பனிச்சறுக்கு மட்டைகள் நம்மை வெண்பனியின் மீது எளிதில் எடுத்துச் செல்கின்றன. அவை இல்லாவிட்டால் நாம் பனியினுள் அழுந்திவிடுவோம். ஏன்?
பனிச்சறுக்கு மட்டைகள் நம்மை வெண்பனியின் மீது எளிதில் எடுத்துச் செல்கின்றன. அவை இல்லாவிட்டால் நாம் பனியினுள் அழுந்திவிடுவோம். ஏன்?
🌽 பனிச்சறுக்கு மட்டைகளை அணிந்து கொள்ளும் போது உடல் எடை அதிகப் பரப்பின் மீது பரவியுள்ளது.
🌽 மட்டைகளின் பரப்பு, நமது உள்ளங்கால்களின் பரப்பை விட 20 மடங்கு அதிகமாயிருக்கிறது என்று வைத்துக் கொண்டால், மட்டைகள் அணிந்திருக்கும் போது வெண்பனியின் மீது நாம் செலுத்தும் அழுத்தம், அவை இல்லாமல் இருக்கும் போது செலுத்தும் அழுத்தத்தை விட 20 மடங்கு குறைவாக இருக்கும்.
🌽 ஏற்கனவே கூறியபடி, பனிச்சறுக்கு மட்டைகளை நாம் அணிந்து கொண்டால் தான் வெண்பனி நம்மைத் தாங்கும். அவை இல்லாவிட்டால், பனியினுள் நாம் புதைய வேண்டியது தான்.