கூரான பொருள் குத்துவது ஏன்?
கூரான பொருள் குத்துவது ஏன்?
📍 துணியின் வழியாகவோ, அட்டையின் வழியாகவோ கூரான ஊசியை எளிதாகச் செலுத்த முடிகிறது.
📌 ஆனால் மழுங்கலான ஆணியைச் செலுத்துவது மிகவும் கடினமாயிருக்கிறதே, ஏன்? கூரான ஊசியைச் செலுத்தும் போது முழுச் சக்தியும் அதன் முனை மீது செலுத்தப்படுகிறது.
📍 ஆனால் மழுங்கலான ஆணியின் முனையின் பரப்பு அதிகமாயிருப்பதால் அதே சக்தி அதிகப் பரப்பின் மீது செயல்பட வேண்டியிருக்கிறது.
📌 எனவே, அதே சக்தியைச் செலுத்தினாலும், மழுங்கலான ஆணியால் எளிதாக துளைத்துச் செல்ல முடிவதில்லை.
📍 அழுத்தத்தைக் குறிக்கும் போது சக்தியின் அளவை மட்டுமின்றி, அது செயல்படும் பரப்பின் அளவையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
📌 அது போலவே ஒரு சக்தியின் செயல், அது ஒரு சதுர சென்டி மீட்டர் மீது பரவியுள்ளதா, ஒரு சதுர மில்லி மீட்டரில் நூறில் ஒரு பங்குப் பரப்பின் மீது பரவியுள்ளதா என்பதைச் சார்ந்திருக்கிறது.