவது ஏன்?

வானத்தில் மேகங்கள் வெவ்வேறு வடிவங்களில் தோன்றுவது ஏன்?


🌟 வானம் நீலமாக தோன்றும். அதன் கீழ் மேகங்கள் வெவ்வேறு பக்கத்தில் அல்லது வெவ்வேறு நேரத்தில், வெவ்வேறு வடிவத்திலும், நிறத்திலும் தோன்றுகின்றன.

💭 வளிமண்டலத்திலுள்ள நீராவி, காற்றை விடப் பாரம் (அடர்த்தி) குறைந்த வாயு என்பதால் அது வளிமண்டலத்தில் மேல் நோக்கி செல்லும்.

🌟 மேலே சென்று குளிர்ச்சி அடைந்து அதனால் நெருக்கமாகி சிறு நீர்த் துளிகள் (நீர்த்திவலைகள்) ஆகும்.

💭 பின் அவை வளிமண்டலத்திலுள்ள சிறு சிறு தூசு துணிக்கைகளின் மேல் ஒடுங்கி படியும் நீர்த்திவலைகளாகின்றன.

🌟 இவ்வாறு வளிமண்டலத்தின் மேற்பகுதியில் உண்டான சிறு நீர்த்திவலைகளின் சேர்க்கையே மேகம் என்பதால் அவை பல வடிவங்களில் தோன்றுகின்றன.

மழை வரும்முன் புழுக்கமாக இருத்தல் ஏன்?


🍒 மழை வரும்முன் வானத்தில் கருமேகங்கள் அதிகமாக இருக்கும். இம்மேகங்கள் பூமியின் மேற்பரப்புக்கு அண்மையில் இருக்கும்.

☔ நிலத்தில் பட்டுத் தெறித்து மேல்நோக்கி காற்றில் செல்லும் சூரிய வெப்பம் இந்த கருமேகங்களில் பட்டுத் தெறித்து மீண்டும் பூமியை நோக்கி வரும்.

🍒 எனவே கருமேகங்களின் வழியாக சூரிய ஒளியும், வெப்பமும் பூமியை வந்தடைவதில்லை என்பதால் வெயிலின்றி மந்தமாக இருக்கும்.

☔ இருப்பினும் மேலே சென்ற வெப்பம் கருமேகங்களை தாண்டி அப்பால் செல்ல முடியாது. அவை தெறித்து வருவதால் அதிக வெப்பமாகி புழுக்கமாய் இருக்கும் மற்றும் வியர்வையை உண்டாக்கும்.

🍒 இவ்வாறு புழுக்கமாய் இருந்தால் மழை வரும் என்பர். கருமேகங்களில் இருந்து மழை உண்டாகாமல் அவை காற்றினால் எடுத்துச் செல்லப்பட்டால் மழை பெய்யாமலும் இருக்கக்கூடும்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url